மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

அன்புடையீர்,

புதிய உறுப்பினர்கள் சில மன்ற நடைமுறைகளை அறியாமல் இருக்கலாம். ஆகவே இந்த தருணத்தில் அதை நினைவூட்ட வேண்டியது அவசியமாகின்றது. கடவுள், மதம் சார்ந்த பதிவுகளினால் முன்பு நிறைய பிரச்சனைகள் வந்ததால், ஆன்மீகம் பகுதியை அறுசுவையில் இருந்து எடுத்துவிடுவது என்று தீர்மானித்திருந்தோம். சில பொது த்ரெட்டுகளை இடம் மாற்ற வேண்டிய காரணங்களாலும், புதிய தளம் விரைவில் வந்துவிடும் என்று நம்பியதாலும், ஆன்மீகம் பகுதி மன்றத்தில் இன்னும் நீக்கப்படாமல் உள்ளது.

திரு. ஹைஷ் அவர்கள் தியானம், மனம் சம்பந்தமான விசயங்களில் தன்னுடைய அனுபவத்தினை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த இழையினை உருவாக்கியுள்ளார். நேயர்கள் தயவுகூர்ந்து கடவுள், மத வழிபாடு போன்ற விசயங்களை இதனுள் எடுத்து வராமல் ஒத்துழைக்கவும். இந்த த்ரெட்டினை ஆன்மீகம் பிரிவில் இருந்து பொதுத்தலைப்புகள் பிரிவிற்கு மாற்ற இருக்கின்றோம். மதக்கலப்பில்லாத, மனம் சம்பந்தமான விசயங்களில் உங்கள் சந்தேகங்களை அவரிடம் கேளுங்கள். மதம், இறை சார்ந்த விசயமென்றால் தயவுசெய்து பொது மன்றத்தில் வேண்டாம். அவருடைய மின்னஞ்சல் முகவரியை இங்கே கொடுத்துள்ளார். அந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் தரவிருக்கும் ஒத்துழைப்பிற்கு எங்களது நன்றிகள்.

நலமா,உங்கள் பதிவினை இப்பதான் படித்தேன்.கொஞ்சம் புரிந்தது.நானும் பாண்டிதான்,அதனால் தான் கேட்டேன் நீங்களும் பாண்டியா என்று.உங்கள் பதிவை நான் தவறாக நினைக்க வில்லை.உங்கள் விமானம் பற்றிய அனுபவங்களை கூறுங்களேன்.

கொல்கத்தாவில் இருந்து வந்த பின் உங்களைதான் தேடிக்கொண்டு இருந்தேன். உதவிக்கு நன்றி. மின் அஞ்சல் கிடைத்ததா? உங்கள் கருத்தினை நான் ஆமோதிக்கிறேன். அன்பு அருசுவை உறுப்பினர்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோளும் அதுவே.

நன்றி

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு வணக்கம். என் அன்பு மனைவி பாண்டி பாரதிதாசன் கல்லூரியில்தான் படித்தார்கள் மேலும் தற்போது குடும்பம் லாஸ்பெட்டில் இருக்கிறது, நான் இருப்பது ஒரிசாவில். விமானம் பற்றி தனி இழை இருக்கிறது அங்கு பார்க்கவும்.

நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைய்ய்ய் நானும் அந்த காலேஜில் தான் படித்தேன் 95-98 வரை.நீங்க லாஸ்பேட்டில் இருக்கிங்களா.ஒ கே நான் அந்த த்ரெட்டை தேடி பார்க்கிறேன்.உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி!!

இது என் நாளைய கேள்வி....?
திரு ஹைஷ் அவர்களே உங்களுக்கு நன்றி(பதிலுக்கு).

இக் கேள்வி ஞாயிற்றுக் கிழமைக்கானது. ஏனெனில் ஒருவேளை நாளைக்கு என்னால் வரமுடியாமல் போகலாம், அதனால் கேள்வி கேட்க முடியாமல் போகலாம், ஆனால் நேரமாகிறதே இன்னும் அதிராவைக் காணவில்லையே என தேடினாலும் என்று, இன்று நேரமுள்ளபோதே கேட்டு வைக்கிறேனே:).

நான் மூன்று கேள்வி கேட்டால் ஒன்றுக்குத்தானே பதில் சொல்லுறீங்கள்:). சரி நேரமுள்ளபோது சொல்லுவீங்களாக்கும்.

முழுவியளம்(சகுனம்) பார்க்கிறார்களே, வெளியே புறப்பட்டுப் போகும்போது... அது சரியா? உண்மையா? இதுவும் மனப் பிரமைதானா?.

ஒருநாள் எங்கள் அப்பாவும் அம்மாவும் ஊரிலே ஒரு குழந்தையைத் தொட்டிலில் கிடத்தும் வைபவத்திற்காக புறப்பட்டார்கள்(கொஞ்சம் தூரம்), ஸ்கூட்டரை ஸ்ராட் பண்ணி, ஏறியதும் எங்கள் பூனை, பெரிதாகப் பாய்ந்து குறுக்கே ஓடியது. உடனே அப்பா ஒரு கணம் திடுக்கிட்டுவிட்டுப் பின்னர் சொன்னார், இது எங்கள் பூனைதானே, என தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டு போய்விட்டார்கள். ஒரு மணித்தியாலமாகவில்லை, அப்பாவின் அக்காவின் மகன் மாரடைப்பில் திடீரென இறந்துவிட்டார். திரும்பி ஸ்கூட்டர் ஓட்டி வரமுடியாமல், எங்கள் மாமா போய்த்தான் கூட்டிவந்தார். அன்று பட்ட அலங்கோலம் சொல்ல முடியாது.

எங்கள் ஊரில் ஒரு பெண் இருக்கிறார், அவரில் முழித்துப் போனால் எதுவும் நல்லது நடக்காது என பக்கத்துவீட்டுக்காரர் வெளிப்படையாகச் சொல்வார்கள். இப்படியான விஷயம் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் எங்கள் மாமா சொல்வார், அப் பெண்ணில் முழித்துப் போனால், அன்று தனக்கு நல்லது நடக்கும் என்று. பசுமாட்டில் முழித்தால் நல்லது. நாம் எதையாவது நினைக்கும்போது மணியோசை கேட்டால் நல்லது. ஆண் மனதில் நினைக்கும்போது ஒரு பெண் தும்மினால் நல்லது. அதேபோல், பெண் மனதில் நினைக்கும்போது யாராவது ஆண் தும்மினால் நல்லது.... இப்படி நிறையவே சொல்கிறார்களே.... இது எல்லாம் என்ன? ஆனால் இவை எல்லாம் நம் முன்னோர்கள் சொன்னதுதானே... அவர்கள் அனுபவித்துச் சொல்லியுள்ளதாகத்தானே எல்லாமே கூறுகிறது...?

ஜலீலாக்கா..... என் நிலையும் அதே... தெனாலி கமல் போல்தான்(யாரோ சொன்னார்கள்:) ).எனக்கு எதற்கெடுத்தாலும் பயம். அதற்கு நான் பண்ணுவது ஒரே வழிதான். நின்ற இடத்தை விட்டு அசையமாட்டேன்:). படுத்திருந்தால் இன்னும் போர்வையை இழுத்து தலையெல்லாம் மூடிப் படுத்துவிடுவேன். நடப்பது நடக்கட்டும் விடியப் பார்க்கலாம் என்று:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹைஸ் அவர்களூக்கு உங்களூடைய வேலைப்பழுவிலும் எனக்கு பதில் தந்ததுக்கு மிக்க நன்றி.நான் கேட்ட கேள்வி சமயம் சார்ந்ததோ என்று எனக்கு தெரியாது.ஆனால் நாளாந்தம் வந்துசேரும் ஈழச்செய்திகளிலிருந்து என் மனதை அமைதிப்படுத்தவே கேட்டேன்.மிக்க நன்றி எதைக்கேட்டாலும் அருமையாக விளக்கம் கொடுக்கிறீர்கள்.நன்றி நன்றி.எனக்கு இப்போதைக்கு ஒரு சந்தேகமும் வரவில்லை ஆனால் நீங்கள் எழுதியது எல்லாம் இப்போது விளங்கத்தொடங்கியிருக்கிறது.

சுரேஜினி

அன்பு சகோதரர் ஹைஸ் அவர்களுக்கு,
என்னுடைய மெயில் கிடைத்ததா? பதில் இல்லாததால் ஐடி சரிதானான்னு ஒரு சின்ன குழப்பம்.

அட்மின் அவர்களுக்கு,
எல்லோரிடமும் சிறிய இடைவேளை எடுப்பதாக சொன்ன நான் உங்களிடம் சொல்லவில்லை. போனில் சொல்லலாம் என்று இருந்தேன். நேரம் கிடைக்கவில்லை. முடிந்த வரை திங்களன்று பேசுகிறேன். தூங்காமல் விழித்திருக்கவும்:-)
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அன்பு சகோதரி செந்தமிழ் செல்விக்கு,

தங்களின் (யாருடைய) மின்னஞ்சல் கிடைக்கவில்லை. கிடைத்து இருந்தால் உடனே பதிலளித்து இருப்பேன். முடிந்தால் மற்றும் ஒரு மின்னஞ்சல் கீழே கொடுத்துள்ள மற்ற முகவரிக்கு அனுப்பவும். அனேகமாக 8-16 மே 09 பாண்டி வருவேன், அப்போது உங்கள் வீட்டுக்கு வரவிருக்கும் புதிய குட்டி விருந்தினரையும் வந்து பார்க்கிறேன் – நீங்கள் அனுமதி கொடுத்தால்.

Haish12@gmail.com

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி அதிரா,

முன் கேட்டதே இரண்டு கேள்விகள்தான், ஆனால் யானை கதை போல மூன்று கேள்விகள் என்று பதிந்து இருக்கிறீர்கள். (1. கரி நாக்கு) 2. கூட்டு பிராத்தனை. கேள்வியின் இரண்டாவது பதில்.
சுருக்கமாக சொன்னால் எண்ணங்கள் உடலில் ஏற்ப்படும் வேதியல் மாற்றத்தினாலும், அல்லது வெளியில் இருந்து வரும் காந்த அலைகளினாலும் ஏற்படுகிறது. அது செயலாகும் போது நம்மிடம் இருந்து ஜீவ காந்த அலைகள் வெளிப்படும். அதனால் நாம் எந்த அளவுக்கு மனதை ஒருமுக படுத்தி எதை நினைக்கிறோமோ அது கண்டிப்பாக நடக்கும்.
ஒரு விளக்கின் ஓளிக்கும் பத்து விளக்கின் ஓளிக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டு அது போல் கூட்டு பிராத்தனையும் பிரகாசமாக இருக்கும். ஓளியும் எண்ண அலைகளும் மின்காந்த அலைகளின் வெவ்வேறு அதிர்வுகள் – அது மட்டுமே வித்தியாசம். இதற்கு தேவை எல்லாம் எண்ணம் எனும் காந்த அலைகள் மட்டுமே, வேறு எந்த சாங்கிய, சம்பிரதாயம் கிடையாது.

ஞாயிறு பதில்:

1. என் பணிவான கருத்து, எந்த ஒரு உண்மை அல்லாத விஷயமும் அதிக நாள் நீடித்து இருக்க முடியாது. அதே போல் முட நம்பிக்கைகள் என சொல்லபடும் விஷயங்கள் இப்போது நமக்கு விளங்கவில்லை. உதாரணத்திற்கு இந்த உலகமும் (சூரிய குடும்பம்) பல பில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியது ஆனால் மனிதன் இப்போதுதான் (சுமார் 50 -60,000 வருடங்களுக்கு முன் தோன்றினான் http://news.nationalgeographic.com/news/2005/06/0624_050624_spencerwells.html). இயற்கையில் உள்ள மின்சாரமும், காந்தமும் அன்றே படைக்க பட்டு விட்டது. ஆனால் அதை பற்றி நாம் தெரிந்த்து கொண்டது கி.பி. 1600 ல் தான் (http://inventors.about.com/cs/inventorsalphabet/a/electricity.htm) அன்று அருவமாக இருந்த மின்காந்த ஆற்றலை பற்றி தெரிந்து கொள்ளவும் அதை பகுத்து எடுத்து பயன்படுத்தவும் மனிதனின் அறிவுக்கு சுமார் 48,400 முதல் 58,400 வருடங்கள் பிடித்து இருக்கிறது. மின்சாரம் இல்லாத ஒருமணி நேரத்திற்கே ஒரு இழை தொடங்கினோமே, மின்சாரம் இல்லாத உலகை கற்பனை பண்ணவே கஷ்டமாக இருகிறது அல்லவா? அப்போது ஏன் மின்சாரத்தை முன்பே கண்டுபிடிக்கவில்லை? இயற்கையில் பொதிந்து இருக்கும் ஏராளாமான ரகசியங்களில் உள்ள மற்ற முறைகளால் மின்சாரம் பிரித்து எடுக்கும் முறையை ஏன் இன்னும் அறியவில்லை?

2. ”தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” நிறைய பேர் இதை உங்களின் வாழ்கை அனுபவத்தில் உணர்ந்து இருப்பீர்கள். அதேபோல் பெண்களை யாரவது பின்னாலிருந்து தவறாக பார்த்தால் உடனே திரும்பி பார்ப்பார்கள். பின்னால்தான் கண் இல்லையே பிறகு எப்படி தெரிந்தது. இதுவும் மின்காந்த அலைகளின் மொழி பெயர்பினால் – Telepathy.

3. திருஷ்டி எனபடுவதும் தவறான எண்ண அலைகளுடன் ஒருவரை பார்க்கும் போது அந்த அலைகளால் ஏற்ப்படும் பாதிப்புதான்.

அதனால் மனித அறிவுக்கு புலபடாத விஷயங்கள் பல உண்டு. சிலர் நினைக்கிறார்கள் எல்லாம் அவரறிவார் என்று.

“கற்றது கையளவு கல்லாதது KOILON ”கொய்லான்” அளவு”

அருசுவை உறுப்பினர்களுக்கு என்னுடைய பணிவான வேண்டுகோள்

1. பொற்கொல்லனுக்கு எப்படி கோடரி செய்யதெரியாதோ, அது போல் கோடரி செய்ய தெரிந்தவனுக்கு நகை செய்ய தெரியாது. அதனால் யாருமே அறிவிலி கிடையாது!!!! நமக்கு தெரிந்த்து அடுத்தவர்க்கு தெரியவில்லை என்றால் ஏளனம் வேண்டாம்.

2. எதுவாக இருந்தாலும் திறந்த மனது வேண்டும், ஆனால்

3. திருவள்ளுவ பெருதகை கூறியத்தை கடைபிடிக்கவும்,

“எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பது அறிவு”

அதனால் நான் சொன்னேன் என்று எதையும் நம்ப வேண்டாம், சொல்வார் கைபிள்ளையாக இல்லாமல் உங்களின் தற்சோதனையில் வரும் பதில்களை மட்டும் நம்புங்கள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்