மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

நான் கிண்டல் எல்லாம் அடிக்கலை - நீங்க நந்தா படம் பார்த்து இருக்கீங்கல்ல - அதுல வர்ற பையன் மாதிரி இருக்கு நீங்க சொல்லற பையன், ஒரு வேளை அந்த படம் உங்களை பாதித்து இருக்குமோ?

இப்படிக்கு,
சந்தனா

நல்லா இருக்கு இந்த பதிவு. உறக்கத்தின் நிலைகள், sleep waves எனக்கு தெரியும், அதை தியானத்தோட compare செய்தது நல்லா இருக்கு.

இப்படிக்கு,
சந்தனா

அன்பு சகோதரர் ஹைஸ்,
நலமா? (நானும் பாண்டி தான் என்பதை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்).

என் மகனும் பைலட் ஆகணும்னு ரொம்ப ஆசைப்பட்டார். ஆகும் செலவுகள், மற்ற பிரச்னைகளைப் பார்த்து இப்போதைக்கு பி.டெக் இரண்டாம் வருடம் படிக்கிறார். வாழ்க்கையில் என்றாவது பைலட் ஆகணும்னு அவருக்கு ஆசை.

உங்களின் இந்த திரட் படித்ததில் இருந்தே பதிவு போடணும்னு இருந்தேன். எனக்கு கடவுள் பற்றி நிறைய குழப்பம் இருக்கு.

ஆரம்பத்தில் நான் கடவுளே இல்லை என்னும்
முடிவில் இருந்தேன். இப்போதும் கடவுள் என்று ஒரு பாயிண்டை வைத்து, நம் எண்ண அலைகளை ஒருமுகப்படுத்தி நாம் வைக்கும் வேண்டுகோள்கள் நிறைவேறுவதாகவே நான் நினைக்கிறேன்.

மன்னிக்கவும். விளக்கமாக இப்ப டைப் அடிக்க முடியவில்லை. ஆனால் நான் உங்களிடம் நேற்று தான் ஆல்ஃபா அலைகள் பற்றி கேள்வி கேட்க நினைத்தேன். இன்று நீங்கள் ஆரம்பித்து விட்டீர்கள். ஆனால், நீங்கள் விளக்கமாக சொல்லும் போது என்னால் அறுசுவைக்கு வர இயலாது.

நான் ஓரிரு காரியங்கள் ஆல்ஃபா பிரேயர் மூலம் செய்து பார்த்து நடந்ததாக நினைக்கிறேன். என் கணவரிடம் சொன்னால் நம்பியதாக தெரியவில்லை. உனக்கு ஆண்டவரிடம் நம்பிக்கை இருக்கு என்று நான் நம்புவதாலேயே நீ செய்யும் எதற்கும் நான் மறுப்பு சொல்வதில்லை என்கிறார். அவரின் அன்பு எனக்கு புரிகிறது. கடவுள் பற்றிய என்னுடைய குழப்பத்திற்கு விடை என்ன? நான் அதிகம் யோசிப்பேன். அப்படி யோசிக்கும் போது கடைசியில் சூனியமாக இருப்பது போல் உணர்கிறேன். இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா தங்களால்?

அதுமட்டுமல்லாமல் எனக்கு அடிக்கடி கனவுகளும் வருகிறது. பெரும்பாலும் என்னை யாரோ துரத்துவது போலும் இல்லையானால் நான் எதையோ பிடிக்க ஓடுவது போலும் இருக்கும். அருவருப்பான இடத்தில் இருப்பது போல் அடிக்கடி கனவு வருகிறது. இது எதனால்? மற்றவர்களுக்கு சொல்வது போல் பிறகு சொல்கிறேன்னு தயவு செய்து சொல்லாதீர்கள். நீங்கள் விளக்கம் சொல்லும் சமயம் நான் அறுசுவைக்கு வர முடியாதுன்னு நினைக்கிறேன்.

இன்னோரு விஷயம், ஒரு காரியம் செய்யவோ, எங்கும் போகவோ ஆயத்தம் செய்யும் போது நான் சொல்வேன். இன்று வேண்டாம். இந்த நாள் போகலாம் என்று(என் மனதில் அன்று சரிவராது என்று தோன்றும்). அப்படி மீறி போனாலோ, செய்தாலோ போன காரியம் நிறைவேறாது. நான் சொன்ன நாளில் தான் நடக்கும். இது எதேச்சையாக நடப்பதா அல்லது அதற்கான காரணம் இருக்கிறதா?

இன்னும் நிறைய கேள்விகள் என் மனதில். முடிந்த போது கேட்கிறேன். இப்போதைக்கு இத்ற்கு விளக்கம் கொடுக்க முடியுமா?
நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி செந்தமிழ் செல்விக்கு,

1. டார்ச் விளக்கில் இருந்து வெளிவரும் ஓளி நமக்கு எந்த தீங்கும் பண்ணாது ஆனால் “லெசர்” ஓளி கற்றை உதவியுடன் இரும்பை கூட அறுக்கலாம் என்பது தாங்கள் அறிந்ததே. அதே போல் நமது மனதில் இருந்து எழும் எண்ண அலைகளான காந்த அலைகளை ஒருமுகப்படுத்தினால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
2. பி.கு வில் பதில்.
3. சிலவற்றை உணரமட்டுமே முடியும் உணர்த்த முடியாது. அதனால் தான் நீங்கள் உணர்ந்த்தை உங்களால் உங்கள் கணவருக்கு உணர்த்த முடியவில்லை. அது அவரவர் அடைந்திருக்கும் ஆன்மீக வளர்ச்சியை பொறுத்து அமையும். மிக உயர்ந்த ஆன்மிக நிலையில்தான் சூன்யத்தை உணரமுடியும் அது தான் ”அருள்பேராற்றல்”. சுய பரிசோதனை செய்யும் பொது நீங்களே உணர்வீர்கள்.
4. கனவுகள் நமது புருவ மத்தியில் இருக்கும் “அஞ்னா” என படும் சக்கரத்தில் இருக்கும் திரை விலகுவதால் ஏற்படுகிறது. ஆனால் சில சமயம் மனதில் உள்ள சில எண்ண அலைகளின் இடையறாத சுழற்சியால் எற்படும். “எதையாவது நெனச்சுகிட்டே படுத்து இருபே” என்று சொல்வார்களெ அது.
5. இப்போதைக்கு ”ஸ்பேஸ் டயம் ரெப் – Space and Time Wrap” என சொல்லபடும் டைம் டிரவல் பற்றி விளக்கமாக எழத இயலவில்லை. பொருத்தருள்க! நீங்கள் சொல்வது உண்மை அதற்கு மறைபொருளில் விளக்கம் உண்டு.

பி.கு: உங்களை பற்றிய எண்ண அலைகள் நேற்றில் இருந்தே அதிகமாக இருந்த்து. இந்த வாழ்த்து அடித்துவிட்டு நெட் சரியாக இல்லாத்தினால் உங்களுக்கு முன் பதிக்க முடியவில்லை. பின்புதான் உங்களின் பதிவை மறைபொருளில் படித்தேன். என் அன்பு மனைவி மற்றும் பிள்ளைகள் பாண்டியில்தான் இருக்கிறார்கள். ஊருக்கு வரும் போது சந்திக்கிறேன். உங்களின் மகனின் சந்தேகங்கள் ஏதாவது இருந்தால் நிவர்த்தி செய்கிறேன்.

மின் அஞ்சல்:haish126@rediffmail.com

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

Blank

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

திருமதி சேகர் அவர்களுக்கு மிகவும் நன்றி
அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹாய் அண்ணா எனக்கு இப்பதான் கொஞ்சம் புரியுது. அண்ணா நான் தனிமையில் இருக்கும் போது ஏதே அமானிஸ்யம் என்னை பார்க்கிரா மாதிரி இருக்கு. அப்படி எனக்கு தோனுது. இரவில் தூக்கம் விழித்தால் பிறகு தூக்கம் இல்லை.

இங்கு பேய் அதிகம் கும்பிருவார்கள். அதனால் ஒரு பயம். இது என்னுடைய எண்ணமா இல்லை அப்படி உண்டா.... இதனை தீர்க்க வழி செல்லுங்கள் பிலீஸ்.....

நான் சீரடி சாய் பாபா கும்பிடுவேன். என் கனவில் அடிக்கடி வருவர். நான் அவர்கால்லில் விழுந்து கும்பிடும்போது மனிதனின் கால் தெடுவுணர்வு போல் இருந்தது. அதை இப்போது நினிக்கும் போதும் எனக்கு உடம்பே சிலிர்த்து விடும். அவர் என்னுடன் இருப்பதாக தேன்றும்.

இதை சென்னால் என்னை எல்லரும் ஒருமாதிரி நினைப்பர்கள் எனறு செல்லமாட்டேன். இது எதனால்...

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அன்பு சகோதரி பிரபாதாமு,

பகல் என்றால் இரவும் உண்டு, அது போல் நமக்கு ஒத்த அதிர்வு அல்லது ஒவ்வாத அதிர்வு என்பதைதான் சிலர் அவரவரின் வாழ்க்கை அனுபவத்திற்கு ஏற்றாற் போல் (கடவுள்-பேய், நல்லசக்தி-தீயசக்தி பெயரிட்டு அழைகிறார்கள்) ஒன்று மட்டும் உறுதியானது அது நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கு ஏற்றவாறு நம் காந்த அலை அதிர்வுகள் இருக்கும். அதற்கு ஏற்ற ஒத்த அதிர்வுகளைதான் அது ஈர்க்கும் –எளிமையாக சொன்னால் நல்லதை நினைதாலோ, இறைவனை அல்லது நல்ல சக்திகளை நம்பினால் நல்ல ஒத்த்திர்வுகளைதான் ஈர்பீர்கள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அண்ணா நீங்க செல்வது சரிதான். இங்கு பேய் அதிகம் கும்பிடுவதால் அந்த பயம் அதிகம் இருக்கிரது.

எல்லம் நன்மைக்கே....... இப்படிதான் நான் நினைத்து இருக்கிரேன்.

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

எண்ணங்கள் என்பது ஒருவிதமான காந்த அலை. இப்போதைக்கு அது உடலிலோ, மனதிலோ அல்லது இதயதிலோ நம்மில் தூண்ட படும்போது, அது நமது உடலில் சில வேதியல் மாற்றங்களை உண்டாக்குகிறது. அந்த வேதியில் மாற்றத்தினால் எற்பட்ட சில மூலகூறு (ஹார்மோன்கள் குறிப்பாக ”டோப் எனபடும் டோப்பமைன் - Dopamine” அதன் மூலகூறு C8H11NO2) நமது செயலாக மாற்ற உதவி அல்லது உபத்திரவம் செய்கிறது.

”இளம் கன்று பயம் அறியாது”

குறிப்பாக டீன் ஏஜ்ஜில் எடுக்கும் மரண பயமற்ற கார் மற்றும் மோட்டார் பைக் ரேஸ், ரேஷ் டிரைவிங் போன்ற ரிஸ்க், காதலில் அடம்பிடிக்கும் ஆண் மற்றும் பெண், தற்கொலைகள், இன்பாச்சுவேஷன் எனபடும் முறையற்ற பால் கவர்ச்சி இவையெல்லாம் இந்த டோப்பமைன் நமது உடலை ஆள்வதினால் தான். சில மைக்ரோ அல்லது மில்லி கிராம் வேதியல் முலகூறுகள் நம் அறிவை ஆளவேண்டுமா? அல்லது நம் அறிவு நம்மை ஆளவேண்டுமா? என்று நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒர் விளைவு உண்டு (Cause and effect). அந்த விளைவே நம்மில் எற்படும் வினை (நல்வினை அல்லது தீய வினை) பதிவு ஆகும். இந்த வினை பதிவு எப்படி நம்மிலும், ”வான் காந்தம்” த்திலும் பதிக்கிறது என்று விரிவாக பின்பு பார்ப்போம். இப்போது எண்ணங்கள் எழ காரணங்களை ஆராய்வோம்.

1. உடலில் எற்பட கூடிய வேதியல் மாற்றத்தினால் எழும் எண்ணங்கள். உதாரணத்திற்கு பசி, தாகம், கழிவு பொருட்களின் வெளி நீக்கம் மற்றும் பால் உணர்வு.

2. பழக்கவழக்கங்களினால் எற்படும் எண்ண அலைகள். உதாரணத்திற்கு காலை 8 மணி காலை உணவு, மதியம் 2 மணி மதிய உணவு. பழக்க தோஷம் என்பார்களே அது.

3. சந்தர்ப்ப மோதல்களினால் எற்படும் எண்ண அலைகள். நாம் கடைக்கு போகும் பொது இந்த கடையில் இது நன்றாக இருக்கும் என சிலதை சாப்பிடுவோம். அப்பொது பசியிருக்காது அல்லது அந்த நேரம் நாம் சாப்பிடும் நேரமாகவும் இருக்காது. மனித இனத்தில் நிறைய தவறுகள் நிகழ்வது சந்தர்ப்ப மோதல்களினால்தான்.

4. பிறரின் எண்ண தூண்டுதலினால் எற்படும் எண்ண அலைகள். சில சமையங்களில், சில பொருள்களை வாங்கிய பிறகு நாமே நமக்கு நொந்து கொள்வோம். நமக்கு வாங்க வேண்டிய தேவையோ அல்லது எண்ணமொ இருக்காது ஆனால் விற்பவரின் மன அலை தூண்டுதலினால் வாங்கி விடுவோம். இதனாலும் மனித இனத்தில் சில தவறுகள் நிகழ்வது உண்டு.

5. மரபு வழியாக தூண்டபடும் எண்ண அலைகள். உதாரணத்திற்கு ஒரு ஆங்கில பள்ளி வாயிலில் உட்கார்ந்து செருப்பு தைக்கும் தொழிலாளி, பள்ளி செல்லும் பிள்ளைகளை பார்த்து தன்னால் இது போல் பள்ளி சென்று படிக்க முடியவில்லையே என்று ஏங்குவது. அந்த ஏக்கமானது அவனது உயிர் அணுக்களில் பதிந்துவிடும். அதனால் அவனுக்கு பிறக்கும் பிள்ளை மிகவும் படிப்பதில் ஆர்வமும், அறிவும் உடையதாக இருக்கும்.

6. இறையாற்றலால் தூண்டபடும் எண்ண அலைகள். எப்பொது பல மனிதர்களின் எண்ண அலைகள் ஒன்று பட்டு இயங்குகிறதோ அப்பொது ஏற்படும் கூட்டு அலையின் அதிர்வுக்கு ஒத்தவாறு ஒரு உடலை தேர்ந்து எடுத்து அதன் வாயிலாக செயல்படும். உதாரணத்திற்கு கௌதம புத்தர் வழியாக அன்பும், ஞானமும் வெளிபட்டது போல். அதனால்தான் கூட்டு பிராத்தனைக்கு மிகவும் வலிமையான ஆற்றல் உண்டு.

அறுசுவை உறுபினர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் நீங்கள் செய்யும் பிராத்தனையை பதிக்கவில்லை என்றாலும் நீங்கள் அதை பற்றி நினக்கும் பொது எழும் எண்ண காந்த அலைகளால் கண்டிப்பாக பலன் உண்டு.

அடுத்த்தில் ஆசை பற்றியும் அதை எப்படி சீர் அமைப்பது என்பது பற்றியும் பார்போம்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்