மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

//////---- பொற்கொல்லனுக்கு எப்படி கோடரி செய்யதெரியாதோ, அது போல் கோடரி செய்ய தெரிந்தவனுக்கு நகை செய்ய தெரியாது. அதனால் யாருமே அறிவிலி கிடையாது!!!! நமக்கு தெரிந்த்து அடுத்தவர்க்கு தெரியவில்லை என்றால் ஏளனம் வேண்டாம்-----//////

வெல்டன் சகோதரர் ஹைஷ். இந்த பதிவில் என் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை என்னை விட்டு விலகி ஓடி விட்டதாக நினைக்கிறேன். என் கணவரும் அடிக்கடி சொல்லுவார். ஓவ்வொருவரிடம் ஒவ்வோர் திறமை இருக்கும். உன்னை ஒருபோதும் நீ குறைத்து மதிப்பிடாதே என்று.

நான் இயல்பில் கலகலப்பானவள்தான். உனக்கு நல்ல ஸ்மைலிங் பேஸ் என்று தோழிகள் எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் ஒரு பார்ட்டிக்கோ அல்லது கணவரின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் என்றால் அவர்கள் முன் செல்லவே எனக்கு படப்படப்பாகி விடும் வியர்த்து வழிந்து ஒரு மாதிரி ஆகிவிடுவேன். அவர்களிடம் சிரித்து ஒரு ஹலோ சொல்லுவதற்குள் ஒருமாதிரி ஆகிவிடுவேன். கணவரிடம் நான் யார்முன்னாடியும் வரமாட்டேன் என்று அழுதே இருக்கிறேன். நானும் படித்து இருக்கிறேன் (B.Sc Chemistry). நிறைய படித்தவர்கள் அல்லது 4 ஆண்களை பேசிக் கொண்டு இருந்தால் அங்கு சென்று என்னால் பேசவே முடிவதில்லை. என் கணவருக்கு என் நிலைமை புரியும். என்னுடைய இந்த நிலையை மாற்ற அவரும் முயற்சிக்கிறார்.எனக்கு நம்பிக்கை பிறந்தாலும் அந்த தருணத்தில் என்னை அறியாமல் அப்படி ஆகிவிடுகிறேன். இது எதனால்?

--------//மரபு வழியாக தூண்டபடும் எண்ண அலைகள். உதாரணத்திற்கு ஒரு ஆங்கில பள்ளி வாயிலில் உட்கார்ந்து செருப்பு தைக்கும் தொழிலாளி, பள்ளி செல்லும் பிள்ளைகளை பார்த்து தன்னால் இது போல் பள்ளி சென்று படிக்க முடியவில்லையே என்று ஏங்குவது. அந்த ஏக்கமானது அவனது உயிர் அணுக்களில் பதிந்துவிடும். அதனால் அவனுக்கு பிறக்கும் பிள்ளை மிகவும் படிப்பதில் ஆர்வமும், அறிவும் உடையதாக இருக்கும்---////

ஆமாம் ஹைஷ். 100% கரைக்ட். நான் எதிர்பார்த்து ஏங்கியது எல்லாம் என் மகளுக்கு சர்வசாதரணமாக கிடைக்கிறது. ஏக்கம் என்றால் பொறமையாக சொல்லவில்லை. (எ.டு) என்னுடைய சிறுவயதில் நான் வசதி படைத்தவள் அல்ல. ஒரு பொருளை விரும்பினால் கூட அதை உடனே வாங்க முடியாத சூழ்நிலை அப்போது. ரொம்ப பீல் பண்ணியிருக்கேன். ஆனால் என் மகளுக்கு அந்த நிலையில்லை. அதனால் நீங்கள் கூறுவது உண்மை என்றுதான் என் மனதில் படுகிறது. அவள் வயிற்றில் இருக்கும் போதே என்மனம் எப்போதும் என் குழந்தை சகல செளபாக்கியங்களும் பெற்று வாழ வேண்டும் என்ற ப்ராத்தனைத்தான்.

நிறைய பேசுகிறோனோ

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு சகோதரி தனிஷா,

மிகவும் நன்றி, நாம் உண்ணும், உடுக்கும் உடையில் இருந்து வசிக்கும் வீடு வரை எல்லாம் இந்த சமுகதில் உள்ள எத்தனையோ பேரின் உழைப்பினால் வந்தது ஆனால் நாம் இந்த சமுகதிற்காக என்ன திருப்பி கொடுக்கிறோம். அதனால்தான் இந்த இழையின் வாயிலாக யாராவது ஒரு சிலர் பயன் பெற்றாலும் எனக்கு சந்தோஷ்ம்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

என் கேள்விக்கு பதில் இல்லையே :-(

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

ரொம்ப இன்டெரெஸ்டிங்கா விடாது கறுப்பு சீரியல் பார்த்த நியாபகம் எல்லாம் வருது..
சகோதரர் ஹைஷ் எனக்கு இந்த பேய் பிசாசு பில்லி சூனியம் இதிலெல்லாம் நம்பிக்கையே இல்லை அதனால் பேய் பயமும் இல்லை...பேய் படம் கண்டால் அன்றொரு பயம் வரும் தவிற திருடன் கொள்ளையன் கொலைகாரனுக்கு தான் பயப்படுவேன்.
நான் சின்னதிலிருந்தே காணும் கணவு ஏதோ ஒரு திருடனை,கொள்ளையனை அல்லது ஒரு கெட்ட ஆளை நான் ரொம்ப புத்திசாலித்தனமாக ரொம்ப போராட்டி பிடித்து விடுகிறேன்..அடிக்கடி இதே கனவு தான் வரும்..ஆனால் எனக்கு இந்த ஊருக்கு வந்தபின் இப்படிப்பட்ட கனவுகள் ரொம்ப குறைவு ஊரில் தினசரி ஒரு கனவு வரும்.
எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ரொம்ப வருஷமா உருத்திக் கொண்டிருக்கு..நான் ராஜீவ் காந்தி இறந்து போவது போல் கணவு கண்ட அன்று அவர் நிஜமாகவே இறந்து விட்டார்...இன்று எனக்கு 25 வயது அன்று நான் சின்ன பிள்ளையென்பதால் யாருமே நான் சொன்னதை நம்பே இல்லை..இருந்தாலும் எனக்கு ஒரே குழப்பம் அதெப்படி இப்படி ஒரு கணவு என்று..என் கணவரிடம் சொன்னால் ஒரே சிரிப்பா சிரிக்கிறார்...நிஜமாகவே நான் அப்படி கணவு கண்டிருப்பேனா அல்லது அடுத்தவர்கள் பேசுவதை தூக்கத்தில் கேட்டதாஅல் அப்படி வந்திருக்குமா...கடவுளே இங்கு யாரெல்லாம் சிரிக்க போகிறார்களோ

சகோதரர் அவ்ர்களுக்கு,
எனக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றி......
திரு அட்மின் அவர்களுக்கு,
என் கேள்வி மதசார்பானதா என்று தெரியவில்லை.அப்படியிருந்தால் மன்னிக்கவும்.
நன்றி...

உண்மையில் நான் சிரிக்கவில்லை. உன் கனவு ஒருவேளை உண்மையாகவே இருந்திருக்கலாம். அல்லது நாம் தூங்கி கொண்டு இருக்கும் போது பெரியோர்கள் பேசிக்கொண்டு இருந்திருப்பார்கள் அது நம் மைண்டில் செட்டாகி இருக்கும். எனக்கு இந்த மாதிரி நிறைய தடவை நடந்திருக்கு. நான் கனவோனு நினைத்து என் அம்மாவிடம் கேட்டால் நான்தான் அப்ப பேசிக்கொண்டு இருந்தேன் என்பாங்க.

சகோதரர் ஹைஷ்
என் அண்ணி கூட சொல்வாங்க, என் அத்தை (என் ஹஸ்ஸின் அம்மா) இறக்கும் தருணம் இரவு 3 மணிக்கு அண்ணி கனவில் அம்மா இறந்து போல கனவு கண்டு திடுக்கிட்டு அழுதார்களாம். அவர் கணவர் சமாதானம் செய்து படுக்க வைத்தாராம் (அத்தை பெங்களூரில் அண்ணி நெல்லையில்) காலையில் 8 மணிக்கு போன் செய்வதற்கு ரிசிவர் எடுக்க போகும் முன் போன் வந்து விட்டதாம் அம்மா இறந்து விட்டார் ஹார்ட் அட்டாக்கில் இரவு 3 மணிக்கு என்று. இதேமாதிரி குடும்பத்தில் நடக்கும் நல்லது, கெட்டது இரண்டையுமே முதல் நாள் இரவே கண்டு விடுவார்களாம். ஆனால் யாரிடமும் சொல்லாமல் மனதில் ஒருவித டென்ஷனோடே உலாவுவாராம்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு சகோதரிகளே.

அனைவருக்கும் மாலை வணக்கம்.
இந்த லிங்கு பார்த்து கேள்வி கேள்ளுங்க!!
http://www.arusuvai.com/tamil/forum/no/12299

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

உலகில் மனித இனம் தோன்றி, உண்டு உறங்கி உலாவி அறிவு சிறிது வேகங்கொண்ட போது, அவனுடைய சிந்தனை முதலில் நாம் அடையும் இன்பத்திற்கு நம் வாழ்விற்கு ஆதாரமானது எது? என நாடியது.

அதன் விளைவாக உணவு தான் வாழ்விற்கு ஆதாரம் என்று கண்டான். அதுவே அவனுக்கு வாழ்வையளிக்கும் பெரும் பொருள் என்று கொண்டான். இறை என மதிக்கக் கூடியது, அதுவே நம் அனைவருக்கும் ஆதாரம், மூலம் என அனைவருக்கும் அறிவித்தான்.

மேலும் சிந்தனை வேகம் அதிகரித்தது. உணவு தான் நம் வாழ்விற்க ஆதாரம் எனினும் அது எங்கிருந்து தோன்றுகிறது என ஆராய முற்பட்டான். பூமியே உணவை அளிக்கும் ஆதாரப் பொருள் எனக் கண்டான்.

மேலும் சிந்தனை சக்தியால் ஆராய்ந்தான், தண்ணீர் இல்லாவிடில் உணவு பூமியில் உற்பத்தியாகாது ஆகவே மனிதனின் உணவு, பூமி இவற்றிற்கெல்லாம் தண்ணீர்தான் ஆதாரப் பொருள் என உணர்ந்தான். பின்னர் மேலும் மேலும் ஆராய்ந்து வெட்ப, தட்ப நிலைகளின் மாறுபாட்டினால் தான் மழை பெய்கிறது. தண்ணீரைவிட கனல் தான் பெரிது என்றும் பின்னர் அணுக்கூட்டச் சேர்க்கை, உருவமாகாத முன் கூடி சுழன்று, மோதி, இயங்கும் காற்றையும் அதற்கும் மேலான அணுவையும் அறிந்து கொண்டான்.

யூக வேகம் அதிகரித்து அணுவைக் கடந்தும் அணுவைத் தாங்கியும் அணுவுக்கு மூலமாகவும் உள்ள வெட்டவெளி என்ற சூனிய தத்துவத்தைக் கண்டான். இதுவரை விரிந்து கொண்டே வந்த ஆராய்ச்சி இங்க முடிவு பெற்றுவிட்டது.

இந்த விளக்கங்களின் தொகுப்பு தான் வேதாந்தம். அதாவது நிலம், நீர், அனல், காற்று, அணு, வெளி என்ற ஆறு தத்துவங்களையும் உடல், உணவு, அறிவு இவற்றையும் முறைப்படுத்தி எழுதிய விளக்கம் வேதாந்தம்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரிகளே தனிஷா, தளீகா.

தனிஷா, உங்கள் கேள்வி எனக்க்கு புரியவில்லை, தயவு செய்து சிறிது மாற்றி கேட்டுப்பாருங்கள்.

இருவருக்கும்: பின் வரும் பகுதியில் விரிவாக கனவு பற்றி சொல்கிறேன். அதற்கு தான் அஸ்திவாரம் போட்டுக்கொண்டு இருக்கிறேன், அது முடிந்த்தும் கனவு வரும்!!!

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

//முன் கேட்டதே இரண்டு கேள்விகள்தான், ஆனால் யானை கதை போல மூன்று கேள்விகள் என்று பதிந்து இருக்கிறீர்கள்//
எங்கள் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தில் ஒரு கதை இருக்கிறது, யானை ஒன்று ஒரு பாலத்தால் போனதாம், அங்கே இருந்த ஒரு அணில் கேட்டதாம், யானையாரே என்னையும் இந்த பாலம் முடியும்வரை சுமந்து செல்ல முடியுமா என்று, யானையும் சம்மதித்து, சுமந்ததாம். அப்போது, பாலத்தின், ஒரு இரும்பு கழண்டு யானைமேல் விழுந்ததாம், அப்போ யானை வலியால் அலறியதாம், இதைக் கண்ட அணில் கேட்டதாம், என்ன யானையாரே நான் உங்கள் முதுகில் இருப்பது, உங்களுக்கு வலிக்கிறதா என்று? யானைக்கு அணில் ஒரு துரும்பு, ஆனாலும் அணிலுக்கு அப்படியொரு எண்ணம்.:)

அதுபோலத்தான் நானும் பூனைக் கேள்வி கேட்டாலும் யானைக்கதைபோல சொன்னால்தான் என் கேள்வியும் பெரிதாகத் தெரியுமல்லோ:). உங்கள் பெரிய, விளக்கமான பதிலுக்கு மிக்க நன்றி.

//ஒரு விளக்கின் ஓளிக்கும் பத்து விளக்கின் ஓளிக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டு அது போல் கூட்டு பிராத்தனையும் பிரகாசமாக இருக்கும்// அருமையாக விளங்க வைத்திருக்கிறீங்கள்.ஏனெனில் எனக்கு இதுவரை கூட்டுப் பிரார்த்தனையில் நம்பிக்கை இருந்ததில்லை. உண்மையிலேயே, எமக்காக அடுத்தவர்கள் மனமிரங்கி மன்றாடுவார்களா என்று நினைத்துத்தான்.

//திருஷ்டி எனபடுவதும் தவறான எண்ண அலைகளுடன் ஒருவரை பார்க்கும் போது அந்த அலைகளால் ஏற்படும் பாதிப்புதான்//
அப்போ திருஷ்டி என்று ஒன்று உண்மையிலேயே இருக்கிறது என்கிறீங்களா?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்