சிக்கன் மசாலா

தேதி: March 28, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.8 (4 votes)

 

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மல்லி இலை - சிறிது
தனியாப்பொடி - 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்ப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
சீரகப்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
கேசரிகலர் - 1 பின்ச்
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
கறிபவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
(பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து அரைத்த பவுடர்)
பட்டை - சிறிது


 

தக்காளி, வெங்காயம், மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
சுத்தம் செய்த சிக்கனை நீர் வடிய விட்டு தயிர், உப்பு, மசாலாபொடிவகைகள், கேசரிபவுடர் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.
பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லி மற்றும் பட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட் அனைத்தையும் போட்டு எண்ணெய் விட்டு கரண்டியால் கிளறி விட்டு மூடி போட்டு சிம்மில் வைக்கவும்.
அவ்வப்போது கிளறி விடவும்.
எண்ணெய் பிரிந்ததும் மசாலாவில் கலந்த சிக்கனை சேர்த்து கிளறி மூடி விடவும்.
ஒரளவு வெந்ததும் கறிமசாலாத்தூளை சேர்த்து சிறிது நீர் விட்டு கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்கவும்.


சாதம் மட்டுமல்லாமல் ரொட்டி வகை, இடியாப்பம் அனைத்துக்கும் பொருந்தும் இந்த சிக்கன் மசாலா சுவையாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஸாதிகா அக்கா(சிக்கின்...)
சிக்கின் மசாலா செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. என் கணவருக்கு அதிகம் பிடித்துக்கொண்டது. நான் எப்பவும் சிறிய துண்டுகளாக வெட்டித்தான் கறி வைப்பேன், இம்முறை பெரிதாக வெட்டி தயிர் எல்லாம் சேர்த்து செய்தது வித்தியாசமான சுவையாக இருந்தது.

என் படம் பார்த்துவிட்டு அடிக்க வேண்டாம். கலரில் மாற்றம் உள்ளது, ஏனெனில் நான் தக்காழியும் கேசரிப் பவுடரும் சேர்க்கவில்லை. கறிபவுடர் என்பது வாசனைப் பவுடரைத்தானே சொன்னீங்கள். நான் உங்களிடம் கேட்டுச் செய்ய நேரமிருக்கவில்லை. உடனே செய்து உடனே பாராட்டையும் பெற்றுக்கொண்டேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு அதிரா.கறிப்பவுடர் என்பது என் குறிப்பிலேயே உள்ளது.முந்திரி,வேர்க்கடலை,பொட்டுகடலை போன்றவை சேர்த்து அரைத்த பவுடர்.கிரேவி கெட்டி பட சேர்ப்பதற்காக இந்த கறிபவுடரை சேர்ப்போம்.எதற்காக தக்காளி உங்கள் சமையலில் சேர்ப்பதில்லை??
படத்தைஇப்பார்த்துவிட்டு அடிக்க வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தீர்க்ள்.படத்தைக்காண வில்லையே?
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா,
என்ன இது நீங்களாகவே தூக்கி ஒரு பெயரை வைத்துவிடுவதா?:), கறிப்பவுடர் என்றால் கடையில் இருக்கு, மல்லி, மிளகாய், ஏனைய ஸ்பைஸஸ் எல்லாம் சேர்த்து செய்வது, நீங்கள் சொல்ல வேண்டும் என் கறிப்பவுடர் என்று, அப்போதானே எமக்கு சந்தேகம் வரும்:).

தக்காழி எப்பவாவது இருந்துவிட்டு ஆசைக்கு சேர்ப்பேன், மற்றும்படி சேர்ப்பதில்லை, அலர்ஜி உண்டு. என் சின்னவருக்கு, தக்காழிச் சாறு பட்டாலே அந்த இடம் தோல் தடிப்பாகும். எனக்கும் இருமல் வரும். அதனால் ஆசையாக இருந்தாலும், அதிகமாக தவிர்த்துவிடுவேன்.

நான் செய்யும் எல்லாக் குறிப்புக்களுக்குமே படம் எடுக்கிறேன், எங்கள் அட்மின் இப்ப சரியான மோசமெல்லோ?:) உடனே படங்களை இணைக்கிறாரில்லை, அதனால் உடனுக்குடன் அனுப்பாமல், தலைப்பு முடிய ஒட்டு மொத்தமாக எல்லாத்தையும் அவரிடம் அனுப்புவேன், அதன் பின்னரே உங்களுக்கு வரும். அதுவரை பொறுமை.... பொறுமை......

இன்று எங்களுக்கு ஒரு பெங்களூர் நண்பர் வீட்டில் லன்ஞ், விதம் விதமான சட்னி, குருமாக் கறிகளோடு ஒரு பிடி பிடித்துவிட்டு வருகிறேன். நேரமாகிறது. முடிந்தால் இரவுக்கு வந்து உங்கள் "சிக்கியை" சிக்க வைக்கப்பொகிறேன்,,,,,,,, கண்டுபிடியுங்கள் யார் அந்த சிக்கி...:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஐயோ..தப்புதான்மா.என் இஷ்டத்துக்கு எங்கள் வீட்டில் குறிப்பிடும் பெயரை(கறிப்பவுடர்)என் குறிப்பிலும் சொல்லி உங்களை குழப்பிவிட்டேன்.நீங்களும் ஸாதிகாக்கா குறிப்புகளை தவறாமல் பார்த்து இருந்தால் இந்த குழப்பம் வந்திருக்காதில்லையா? :-)
பெங்களூர் பிரண்ட் வீட்டில் வயிறைக்காயப்போட்டுவிட்டு நன்றாக வெட்டிவிட்டு வந்து என் சிக்கியை சிக்க வைக்க போகின்றீர்களா?அது ரொம்ப மஸ்தாச்சே?சூடாக ஒரு மல்லிடீ போட்டு குடியுங்கோ.சரியா?
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஸாதிகா அக்கா, இக் குறிப்பை இன்று செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். நன்றி உங்களுக்கு.

அதிரா, அதிரா... அந்த கறி பொடிதான் இந்த டிஷ்ஷின் ஹைலைட். மிஸ் பண்ணி விட்டீர்களே:) அடுத்த முறை செய்யும்போது மறக்காமல் அந்த பொடியை செய்து பாருங்கள். அதன் லின்க்:

http://www.arusuvai.com/tamil/node/9877

ரொம்ப தாங்க்ஸ் வின்னி.எனக்கே குறிப்பைத்தேடி லின்க்கை அனுப்பத்தோன்ற வில்லை நீங்கள் அனுப்பி விட்டீர்கள்.எங்கள் வீட்டில் சாதாரணமாகவே இப்படித்தான் செய்வோம்.அனைவரும் வீட்டில் விரும்பி சாப்பிட்டதற்கு மகிழ்ச்சி.
ஸாதிகா

arusuvai is a wonderful website

நன்றி வின்னி. அப்படியா அந்தக் கறிப்பவுடர் போடாமலே எனக்கு நல்ல சுவை கிடைத்ததென்றால், நல்லவேளை அதைப் போட்டுச் செய்திருந்தால் ஸாதிகா அக்காவிற்கு திருஷ்டி பட்டிருக்கும். ஸாதிகா அக்கா, குறிப்பிலே கறிப்பவுடரோடு லிங்கையும் போட்டுவிடுங்கள். இனிமேல் பார்ப்பவர்கள் குழம்பமாட்டார்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஐயோ திருஷ்டி பட்டு இருக்கும் என்று எல்லாம் பெரிய வார்த்தை கூறி இந்த கொதிக்கும் அக்னி வெயிலுக்கு தர்பூசணி ஜூஸால் குளிப்பாட்டி விட்டீர்களே.அதிராவின் உத்தரவு ..இனி கறிபவுடர் சேர்த்து என் குறிப்பை வெளியிட்டால் அந்த லின்க்கை இணைத்து விடுகின்றேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

இந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த சிக்கன் மசாலாவின் படம்

<img src="files/pictures/aa248.jpg" alt="picture" />

சிக்கன் மசாலா செய்து அழகாக படம் எடுத்து அனுப்பி இருக்கின்றீர்கள்.மிக்க நன்றி.
ஸாதிகா

arusuvai is a wonderful website