மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

முன் ஒரு காலத்தில் சீன தேசத்தில் “லிலி” என்ற ஒரு பெண் புதிதாக திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு போனாள், அங்கு கணவருடன் ஒரே ஒரு மாமியாரும் இருந்தார். சிறிது காலம் கடந்தது லிலிக்கு மாமியாரின் குணம், அவரது நடந்து கொள்ளும் முறை பிடிக்கவில்லை. அதனால் இருவருக்கும் அடிகடி சண்டை வந்தது. நாட்கள், வாரங்கள் உருண்டோடின மேலும் லிலியின் மாமியார் மருமகளை அடிக்கடி விடைக்க தொடங்கினார்.

லிலியால் மாமியாரிடம் வாக்குவாதம் செய்வதையோ, சண்டை போடுவதையோ நிறுத்த முடியவில்லை. சீன வழக்கதின் படி லிலி தினமும் மாமியாருக்கு குனிந்து வணக்கம் சொல்லவேண்டும். அவர் சொல்வதை எல்லாம் தாழ்பணிந்து கேட்கவேண்டும். அது லிலிக்கு எரிச்சலையும், வெறுப்பையும் தந்தது. இருதலை கொள்ளி எறும்பு போல் லிலியின் கணவர் தவித்தார்.

கடைசியில் லிலியினால் மாமியாரின் சர்வாதிகார தனத்தை பொறுக்கமுடியவில்லை. அதனால் அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். தனது தந்தையின் நண்பர், மூலிகை மருத்துவரான ”ஜிங்” என்பவரை பார்த்து, அவரிடம் இருந்து ஏதாவது மூலிகை வாங்கிவந்து, தன் மாமியாருக்கு கொடுத்தால் தன் பிரச்சனை ஓரெ அடியாக தீர்ந்துவிடும் என்று.

அவள் ஜிங்யை சந்தித்து விஷயத்தை சொன்னதும், அவரும் தன் நண்பனின் மகளுக்கு உதவி செய்வதாக கூறினார். ஆனால் அவர் ஒரு நிபந்தனை விதித்தார். லிலியும் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். ஜிங் உள்ளே சென்று சில மூலிகைகளை எடுத்து வந்து லிலியிடம் கொடுத்துவிட்டு சொன்னார். நிபந்தனைய சொன்னார் இபோது உடனே செயல்படும் மருந்து கொடுத்தால் உன் மாமியார் உடனே இறந்து விடுவாங்க அதனால் எல்லோருக்கும் உன்மேல் சந்தேகம் வரும். இது மெதுவாக வேலை செய்யும் விஷம் இதை எப்படி கொடுக்க வேண்டும் என்றால், அருசுவை.காம் பார்த்து அதுல இருக்கிற தினம் ஒரு ரிசிபிய தெரிவு செய்து சமையல் பண்ணி மாமியாருக்கு போட்டு அவங்களை மகா ராணி மாதிரி பாத்துக்க, ஏதாவது சந்தேகம் வந்தா, நம்ம சுரேஜினி அக்கா, மிஸ்சஸ் சேகர் அக்கா, தனிஷா அக்கா, தளிகா அக்கா, இலா அக்கா, இமா அக்கா, ப்பஜீலா ப்ர்வீன்அக்கா, மேனகா அக்கா, இஷானி அக்கா, அருணா அக்கா, வனிதா அக்கா, பிரபா அக்கா, செந்தமிழ் செல்வி அக்கா, ஆசியா அக்கா, ஜலீலா அக்கா, ஷர்மி அக்கா, சவுதி செல்வி அக்கா மேலும் கிச்சு கிச்சு மூட்டாமலே சிரிக்க வைச்சு ராத்தி எல்லாம் தூங்காம அரட்டை அடிகிற சுப்ஸ், சோனியா என்கிற இரண்டு குட்டி குட்டி அக்கா, இன்னும் சைலன்டா, கமெண்ட் அடிக்காம மறைபொருள் இழை படிக்கிற அக்காக்கள், பேர் விட்டு போன நிறைய அக்கா எல்லாம் மன்னிச்சுடுவாங்க, இவங்க ஒருத்தர் கிட்ட கேட்டா கூட எல்லோரும் ஓடிவந்து உதவி செய்வாங்க. நீ வேற அதிரா அக்கா நடத்தற அசத்தல் ராணி போட்டி வேற கலந்து அதுலே மனோ அக்கா, ஜூபைதா அக்கா கூட எல்லாம் போட்டி போடாதே! எதுவா இருந்தாலும் அக்காகளை மட்டும் கேளு, இந்த அட்மின் அண்ணா எப்பவும் பிஸியா இருப்பாரு, இந்த ஹைஷ் அண்ணா எதாவது இயற்ப்பியல், வேதியியல், அந்த இயல், இந்த இயல் என்று யாருக்கும் எதுவும் புரியற மாதிரி சொல்லமாட்டார், அருண் அண்ணா கிட்ட கேட்டா அவரு மொக்க போட்டே நீ எதுக்கு போன என்பதையே மறக்க அடிச்சுடுவாரு. அப்பதான் நீ நல்லா சமைச்சு மாமியாருக்கு போடறத பாக்கற ஊர் ஜனம் எல்லாம் உன்மேல் சந்தேக பட மாட்டாங்க! அதே போல் இனி உன் மாமியாரிடம் சண்டையிட கூடாது யாரவது பார்த்தால் மாமியார் இறந்தவுடன் உன்மேல் சந்தேகம் வந்துவிடும் என்று சொன்னார். லிலியும் மிக சந்தோஷமா நன்றி சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தாள்.

லிலியும் ஜிங் சொன்னதை விட யாருக்கும் சந்தேகமே வராதபடிக்கு மாமியாரை நன்கு கவனித்து கொண்டாள். இப்படி ஆறு மாதங்கள் புரண்டோடி விட்டது. லிலியும் மாமியாரும் மிக நெருக்கமான நண்பிகாளகி விட்டனர். ஊரே இப்படி போல் ஒர் மாமியார் மருமகள் இருக்க முடியுமா என்று அவர்களை உதாரணம் காட்டியது. லிலியின் கணவரும் இருவரின் ஒற்றுமயை பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தார். அந்த குடும்பமே மகிஷ்சியில் திளைத்து இருக்கும் போது ஒர் அழகான குழந்தையும் லிலிக்கு பிறந்தது. லிலி, கணவன், மாமியார் அனைவரும் மகிஷ்ச்சி கடலில் ஆழ்ந்தனர். அப்போது லிலிக்கு குற்ற உணர்வு உருத்த ஆரம்பித்து விட்டது. இவ்வள்வு ந்ல்ல மாமியாரை கொல்ல விஷம் கொடுத்து கொண்டு வருகிறொமே என்று வருந்த ஆரம்ப்பித்தாள். மன கஷ்டம் தாங்கமுடியாமல் மீண்டும் ஜீங் இடம் சென்று தன் மாமியார் திருந்தி விட்டதாகவும், தான் செய்த தவறையும் சொல்லி அழுதாள்.

திரு ஜீங் சிரித்து கொண்டே லிலியிடம் சொன்னார், லிலி நான் உன் மாமியாருக்கு கொடுத்தது விஷம் அல்ல அது வைட்டமின் மூலிகைகள், விஷம் உன் மனதில்தான் இருந்தது இப்போது அது இல்லை. நீ என்ன அடுத்தவர்களுக்கு கொடுக்கிறாயோ அது தான் திரும்பி உன்னிடம் வரும். நீ முதலில் மாமியாரிடம் வெறுப்பு, சினம் காட்டினாய் அதுவே உன்னிடம் திரும்பி வந்தது. பின் அன்பும் அரவணைப்பும் காட்டினாய் அது இப்பொது திரும்பி வருகிறது என்றார்.
லிலியும் சந்தோஷமாக வீடு திரும்பினாள்.

அருசுவை உறுப்பினர்கள், வசிப்பது பல நாடுகள், பல இனம், பல மதம் இது போல் பல பலகள் சொல்லலாம் ஆனால் அவர்களை எல்லாம் அருசுவையில் இணைத்து இருப்பது ஒன்று மட்டும் தான். அது அவர்களின் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை என்ற ஒன்று மட்டும் தான்.

அனைவருக்கும் ஒர் வேண்டுகோள். முடிந்தால் முயற்சி செய்யவும்,

இல்லாதவன் இருப்பவரிடம் பிச்சை கேட்கிறான். நாம் எல்லாம் என்ன பிச்சைகார்ர்களா? நம்மிடம் மற்றவர் (அப்பா, அம்மா, அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, கணவன், மனைவி, பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள்) அன்பு காட்டவில்லை என்று ஏங்கி அன்பை அவர்களிடம் இருந்து பிச்சை எடுப்பதற்கு, நம்மிடம்தான் அன்பு ஏராளமாக இருக்கிறதே பின் ஏன் எதையோ எதிர்பார்த்து மற்றவர்க்கு அன்பு காட்ட தயங்குகின்றோம். எதையும் எதிர் பார்காமல் அன்பை அள்ளி வழங்கி வள்ளாக மாறினால் அந்த அன்பு பல் மடகாக நம்மிடம் திரும்பி வரும், நாம் பிடித்து வைத்து கொள்ள அல்ல இன்னும் அதிகமாக் கொடுக்கதான்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சூப்பரான கதை சொல்லி நல்ல கருத்தையும் சொன்னீர்கள்.இதை படித்துவிட்டு எனக்குசிரிப்புவந்துவிட்டது.
அன்புடன்
சவுதி செல்வி

சவுதி செல்வி

அன்பு சகோதரி சவுதி செல்வி

மிகவும் நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இந்த கதை நான் ஏற்கனவே கேட்டு இருக்கேன்.. ஆனா நீங்க புதுசா அறுசுவை கதை சேர்த்துட்டீங்க போலிருக்கே... ;) நல்ல கதை... உண்மையில் இப்படி இருந்தா இப்போ இருக்க மாமியார் நிஜம்மாவே விஷம் குடுத்து நம்மை காலி பண்ணீடுவாங்கோ. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உங்கள் எழுத்துக்களிள் வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்கள் பிரதிபலிக்கிறது தானே? வாழ்க வளமுடன் ஹைஸ்.

அன்பு சகோதரி வனிதா, கவின்

இருவருக்கும் மிகவும் நன்றி.

சகோதரி கவின்: // உங்கள் எழுத்துக்களிள் வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்கள் பிரதிபலிக்கிறது தானே? வாழ்க வளமுடன் ஹைஸ்.//

உங்கள் கேள்விக்கு விடை ஞான யோகத்தை பற்றி பதியும் போது கிடைக்கும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஐயையோ ஐயோ.... சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த கதையாப்போச்சு, வேதாந்தம் சொல்கிறேன் எனச் சொல்லி சும்மா இருந்த (அப்பாவி):))மருமகள்மாரை எல்லாம் மூலிகை வாங்க அனுப்புவது முறையோ?:). நானும் கேள்விப்பட்ட கதைதான், இருந்தாலும் "அறுசுவை" பார்த்துச் சமமத்துக் கொடுத்ததால்தான், சுவையோடு அன்பும் சேர்ந்து மாமியாருக்கு கிடைத்திருக்கிறது.... அதுசரி என் கேள்விக்குப் பதில்...... :)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதரி அதிரா

உங்கள் கேள்விக்கு பதில்: உண்மை.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மிக்க நன்றி
ஐயையோ உண்மையா? அம்மா சொன்னாலும் நான் நினைப்பேன் அப்படியென்ன திருஷ்டி என்று. இனிமேல் கவனமாகத்தான் இருக்க வேண்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

1. மந்திரத்தை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்னேன். அது இயற்கையின் ஒலி வடிவம்.

2. தந்திரம்: வெள்ளை, சிகப்பு மற்றும் கருப்பு என்ற மூவண்ணமும், இடது வலது என்ற இரண்டு பிரிவும் உள்ளது.

2.1. வெள்ளை தந்திரம் : பிராணிக் ஹீலிங், ரெக்கீ ஹீலிங், அட்வான்ஸ்ட் வர்மம். இவை நல்லவைகளுக்கு மட்டுமே பயன் படும்.

2.2. சிகப்பு : ஓஷோ அவர்களை நிறைய பேருக்கு தெரியும், இது அவர் சொல்லும் பாதை. (அவர் கண்டுபிடித்தது அல்ல.) ஆண், பெண் உறவுகளின் மூலம் சில சித்திகள் அடையும் முறை. இவை நல்ல மற்றும் தீய வழிகளிலும், வழிகளுக்கும் பயன்படும்.

2.3. கருப்பு: தீயவைகளுக்கு மட்டும் பயன் படும். வைப்பு, சூன்யம் போன்றவைகள் இதில் அடங்கும்.

2.4. இடது, வலது : தீய வழி இடது, நல்லவழி வலது. இவைகளுக்கும் நாடிகளுக்கும் சில சம்பந்தம் உண்டு.

3. ரசவாதம் பற்றியும் ஏற்கனவே சொல்லியாகி விட்டது. சுருக்கமாக சொன்னால். இரும்பை தங்கமாக்கும் வித்தை என்றால் எல்லோருக்கும் புரியும். ஆனால் அது இங்கு குறிகோள் அல்ல தாழ்ந்த மனது அல்லது உயிரை உயந்த்தாக்குவது.

4. தசமகா வித்தை எனபதின் கருத்து ஆற்றல் சம்பந்தபட்டது என்றாலும் அதன் மூலம் மத சம்பந்தபட்டது.

5. தற்பாதுகாப்பு கலைகள் ஏராளம். களறி, வர்மம், பிரம்மகலை இவைகளின் ஆணிவேர் நம் நாடுதான். அது போல் தாய்ச்சீ, சீ குங், ஜூடோ, கராத்தே, குங் ஃபூ, தேக் கொண்டோ, ஜீத் கொண்டோ போன்ற சில தற்காப்பு கலைகள் பிற நாட்டில் உருவானவைகள். அனைத்து தற்காப்புகலைகளுக்கும் உடல் வலிவும், மனத்தை ஒருமுகபடுத்தி இயற்கை உள்ள ஆற்றலை பயன் படுத்தும் முறைகள்தான்.

6. வெண்கல உடல் என்பது ஒருவகை பயிற்சி. இந்த பயிற்சியில் சிறந்தவர்களின் உடலை அம்பு துளைகாது.

7. அட்டமா சித்தி (சிறப்பு ஆற்றல்):

7.1. அனிமா: உயிர் ஆற்றலை பரமாணுவை விட சிறியாதாக்குவது.
7.2. மகிமா: உயிர் ஆற்றலை பிரபஞ்சத்தை விட பெரியதாக்குவது.
7.3. லகிமா: உயிர் ஆற்றலை காற்றை விட இலகுவாக ஆக்குவது.
7.4. க்கரிமா: உயிர் ஆற்றலை பிரபஞ்சதிலேயே மிக கனமானதாக ஆக்குவது.
7.5. ப்ராப்த்தி: உயிர் ஆற்றலை பிரப்ஞ்சதில் எங்கு வேண்டுமானாலும் செலுத்துவது.
7.6. ப்ராகாம்யா: பஞ்ச பூத்தில் எதுவாக வேண்டுமானாலும் மாறுவது.
7.7. வசித்வம்: அனைத்து உயிர்களையும் வசிய படுத்துவது.
7.8. இசித்வம்: இறந்தவர்களுக்கும் உயிர் கொடுக்கும் ஆற்றல்.

8. அட்ட கர்மம் : மன திண்மையாலும், தவ வலிமையாலும் வாழவைப்பதும், தாழ வைப்பதும் அவர் அவர் ஊழ்வினைப் பயன் வந்து தூண்ட சான்றோன் தன்னிலைல் இயல்பாகச் செய்து முடிக்கும் செயற்கரிய செயல் தான் அட்ட கர்மம். இதை பற்றி திருவள்ளுவர் கூறியது

”கூற்றம் குதித்தலும் கைகூடும் தோற்றலில்
ஆற்றல் தவப்பட் டவ்ற்கு”

இதன் விரிவை திருமூல சித்தரும் திருமந்திரம் நாலாம் தந்திரமாகிய “திருவம்பல சக்கரம்” என்ற பகுதியில் கூறி உள்ளார். அவை:

8.1. தம்பனம் : நிறுத்துதல், கட்டிவைத்தல்.
8.2. வசியம்: தன் வச படுத்துதல்.
8.3. உச்சாடனம்: ஒருவன் நிலையை கிளர்ச்சியடையச் செய்து நிலைகொள்ளாமல் செய்தல்.
8.4. மோகனம்: பிறர் தன்னை மோகிக்க செய்தல்.
8.5. மாரணம்: பகைவர் உயிரை எடுத்தல்
8.6. பேதனம்: தனக்கு வேண்டாத இருவருகுள் பகை கொள்ள செய்தல்.
8.7. ஆக்ருஷணம் : பிறரை தன்பால் ஈர்த்து கொள்ளல்
8.8. வித்வேஷணம்: தன் பல பகைவர்களை அவர்களுகுள்ளாக பகை கொள்ள செய்தல்.

9. பஞ்சபட்சி : ”இன்பம் அணுவாம், இடர் அதற்கோர் மாமலையாம்” இதன் மூலநூல் பதிணெண்சித்தர்கள் இயற்றிய ”ஐம்புள் நூல்”. இது அணு சக்திக்கும் மேலானது, இது ஒரு கடல் என்றால் அதில் ஒர் துளி நீர் தான் சோதிடம் என்பது.

இந்த மறைபொருள் தலைப்புகள் மட்டும் இனி மறைந்த பொருளாகவே இருக்கட்டும். இனி மேல் அருசுவையில், இந்த தலைப்புகளில் எதும் கேள்விகள் தயவு கூர்ந்து கேட்க வேண்டாம், இதை தவிர்த்து மீதம் உள்ளது யோகம் உடலுக்காக (சர, வாசி யோகங்கள் நீங்கலாக), சோதிடம் (மனதிற்க்கு) இனிவரும் பதிவுகள் இருக்கும்.

நன்றி

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்