மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

///அந்த ஏக்கமானது அவனது உயிர் அணுக்களில் பதிந்துவிடும். அதனால் அவனுக்கு பிறக்கும் பிள்ளை மிகவும் படிப்பதில் ஆர்வமும், அறிவும் உடையதாக இருக்கும்///

நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளதை நானும் நம்புகிறேன், விஞ்ஞான ஆராய்ச்சியிலும் கண்டுபிடித்துள்ளார்கள், நம் மனம் எதை அதிகம் எண்ணுகிறதோ/ விரும்புகிறதோ அதுவே நம் வாழ்வில் நடக்குமென்று. சிலர் எப்பவுமே சொல்லிக்கொண்டே இருப்பார்கள், நான் ரரசியில்லாதனான், எனக்கு எதுவும் நல்லதே நடப்பதில்லை..... என்றெல்லாம், ஆனால் இப்படி நினனப்பவர்களுக்கு மேலும் மேலும் இப்படியான பிரச்சனனகளே வருமாம். அதனால்தான் எப்பவுமே நல்லதையே எண்ண வேண்டும்.

சிலர் சொல்கிறார்களே கரிநாக்கு" என்றும், அப்படி நாக்கில் கரி உள்ளவர்கள் சொன்னது பலிக்கும் என்றும்... இதை நம்பலாமோ?.

///அதனால்தான் கூட்டு பிராத்தனைக்கு மிகவும் வலிமையான ஆற்றல் உண்டு.///

கூட்டுப் பிரார்த்தனை என்றால் எதையெல்லாம் குறிக்கும்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுவீங்களோ? நேரமுள்ளபோது?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதரி அதிரா,

மாலை வணக்கம். உங்களைதான் தேடிகொண்டு இருந்தேன் என்னடா நேரம் ஆச்சே இன்னும் காணோமே என்று. (கேள்வி கேட்கதான்!). புதுசேரியில் எனக்கு ஒரு நெருங்கிய நண்பர் (சோதிடம் பார்ப்பவர்) அவர் வீட்டில் பேசிக்கொண்டு இருக்கும் பொது திடீர் என என்னை உள்ளே சென்று உட்கார சொன்னார். ஏன் என்றதற்கு பிறகு சொல்கிறேன் என்றார். யாரோ ஒருவர் வந்து சென்றதும் – அவர் பெயர் ”ஏழுமலை” அவரை பார்த்தால் நமது முதல் மந்திரி ஓடி ஒளிந்து கொள்வார் என்றார். ஏன் என்றால் அவர் எது சொன்னாலும் அதில் உள்ள கெட்டது மட்டுமே நடக்கும் அதனால்தான் உங்களை உள்ளே அனுப்பி விட்டேன் என்றார். ஆனால் நான் நமது மனது தூய்மையாக இருந்தால் யார் என்ன சொன்னாலும் பலிக்காது அதனால் அடுத்த தடவை நான் அவரிடம் பேச வேண்டும் என்றேன். பல முறை அவரிடம் பேசி இருக்கிறேன் ஒன்றும் நடந்த்து இல்லை. நமது மனத்தில் தெளிவும், தூய்மையும் இருந்தால் எந்த ஆற்றலும் நம்மை கேட்காமல் ஏதும் செய்யமுடியாது.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சகோதரர் ஹைஸ் அவர்களுக்கு

மிக அருமையான தகவல்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.
தொடருங்கள் உங்கள் விளக்கங்களை.....

இது தோழிகளுக்கு
******************
வீணான பயங்கள், பேய் பிசாதுக்கெல்லாம் ஒரு வழி சத்தமில்லாத என்னேரமும் சொல்லும் (ஜிக்ரு, ஜபம், ஸ்லோகம்) தியானம் தான்.மிகச்சிறந்தது.

எனக்கும் முன்பு ஒரே பயம் இருட்டில் ஒரு பேப்பர் ஆடினால் கூட பட படப்பு, சுவரில் உள்ள வலைவுகள் எல்லாம் ஒரு ஏதோ மிருகம், மற்றும் பேய் போல் தோன்றும், ஆனால் இப்போது தொடர்ந்து ஜிக்ரு செய்வதால் பயமில்லை.

ஜலீலா

Jaleelakamal

அன்பு சகோதரி ஜலீலா

வணக்கம்.

உங்களுடைய கத்தரிகாய், மாங்காய் மீன் குழம்புதான் நான் முதன் முதலாக சமைக்க எடுத்த ரிஸ்க் – என் மனைவி வைப்பது போல் இல்லை என்றாலும் ஏதோ சுமாராக சாப்பிடும் படி இருந்த்து.

நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சகோதரர் ஹைஸ் அவர்களுக்கு

உங்கள் அம்மாவை விட மனைவி தான் நல்ல சமைப்பார்கள் என்றீர்கள், ஆகையால் மற்ற சமையல்கள் என்ன தான் நல்ல இருந்தாலும் அது பிடிக்காது.

செய்து பார்த்தமைக்கு மிக்க நன்றி.

ஜலீலா

Jaleelakamal

அன்பு சகோதரி ஜலீலா
//உங்களுடைய கத்தரிகாய், மாங்காய் மீன் குழம்புதான் நான் முதன் முதலாக சமைக்க எடுத்த ரிஸ்க் – என் மனைவி வைப்பது போல் இல்லை என்றாலும் ஏதோ சுமாராக சாப்பிடும் படி இருந்த்து.//
நான் சொன்னது என் செயல் (சமையலை) திறமையை பற்றி. இது வரைக்கும் சமயல்கட்டு பக்கம் போனதே கிடையாது. மனைவிக்கு உடல்நலம் சரியில்லை என்றால் உடனே ஓடி போய் உணவகத்தில் இருந்து வாங்கி வந்து விடுவேன். அதுவும் இல்லாமல் சமயல்கட்டு உள்ளே போக எனக்கு திருமணம் ஆன அன்றே அனுமதி மறுக்கபட்டுவிட்ட்து (மனைவின் கட்டளை). நான் உங்களுடைய ரிசிப்பியை குறை ஏதும் சொல்லவில்லை. நான் பதிந்தது அப்படி பொருள் கொடுத்து இருந்தால் – பொருத்தருள்க!!!

நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

வணக்கம்..
நான் இன்றுதான் பகவத்கீதா வகுப்பிற்கு சென்று வந்தேன்..
எனக்கு கடவுளை கும்மிடுவதும்,அவற்கு சேவை செய்வதும் ரொம்ப பிடிக்கும்..ஆனால் என் கனவருக்கு அது பிடிக்காது என்று கிடையாது.அதில் ஆர்வம் இருக்காது.கோயிலுக்கு வலுக்கட்டாயமாக கூட்டிச்சென்றால் கும்பிடுவார்.அதை தவிர்த்து "செய்யும் தொழிலே தெய்வம்","நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் "என்று சொல்லுவார்.அதனால் அவரை நான் கட்டாயப்படுத்துவது இல்லை.ஆனால் இது என் மனதை உறுத்தும்.நம்மால் கோயிலுக்கு செல்ல முடியவில்லையே என்று நினைப்பேன்.தனியாகவும் போக முடியாது.(புது ஊர் என்பதால்)..
நாங்கள் இருவரும் இங்கு ஒரே ஒரு ரூமில் தான் உள்ளோம்.அங்கேயே படுக்கையறை உள்ளது..ஒரு சின்ன கபோர்டில் சாமியெய் வைத்துள்ளேன்..எனக்கு ஒரு சந்தேகம்.. ..வியாழக்கிழமை தவறாமல் எனக்கு தெரிந்த பூஜை செய்து விடுவேன்(பால் வைத்து)..ஆனால் அதுதான் முறையா என்று தெரியாது...அப்படி செய்யலாமா?....தவிர புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணனை வீட்டில் வைக்க கூடாது என்பது உண்மையா? சாமி சிலைகளை வீட்டில் வைக்கலாமா(பிள்ளையார் சிலை)?? எனக்கு பல சந்தேகங்கள் உள்ளது..ஒன்று ஒன்றாக கேட்கிரேன்...

இது உங்க கேள்விக்கு பதில் இல்லை. எனக்கு சாஸ்திரம், சம்பிரதாயம் தெரியாது. உங்களுக்கு அதிலே நம்பிக்கை இருக்கு போல.. அதனால பெரியவங்க கிட்ட கேட்டு அது மாதிரி செய்யறது தான் நல்லது...

இது சரியா தவறான்னு தெரியல... சாமி தான் எங்கயும் இருக்காரே, அவரோட படங்கள், சிலைகளை எங்க வச்சா என்னன்னு நான் நினைக்கிறேன்... ஏன்னா நான் தினமும் காலைல முழிச்சவுடனே கும்பிடுவதற்க்காகன்னு பக்கத்துலயே அவர் போட்டோ வச்சு இருக்கேன். சாமி தானே நம்மை படைச்சார், அவர்கிட்ட ஏன் பயப்படனும்ன்னு நினைக்கிறேன் :-)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அன்பு சகோதரி ஷர்மி

வணக்கம். வாழ்க்கை என்பதே நம்பிக்கைதான். மதம் என்பது ஒரு வழிகாட்டிதான் அதுவே வழியாகிவிட முடியாது. மனம் என்பது ஒர் குரங்கு என்று அனைவரும் அறிந்த்தே! அதனால் அதை ஒருமுக படுத்த வந்ததுதான் இந்த மதங்கள் எல்லாம். இறைவன் என்பதே ஒர் ”சூன்யம்” அதிர்வலை அற்ற ஒர் மாயான அமைதி அதை சொற்களால் விளக்க முடியாது உணரமட்டுமே முடியும். பிறக்கும் போதே குழந்தையால் எழுந்து ஓட முடியாது அல்லவா, அதனால் அவரவர் குல வழக்கபடி மற்றும் நம்பும் மதத்தின் படி வழிமுறைகளை அனுசரிப்பது நல்லது.

வேதங்களில் கூறப்படுவது கணவருக்கு பிடிக்காத பூசை செய்தால் அதனால் எந்தவிதமான பலனும் கிட்டாது.

உங்களின் சந்தேகம் படுக்கை அறையில் சாமி இருகலாமா?
என் பதில்: இறைவன் படைத்தது தானே இந்த மனிதன், இயற்கைக்கு புறம்பாக ஏதும் செய்யவில்லையே அதனால் எந்த தவறும் கிடையாது. தாம்பத்தியதில் மனம் சலனமற்று இருக்க வேண்டும், வேண்டுமானால் கபோர்டை முடிவிடுங்கள்.

எல்லாவற்றிக்கும் காரணம் மனந்தான், அதனால் எந்த சிலை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். ஆனால் உங்கள் மனம் உருத்தும் படியாக சிலை வைப்பதொ அல்லது அதற்கு பூசை செய்யவில்லை என்ற உருத்தலொ இருக்க கூடாது. அபோது தான் மனம் நிம்மதி அடையும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு வணக்கம். மேலும் மிக்க நன்றி கருத்துகளை ஆழப்படுத்தியதிற்க்கு

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்