மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

திரு ஹைஷ் .
எனக்கு உங்கள் மறைபொருள் ரகசியத்தை விட உங்கள் பணியை குறித்து அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது..சொல்லுவீர்களா

///"அண்டதில் உள்ளதே பிண்டத்திலே"///

எனக்கு இவ் வாக்கியம் தெரியும் ஆனால் அதன் பொருள், நீங்கள் சொல்லித்தான் தெரிந்துள்ளது. விளக்கத்திற்கு மிக்க நன்றி.

எமக்கு தியறியே புரியவில்லை, பிறகெப்படி பிறக்ரிகல் பண்ணுவது?.

கனவைப் பற்றிக் கேட்டேன், அதுபற்றி உங்கள் கருத்தை முடிந்தால் கூறுங்கள்.

நீங்கள் விமான ஓட்டுனராக இருக்கிறீங்களா?. அப்படியாயின், என் சிறிய ஒரு கருத்து:), தயவுசெய்து, விமானம் ஓட்டும் முன் எம் பதிவுகளை செக் பண்ணவேண்டாம்:), எல்லாம் முடிந்து வந்தபின் பாருங்கள். இல்லையெனில் சிலவேளைகளில் எம் பதில்களால் டென்ஷனாகி விமானத்தை வேறு ரன்வேயில் இறக்கப்போகிறீங்கள்:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் Haish,
உங்கள் பதிவுகள் பாதி புரியவில்லை என்றாலும் இந்த டாபிக் ரொம்ப ஈன்டெரெச்டிங் காக இருக்கு.நீங்கள் நிறைய இது போல் எழுதுங்கள்.மேலும் மந்திரங்கள் சொல்வதால் ஏற்படும் நன்மைகளை Scientificஆக கொஞ்சம் விளக்குங்கள் Please.
அருணா

aruna

இரண்டு முறை பதிவு

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி மேனகா,

முதலில் குதற்க்கமாக பதிலை பதிந்தற்கு, மிகவும் வருத்தப்படுகிறேன். “பொருத்தருள்க”.
ஹைஸ் என்பது என் புனைப்பெயர். சில தவிற்க முடியாத காரணங்களினால் இப்பொது சொல்லவிலை. எங்க அப்பா அம்மாவிற்கு ஒரே பிள்ளை அதுவும் செல்லபிள்ளையாக பிறந்தது கடலூர் (GH ல்). படித்தது SSLC(11 Std) மேலும் PUC. ஒரே ஒரு தங்கை 9 வயது என்னை விட சிறியவள் தஞ்சாவூரில் இருக்கிறாள். அன்பு மனைவியுடன் திருமணம் 1989ல் புதுசேரியில் நடந்தது (மிகவும் சிறப்பாக சமைப்பார் (என் அம்மாவை விட). மகன் +2 தேர்வுகளை இப்பொது தான் முடித்து இருகிறான், மகள் 7 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்து இருக்கிறாள்.
என்னுடை அம்மா 1984ல் புற்று நோய் (கர்ப்ப பை வாயில்-Stage III B) பாதித்து இயற்கை எய்தினார்.
தந்தை 1993ல் பக்கவாத்தால் பாதிக்க பட்டு 1998ல் இயற்கை எய்தினார்.
இதை பற்றிய சிகிச்சை அனுபவங்களை நேரம் கிடைக்கும் போது பதிகிறேன்.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அட்மின்,
அருசுவை உறுப்பினர்கள் நிறையபேர் விமான பயணம் மேற்கொள்வதால் “விமான பயணமும் அதில் எற்படும் அசொகரியங்களும் மற்றும் பாதுகாப்புகள் ” என்ற தனி இழை மிகவும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆரோக்கியம் என்ற பகுதியில் சரியான தலைப்பு கிடைக்காத்தால் பொது தலைபின் கீழ் தொடங்கி இருக்கிறேன். உங்களுக்கு எந்த இடம் சரி என்று படுகிறதோ அங்கு மாற்றிவிடவும். நன்றி.

அன்பு சகோதரி தளிகா

தாளராமாக கேளுங்க? (விமான பயணம் என்ற இழையில்) என்னால் முடிந்த அளவுக்கு பதில் சொல்றேன்.

அன்பு சகோதரி அதிரா

கனவுகளை பற்றி பின்பு விரிவாக எழுதுகிறேன். பொருத்தள்க!

அன்பு சகோதரி அருணா

நன்றி. முடிந்த வரைக்கும் எல்லோருக்கும் புரியும் படி எழுத முயற்ச்கிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ்... நல்ல இழை. இன்றே படிக்க நேரம் கிடைத்தது. முன்பு ஒரு முறை முதல் பதிவை படித்தேன், ஒன்றும் புரியாமல் பின் படிக்காமல் இருந்தேன். இப்போது புரிகிறது (ஓரளவு). என் அம்மா, அப்பா இது போன்ற விஷயங்கள் அதிகம் சொல்லி கேட்டு இருக்கிறேன். என் தாயும் கனவுகள் பலிக்கிறதுன்னு ரொம்ப பயந்து இருப்பாங்க. காரணம்... என் அம்மா'வின் பெற்றோர் காலமாக போவது முதல் அவருக்கு கனவில் சில மாதங்கள் முன்பே தெரிந்து போனது தான். இது அவரை உடல் அளவிலும் மிகவும் பாதித்துள்ளது.... வெளியே சொல்ல முடியாமல் சில கனவுகளால் மனதுக்குள் குழம்பி போய் அவர் உடம்பை கெடுத்து கொண்டார். இது என் சொந்த கதை.... :( இதை விடுவோம். நான் பல வருடங்களுக்கு முன் ஒரு கனவு கண்டேன்... சொன்னால் நம்ப முடியாது.. ஒரே கனவு, ஒரே போல் ஆரம்பித்து ஒரே போல் முடியும்.... ஒரு பையன் (பார்க்க பேய் போல் இருக்கிறான், மிகவும் அமைதியான முகம், ஆனல் பார்க்க பயமாக இருக்கு, சின்ன பையன்) நான் எங்கு போனாலும் பின் தொடருவது போலும், மழை கொட்டும் இரவு நேரத்தில் இருட்டான என் வீட்டு வாசலில் அவன் வந்து நின்று என்னை பார்ப்பது போலும், மின்னல் வெளிச்சத்தில் அவன் நீலம் பாய்ந்த கண்களை கண்டு பயந்து விழிப்பேன். ஏறக்குறைய 3 வருடங்கள்.... 10 முறையாவது இந்த கணவு வந்திருக்கும். அதன் பின் தூக்கம் வராது.... தெரிந்தால் இந்த கனவுக்கு விளக்கம் சொல்லுங்கள். இப்போதெல்லம் இது வருவதில்லை, ஆனால் நினைத்தாளே இன்றும் கண்ணில் நீர் வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு சகோதரி வனிதா,

ஊக்கமளித்தற்க்கு மிகவும் நன்றி, ஏற்கனவே நிறைய பேருக்கு புரிந்து கொள்ள கடினமாக இருப்பதாலும், சகோதரி திருமதி சேகர் மற்றும் சகோதரர் அருண் பகுதி, பகுதியாக பிரித்து எழுதினால் எளிமையாக புரியும் என்று சொல்லி இருப்பதாலும், கொஞ்சம் கொஞ்சமாக முடிந்த வரை கோர்வையாக எழுத முயல்கிறேன். அதனால் கனவுகளை பற்றி பின்பு விளக்கமாக எழுதுகிறேன். சகோதரி அதிரா மற்றும் உங்கள் கேள்விகளுக்கும் அதில் விடை தெரியும்.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

திரு ஹைஷ் அவர்கலுக்கு, நலமா இருக்கிங்கலா? உங்கலுடைய இந்த பதிவு படிக்கும் போது அதிக பிரம்மிப்பா இருக்கிரது.

ஆனா ஒருசில இடங்கலை படித்தால் ஒன்றும் புரியவில்லை ( இந்த அறிவிலிக்கு). அதனால் கெஞ்சம் விலக்கமாக எழுதினால் நன்றாக இருக்கும் அண்ணா.....

அனால் ரசிக்கும் படியாக இருக்கிரது. எனக்கு கூட அதிக கனவு வருகிரது.

அதிலும் இரந்தவர்கள் அதிகம் வருவார்கள். அது எதனால் அப்படி வருகிரது. ஒருநேரம் ஏதேனும் பேசுவார்கள். சிலநேரம் எதுவும் பேசாமல் தியானம் செய்வார்கள்.

சில சமயம் பயங்கரமான கனவும் வருகிரது. இது நல்லது தானா அண்ணா....... செல்லுங்கள் பீலீஸ்....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மூளையும் அதன் அதிர்வுகளும்:

மருத்துவ அடிப்படையில் மூளை அதிர்வுகளை அளந்து ஆய்வு செய்வதற்கு “எலக்ட்ரோ என்ஸபலோ கிராபி – Electro –Encephalo- graphy” என்பார்கள். பொதுவாக மூளையின் அதிர்வுகள் வினாடிக்கு 1 முதல் 40 அலைகள் இருக்கும் அதை மருத்துவத்திலும், மறை பொருளிலும் எப்படி பகுத்து ஆயலாம் என பார்ப்போம்.

மருத்துவத்தில்

1. ”டெல்டா – Delta” 1 முதல் 4 அலைகள்.
2. “தீட்டா - Theta” 5 முதல் 7 அலைகள்.
3. “அல்பா – Alpha” 8 முதல் 12 அலைகள்
4. “பீட்டா 1 – Beta 1 ” 13 முதல் 20 அலைகள்.
5. “பீட்டா 2 – Beta 2” 21 முதல் 40 அலைகள்.
6. “க்காமா – Gamma” 41 அலைகளுக்கு மேல்.

மறை பொருளில்

1 ”டெல்டா – Delta” 0 அலை இறைநிலை-அமைதி-சமாதி.
2 ”டெல்டா – Delta” 1 முதல் 4 அலைகள் – ஞானம் –மிக ஆழ்நிலை தியானம்
3 “தீட்டா - Theta” 5 முதல் 7 அலைகள்.- சித்து (சித்தர்கள்) – ஆழ்நிலை தியானம்.
4 “அல்பா – Alpha” 8 முதல் 12 அலைகள் – அல்பா தியானம்- நமது சுற்று புறத்தின் கூர்ந்த அறிவு. மாணவர்களுக்கு மிக நல்ல தியானம்
5 “பீட்டா 1 – Beta 1 ” 13 முதல் 20 அலைகள். நாம் சாதராணமாக விழித்து இருக்கும் நிலை.
6 “பீட்டா 2 – Beta 2” 21 முதல் 40 அலைகள். நாம் பதட்டபடும் நிலை.
7 “க்காமா – Gamma” 41 அலைகளுக்கு மேல். ஆய்வுக்கு அப்பாற்பட்ட நிலை

அடுத்த்தில் எண்ணங்களும் அதன் ஆய்வு பற்றியும் பார்ப்போம்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்