மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

விதண்டா வாதமாக நினைக்க வேண்டாம். சில தெளிவுகளுக்காகவே இந்த கேள்வி. ஊறுகாயின் மணமும் சுவையும் நமக்கு தெரிவதால் மட்டுமே நம் நாக்கில் எச்சில் ஊறுவதாக கருதுகிறேன். எனக்கு ஊறிய எச்சில் 10 முறை ஊறுகாய் என கூறியும் என் மகள் நாவில் ஊறவில்லையே ஏன்?

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

வணக்கம் ஐயா.... நலமா??? நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.... உங்கள் கட்டுரை படித்தேன்.... சந்தோஷம்.... இந்த இடத்தில் என்னை பற்றி சில வார்த்தைகள் சொல்லி கொள்கிறேன்.... நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என்பதை மிக உறுதியாக நம்பும் ஒரு சாதாரண மனிதன்.... அதே சமயத்தில் மனதால் மட்டும் இறை வழிப்பாட்டை விரும்பாதவன், மனதாலும் உடலாலும் செயல்களாலும் அது இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.... ஆன்மீகவாதியால் மட்டுமே எல்லாம் சாத்தியம் என்று நம்புகிறவன்... நாத்திகவாதிகளை ஒதுக்கா விட்டாலும், அவர்கள் என்னுடைய நம்பிக்கைகளை காயப்படுத்தும் போது பதிலுக்கு நடைமுறை கருத்துக்களால் அவர்கள் மூக்கை உடைக்க தயங்காதவன்.... சரி இப்போதைக்கு இது போதும்....

//மந்திரங்கள் இறையாற்றலின் ஒலி வடிவம்// நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.... இந்துக்கள் மந்திர உச்சாடனங்கள் செய்வதும், கிறிஸ்துவர்கள் பிரேயர் செய்வதும், முஸ்லிம்கள் நமாஸ் செய்வதும் எல்லாம் இது குறித்து வருபவை தான்...

உங்கள் கருத்துக்கள் நேர்த்தியாக இருக்கிறது.... இருந்தாலும் ஐயா ஒரு சிறு விண்ணப்பம்... கொஞ்சம் கொஞ்சமாக விளக்கி புரிய வைத்தால் எல்லாருக்கும் பயன் அளிக்கும்.... ஒரே நாளில் இத்தனை விசயங்களை கிரகித்து கொள்வது கடினம்... உங்களுக்கு தெரியாதது அல்ல.... நெறைய விஷயங்கள் சொல்லும் போது அங்கு கேள்விகள் எழலாம்.... மாற்று கருத்துக்களும் இருக்கலாம்.... ஆனால் அந்த மாற்று கருத்துக்களை விடுபட வைக்க கால அவகாசம் தேவை இல்லையா??? கேள்விகள் எப்போதும் எழுந்து கொண்டே இருக்க வேண்டும்... கேள்வி கேக்க தெரியாதவன் கற்று கொள்வது குறைவு... அப்படி தானே?

சரி உங்கள் பதில் மொழியை எதிர் பார்த்து இருக்கிறேன்....

உங்கள் அருண்

முதலில் அனைத்து உறுப்பினருக்கும் நன்றி,

1. அன்பு சகோதரி அதிரா,

அர்த்த சாஸ்திரம் : சாணக்கியர் என்கிற கௌடில்யர் என்பவர் எழுதினார். யாரவது நினைத்ததை சாதித்தால் நாம் என்ன சொல்வொம் "அவன் பெரிய சாணக்கியன்". அதில் ராஜ நீதி, ராஜ தர்மம், குடும்ப நீதி, குடும்ப தர்மம் ஆகிய அனைத்தும் சொல்லபட்டு இருகிறது.

தமிழில் ஸ்ரீ அனந்த நாச்சியாரம்மா மொழி பெயர்த்து, இந்து பப்ளிகேஷன்ஸ் பதித்து இருக்கிறார்கள்.

விஞ்ஞான பூர்வமாக ஒத்து கொண்ட விஷயம்: "பேரா சைக்காலஜி" "Para psychology"ல் நடப்பதை முன் கூட்டி சொல்வது "ப்ரிகாக்னிஷன் precognition". எப்போதோ நடந்ததை சொல்வது "கிளையர்வொயன்ஸ் clairvoyance", பிறர் மனதில் இருப்பதை சொல்வது "டெலிபதி Telepathy". அகலிகையை கல் ஆக்கினாரே அது "டெலி கைனசிஸ் அல்லது சைகோகைனசிஸ் Telekinesis or Psychokinesis"

இனிப்பு,வாயு,பித்தம்,மகிஷ்சி: சாப்பாட்டில் உப்பு குறைந்தால் சகித்து கொள்ளாம், அதிகமானல் ??? அது போலதான் எதுவாக இருந்தாலும் அளவோடு வைத்து கொள்ள வேண்டும்.

2. சகோதரி சுரேஜினி,

நிங்கள் என்ன நினைகிறீர்களோ அதுவாகவே ஆகிறிர்கள். நல்லதையெ நினைத்தால் மட்டும் போதும்.மந்திரபிரயோகத்திற்கு உடல் வலிமை அவசியம் அதனால் ஸ்லோகங்கள் சொன்னால் மட்டும் போதும். அபிமன்யு சக்ரவியூகத்தை உடைக்க கற்று கொண்டது அவன் தாயின் வயிற்றில்தான்.(மகாபாரதம்) ஜெர்மானியர் இப்போது தானே கண்டு பிடித்து இருக்கிறார்கள். அதனால் எதாவது ஸ்லோகத்தை சிடியில் போட்டு கேளுங்கள்.

3. சகோதரி இஷானி,

நன்றி //விதண்டா வாதமாக நினைக்க வேண்டாம்// ஏதும் கேட்கவில்லையே பதில்தானே சொல்லீருகிறீர்கள். அதாவது குழந்தைக்கு நாள் ஆகஆக தானே "ஊறுகாய்" என்று சொன்னால் எச்சில் ஊறும் அது போல் மந்திரங்களும் சொல்ல சொல்லதான் பலன்.(சில மந்திரங்கள் பல கோடி தடவை சொன்ன பிறகுதான் பலன் கிடைக்கும் - திருமணம் ஆகி 10 மாதம் பொறுத்துதானே குழந்தை பிறக்கும் அதனல் அவசர படகூடாது - பொறுத்தால் சல்லடையில் கூட தண்ணீர் எடுத்து செல்லாம் - எப்படி ???)

4. அன்புள்ள அருண்,

நன்றி. திரைப்பட வெளீட்டுக்கு முன் வரும் "ட்ரெய்லர்" மாதிரிதான் இதுவும்.
மந்திரங்களுக்கு மதம் கிடையாது என்பது என் நம்பிக்கை (நம்பிக்கைதானே வாழ்கை) ஒளியும், ஓலியும் இல்லாத ஒரு உலகத்தை கற்பனை செய்து பாருங்கள் அப்போது நமது அறிவு என்ன செய்யும். நமது அறிவு என்பதே ஓளி, ஓலியில் இருந்து வரும் மின்காந்த அதிர்வுகளின் மொழி பெயர்ப்பு எனலாம். இந்த மதங்கள் எல்லாம் மனித்தனால் இடையில் உருவாக்கப்பட்டது. உண்மையான ஆன்மிகவாதி, அருள்பேராற்றலினால் படைக்கப்பட்ட ஒளி, ஓலியைத்தான் இறைவன் என்பான்.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இப்ப தான் ஏதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு. நடத்துங்கோ, நடத்துங்கோ :)

இப்படிக்கு,
சந்தனா

அன்பு சகோதரி திருமதி சேகர்

நன்றி

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் விழ கூடாது.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி சுரேஜினி

உங்களுக்கு எதும் ஆட்சேபனை இல்லை என்றால், இந்த ஸ்லோகத்தை சொன்னால் சுகபிரசவம் ஆகும்.

ஹே, ஸங்கர ஸ்மரஹர ப்ரமதாதீ நாத மன்னாத
ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூரினீ
சம்போ ஸீகப்ரஸவக்ருத் பவமே த்யாயோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ, பாலய மாம் நமஸ்தே.
இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இன்று ஜபம், தியானம் மற்றும் மந்திரம் பற்றி பார்ப்போம்.

ஜபம் என்பது சக்தியின் உருவம்(Energy)
தியானம் என்பது சுத்தவெளியின்(Pure Space) உருவம்.(சிவன் என்று இந்து மததில் சொல்வார்களே அது)

இங்கு எல்லா மதத்திலும் நாம் நம்பும் கடவுள் அல்லது இறைவன் என்பவன் ஒரு குறிப்பிட்ட அலை அதிர்வு(Particular Frequency or Vibration) அதனால் ஒவொரு அதிர்விற்க்கும் பெயர் வைத்தது எளிமையாக நாம் புரிந்து கொள்ளத்தான். உதாரணத்திற்கு உடலில் வலிக்கிறது என்றால் எங்கு வலிக்கிறது என்று கேட்கும் போது , காலில் வலிக்கிறது என்போம், காலில் எங்கு வலிக்கிறது? கணுக்காலில் என்றால் கணுக்காலில் உள்புறமா? வெளிபுறமா? முன் பக்கமா? அல்லது குதிகால் பக்கமா என் பல கேள்விகளுக்கு பதில் சொல்வது போல்தான் இறைவன் என்பவன் அருள்பேராற்ல் - சுத்தவெளி - முழுமையாக நாம் அனுபவிக்காத அமைதி. அனால் அதில் சலனங்கள் எற்படும் போது அதிர்வுகள் விளைகின்றன அந்த அதிர்வுகளின் எண்ணிக்கு தகுந்தவாறு நாம் கை, கால் என்பது போல் சிவன்,சக்தி,வினாயகர், முருகன் பெயர் வைத்து இருக்கிறோம்.

"அண்டதில் உள்ளதே பிண்டத்திலே"

என்றால் நம் உடலிலேயே அனைத்து அதிர்வுகளும் இருக்கிறது என்று பொருள். மூலாதார சகரத்தில் வினாயகர் என்பது போல்.

முன்னுரை போதும் இப்போது ஜபத்தை பற்றி பார்ப்போம்.

ஜபம் என்பது மூன்று வகைப்படும்.

1. "வைகரீ" மனம் ஒருமை படாத போது சத்தமாக மந்திரங்களை சொல்வது, சொல்லும் அளவுக்கு பலன் தரும்.
2. "உபாம்சு" உதடுகள் மட்டும் அசையும் ஆனால் சத்தம் வரக்கூடாது. இது 10 மடங்கு அதிக பலன் தரும்,
3. "மானசீகம்" என்பது (அஜபா) மனதினால் மட்டும் சொல்வது. இது 100 மடங்கு அதிக பலன் தரும்.

அதனால் படிபடியாகத்தான் போக வேண்டும், ஒலியின் அதிர்வுகள் கொஞ்ச கொஞ்சமாக உடலில் ஊறவேண்டும் - ஊறுகாய் போல்.

குருவிடமிருந்து உபதேசம்.
உப்தேசத்தால் மந்திரம் (ஒலி அதிர்வுகள் Sound Viration or Frequency)
ஒலி அதிர்வுகளால் ஒத்த அதிர்வுகள் (Hormonic Frequency or Vibration)(தேவதைகள் என்று நம் முன்னோர் சொல்வார்கள்)
ஒத்த அதிர்வுகளினால் ஞானம்(Only Wisdom not Enlightenment) எனும் மெய்யறிவு கிடைக்கும்

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

interesting !!!!

இப்படிக்கு,
சந்தனா

அன்பு சகோதரி திருமதி சேகர்

மிகவும் நன்றி. இன்னும் சிறிது நாள் கழித்து முன்பு எழுதியதை தயவு செய்து படிக்கவும் அப்பொது நன்கு புரியும் என நினைக்கிறேன்.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு அருசுவை உறுபினர்களுக்கு,

விமானம் ஓட்டுவதகான உரிமத்தை புதுபிக்க, கொல்கத்தா சென்று திரும்பி 3rd மார்ச் தான் வருவேன். வந்த பின் பதில் போடுகிறேன்.
வந்த பின் எண்ணங்களும் அதை எப்படி ஆராய்வது என்று பார்போம்.

இப்படிக்கு,

ஹைஷ்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்