மறைபொருள் ரகசியங்கள்

"சீவாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே
அவன் அடி நாள்தொறும் சிந்தை செய்து
ஆகமம் செப்ப லுற்றேனே"

திருமுலர்

நேரம் கிடைக்கும் போது மந்திரம், தந்திரம், யந்திரம், ரசவாதம், சோதிடம், வர்மம், நுண் ஆற்றல் எனும் சத்தி மருத்துவம், மூவுலகம், யோகத்தில் ஹதயோகம், கர்மயோகம், இர்ரஜயோகம், ஞானயோகம், சரயோகம், வாசியோகம், தற்காப்புகலையில் வெண்கல உடல், நிஞ்ஜா, கினோசி, சீ குங், தசமகா வித்தை, அட்டகர்மம், பஞ்சபச்ஷி போன்ற சில ரகசிய மறைபொருள்களைபற்றி எனக்கு தெரிந்த சிறிதளவு பகிர்ந்து கொள்ளலாமா??? (365.25 நாட்களுக்கு மட்டும். அது ஒரு சுட்ஷம கணக்கு)

பி.கு: தனிஷா மேடம் திட்டுவது தெரிகிறது? அது என்ன 365.25 நாட்கள் பதில் 27 மார்ச் 2010 இரவு 23:59:59 (IST இந்திய நேரபடி)/ (18:29:59 (UTC/GMT)!!! அல்லது நடுவிலே தவறி சொன்னாலும் சொல்லிவிடலாம்.

ஊக்கம் கொடுத்த திரு அட்மின் அவர்களுக்கு நன்றி. முதலிலேயே நன்றியை கூறி விட்டேன் எதற்கு தெரியுமா? அவசரகாலத்தில் ஓடி வந்து அடிவாங்காமல் காப்பாற்றதான்!!!

ஹி ஹி சும்மா உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்தத்தான் !!!!! சரி காலை வணக்கம் (எங்க நேரப்படி

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

நீங்கள் மறைபொருளில் சொல்லிய நிறைய விஷயங்களில் உங்களிடம் நிறைய பொருள் விளக்கம் கேட்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஆனால் இனி கேட்க வேண்டாம் என்று சொல்லி விட்டீர்கள். உங்களிடம் மெயிலில் தொடர்பு கொண்டு கேட்கலாமா? கூடாதா?

நல்ல அழகான கதை சொல்லியிருக்கீங்க. ஓஷோவின் தத்துவங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். சுவாமி. சுகபோதானந்தாவின் "மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்" படித்திருக்கேன். சுகிசிவம் அவர்களின் நிகழ்ச்சி மிகவும் பிடிக்கும்.

இதில் கேட்கலாமா எனத்தெரியவில்லை. அந்தக் காலத்தில் அன்பான கணவன் மனைவியை பிரிப்பதற்கு மாமியார்கள் பில்லி, சூனியம் எல்லாம் செய்ததாக சொல்கிறார்களே அது உண்மையா? அவ்வாறு செய்ய முடியுமா. இன்றும் ஒரு சில இடங்களில் அவ்வாறு நடப்பதாகவும், இதனால் பலகுடும்பங்களில் ப்ரச்சனை ஏற்படுவதாக சொல்கிறார்களே உண்மையா? பில்லி சூனியம் பற்றி விளக்கமா சொல்லுங்கள்? இங்கு சொல்ல முடியாது எனில். இது என்னுடைய ஐடி

thanishababu@yahoo.com

விருப்பம் இருந்தால் இதில் சொல்லுங்கள். தவறாக கேட்டிருந்தால் விட்டு விடவும்

நன்றி ஹைஷ்

சகோதரி

தனிஷா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு சகோதரி திருமதி சேகர்

மாலை வணக்கம். யாராக இருந்தாலும் அவர் அனுமதிதால் மட்டுமே நம்மால் பிறரை டென்ஷன் படுத்த முடியும். நான் தான் அனுமதி தரவில்லையே எப்படி உங்களால்...???
எந்த கேள்வி வேண்டுமானாலும் நீங்கள் கேட்கலாம். அருசுவையில் வரம்புக்குள் முடிந்தவரை பதில் சொல்கிறேன்,

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி தனிஷா,

உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

முழுவதும் நிதானமாக இதனை பார்வையிட வேண்டும்.இந்த த்ரெட் நான் பார்வையிடுவதற்குள் உள்ளே போய்விட்டது.அப்பாடா இன்று பார்த்து விட்டேன்.இனி நானும் தொடர்ந்து படித்து விடுவேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சோதிடம்

(என் அபிப்ராயம் ) முதலில் சோதிடத்தை பற்றி சொல்வதற்கு முன், சோதிடம் என்பது ஒர் கத்தி அல்லது துப்பாக்கி என வைத்துக் கொள்வொம். அதை மூன்று பேர் பயன் படுத்துகிறார்கள், முதலாமவன் வாள் வீச்சில் வீரன், இரண்டாமவன் துப்பாக்கி சுடுவதில் நிகரற்றவன், முன்றாமவன் நம்மை போன்ற சராசரி மனிதன். இதில் யார் எந்த ஆயுத்தை எப்படி பயன் படுத்துவார்கள் என்று நமக்கு தெரியும். அதனால் சராசரி மனிதனுக்கு வாள் வீச தெரியவில்லை, துப்பாக்கி சுட தெரியவில்லை என்பதற்காக இந்த இரண்டு ஆயுதங்களுமே சரியில்லை என்பது முறையாகாது.

அதே போல் இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஒரே வகுப்பில் படித்தவர்கள் ஒரே மாதிரி புகழ் பெறமுடியுமா? அதுபோல் தனிமனித (சோதிட) திறமை வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். இல்லை என்றால் உலகம் முழுவதும் (இரண்டு பேரும் தயவு செய்து கோபித்து கொள்ளவேண்டாம்) அட்மின் 1, அட்மின் 2 ......அட்மின் இன்பினிடி, அதிரா 1, அதிரா 2...அதிரா இன்பினிடி என்றுதானே இருக்கமுடியும். வேறுபாடே இருக்காது அல்லவா?

சோதிடத்தில் கணிப்பது என்பது ஒரு குழந்தை பிறக்கும் போது இந்த சூரிய குடும்பதில் கோள்கள் எங்கு இருகிறது என்பதைதான் ஜாதகம் எழுதுவது என்கிறோம். அந்த ஜாதகத்தை பார்த்து பலன் சொல்வது என்பது வேறு விஷயம்.

சோதிடதில் பொதுவாக மேற்க்கத்திய ஜாதகம், கிழக்கத்திய ஜாதகம் என்று இரு பிரிவுகள் உள்ளது. முதலாவது சூரியனின் சுழற்சியை அடிபடையாகவும் இரண்டாவது சந்திரனின் சுழற்சியை அடிபடையாகவும் கொண்டது. இந்த சோதிடத்தை பற்றி சற்று விரிவாக இனி வரும் பதிவுகளில் காணலாம்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி தனிஷா,

எந்த கேள்விகள் வேண்டுமானாலும் (மின்னஞ்சலில்) கேளுங்கள்.

சிவப்பு தந்திரத்தில் ஆழ்ந்த் ஆராய்சிகள் செய்து இருக்கிறேன் ஆனால் அதை பத்து பேர்முன் பேசலாம், பொது மன்றத்தில் பதிக்க முடியாது. ஆன்மீகத்தில் எனக்கு தெரிந்து 79 நிலைகள் உள்ளது. அவரவர் நிலைக்கு ஏற்பதான் அவர்களுக்கு புரியும். உதாரணத்திற்கு, பஞ்ச பட்சி அதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பல் நூல்கள் வாங்கினேன். ஆனால் மூன்று வருடங்கள் படிக்க முடியவில்லை, அப்படியே படித்தாலும் ஏதும் புரியாது. ஏன் என்பதை சோதிடம் பற்றி பேசும் போது சொல்கிறேன்.

கருப்பு தந்திரம் என்பது உண்மை, பெரியம்மை எனப்படும் smaallpox Variola virus கிருமிகளை உலகத்தில் மூன்று நாடுகள் பாதுகாத்து வைத்து இருக்கிறார்களே அது ஏன்? கருப்பு தந்திரமும் உண்மை. பகல் உண்டு என்றால் இரவும் உண்டுதானே?

இதைவிட விளக்கம் வேண்டும் என்றால் – மின்னஞ்சல் அனுப்புங்கள் சொல்கிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

இன்றுதான் இதில் உள்ள பதிவுகள் அனைத்தும் ஒன்று விடாமல் படித்து முடித்தேன்.நிறைய எனக்குள் இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்தது.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு சகோதரி ஆசியா உமர்,

உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைத்த்து குறித்து மிக்க மகிழ்ச்சி. இந்த விடைகள் உங்களுக்கு கிடைக்க காரணமும் நீங்களேதான்.

ஆரம்பத்தில் எழுத்துதவி கொண்டு பதில் பதிவு செய்ய மிகவும் கடினமாக இருந்தது. நீங்கள் உங்கள் உறவினருக்கு சொல்லிய NHM Software நிறுவிபின் தமிழ் தட்டச்சு கற்று கொண்டு வருகிறேன். இல்லை என்றால் இந்த இரண்டு இழைகளையும் தொடங்கி, தொடர்ந்து இருக்க முடியாது.

உதவிக்கு என்றென்றும் நன்றி.

அதே நேரத்தில் இத்தகைய அரிய அருசுவை தளத்தை நிறுவி நிர்வாகித்து, எனக்கும் வாய்ப்பு அளித்து வரும் திரு அட்மின் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஷ் சார்,
வணக்கம். இந்த பதிவ இன்னும் முழுசா படிக்கல. படிக்கனும் ஏப்ரல் 20க்குள்ள. விமான பதிவ படித்துவிட்டேன். ஆஆஆஆஆஆஆ இத பத்தி அங்க போட்டாதான் அதுவும் சமீத்திய பதிவில் வரும். பின் வந்து படிக்க ஈசியா இரூக்கும்.

indira

மேலும் சில பதிவுகள்