எனக்கு உடனே பதில் சொல்லுங்க

அறுசுவை தோழிகளே எல்லாரும் எப்படி இருக்கீங்க.

எனக்கு கர்ப்பகால சந்தேகத்தை தீர்த்தமாதிரி இப்போ குழந்தை வளர்ப்பு சந்தேகங்களுக்கும் பதில் சொல்லுங்க. என் பையனுக்கு(35 days) முகத்தில் வேர்க்குரு போல உள்ளது.Dr-இடம் கேட்டதற்க்கு முதல் 3 மாதம் அப்படித்தான் இருக்கும்னு சொல்றார். ஆனால் எனக்கு தான் மனசு கஷ்டமா இருக்கு. சரி மன்றத்தில் பார்த்தால் Johnson & Johnson products பத்தி நிறைய பேசியிருக்காங்க. நானும் J&J பேபி ஆயில் தான் என் பையனுக்கு use பண்றேன். தலைக்கும் பேபி ஹேர் ஆயில் தான். உடம்புக்கு பேபி சோப், பேபி ஷாம்ப்,பவுடர் எல்லாமே J&J products. பேபி லோஷன் எப்பருந்து use பண்ணனும். இந்த லட்சணத்தில் நிறைய வேற வாங்கியிருக்கார் எல்லாமே. அவரோட work பண்றவங்க வேற J & J gift pack நிறைய கொடுத்திருக்காங்க. சரி இவனுக்கு இதெல்லாம் use பண்ணக்கூடாதுன்னா சொல்லுங்க 2 பேர் இருக்காங்க இதை use பண்ண அது நானும் என் அம்மாவும் தான். அப்புறம் waste பண்ணவா முடியும் ஹா ஹா ஹா.

எனக்கு இப்போ என்ன சந்தேகம்னா நான் என் பையனுக்கு வேற ஏதும் company products use பண்ணனுமா? infantக்கு வேற என்னல்லாம் செய்யனும்னு உங்களுக்கு தெரிஞ்சதை (சளி பிடிக்காம இருக்க இந்த மாதிரி) தயவுசெஞ்சு எனக்கு சொல்லுங்க.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

உமாராஜ்,
நல்லபடி குழந்தை பிறந்துவிட்டதாக அறிந்தேன் வாழ்த்துக்கள். மலைவாழைப்பழம் சாப்பிட ஆசைப்பட்டீங்கள் இப்போ பயமெல்லாம் போச்சா.

இதே கேள்வி மன்றத்தில் ஏற்கனவே கேட்டு நிறையப் பதில்களும் கொடுத்திருக்கிறோம் எங்கேயென்று தெரியவில்லை. கிட்டத்தட்ட 8- 10 மாதங்களுக்கு முன்பாக இருக்கலாம் தேடிப் பாருங்கள், அல்லது நானும் கிடைத்தால் லிங் சொல்கிறேன் அல்லது இங்கேயும் பதில்கள் கிடைக்கும்.

உமா இப்பத்தானே பிறந்த குழந்தை என்பதால் மருந்துகள் எதுவும் பாவிக்க வேண்டாம். அவரின் உடைகளைப் பருத்தியாடையாகவே போடுங்கள். படுக்கை, போர்வை எல்லாமே பருத்தியாக இருக்கட்டும். ஒருவேளை கிரந்திக்குணமாகவும் இருக்கலாம். அதற்காகத்தான் குழந்தை வயிற்றிலிருக்கும்போதே அலர்ஜி இல்லாத உணவாக உண்ணச் சொல்வார்கள். என் நிலைமையும் இப்படித்தான் இருந்தது.

இப்போதும் நீங்கள் குளிர்மையான உணவுகளையும் யூஸ் வகைகளையும் எடுங்கள். (தாய்ப்பால் கொடுப்பதால்). அலர்ஜி உணவுகளைத் தவிர்த்து விடுங்கள்...... இதுதான் நம் முன்னோர்கள் சொன்னார்களோ... கலியாணம் கட்டினால் கால் கட்டு, குழந்தை பிறந்தால் வாய்க்கட்டு... என்று:).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

உமா சில குழந்தைகளுக்கு 40 நாட்கள் வரை அப்படி தான் இருக்கும்.
பேபி ஆயிலே போதும். பவுடர் கூட வேண்டாம்.
மற்ற எதுவும் பயன் படுத்த வேண்டாம்.

வேண்டுமானால், ஆலிவ் ஆயில், தேங்காஅய் எண்ணை பயன் படுத்தலாம். வெரும் காட்டன் ஆடைகள் போடவும். கீழே பேபி பெட் ரொம்ப சூடாகும். ஆகையால் காட்டன் சேலையை நான்காக மடித்து அதில் படுக்க வைக்கவும்.
ஜலீலா

Jaleelakamal

ஜான்சன் கம்பெனி நல்ல மார்க் தான்.அதுவே யூஸ் பண்ணலாம்.ஜலிலாக்கா சொன்ன டிப்ஸ்கூட செய்யலாம்.நல்ல காற்றோட்டமா இருக்குறமாதிரி குழந்தையை வைத்திருங்க.வேர்க்குரு மாதிரி இருக்குன்னா சந்தனம் பூசலாம்,ஆனா குழந்தைக்கு தடவலாமான்னு தெரியல.

உமா டோன்ட் வரி...அது கொஞ்சம் பெரிசானா தானா மாறிவிடும்.
ஜான்சன் அன்ட் ஜான்சன் கூட உபயோடிக்கலாம் தப்பில்லை.இருந்தாலும் எனக்கு விருப்பம் ஹிமாலயாஸ்...நீங்கள் எதைஉபயோகித்தாலும் அதன் பவுடரை மட்டும் பூசாதீர்கள்..குளிக்க வைத்ததும் லோஷன் தடவி விட்டு அப்படியே விடுங்கள்..பவுடர் நல்லதே அல்ல.
ஒருவேளை இனி அந்த க்ரீம் தான் அலெர்ஜியோ என்னவோ அதனால் கொஞ்ச நாள் நிறுத்தி பாருங்க..எண்ணை குளியல் கொடுங்க குழந்தைக்கு அப்ப சருமம் வரண்டு போகாது

உமா..!! சில குழந்தைகளுக்கு அப்படி இருக்கலாம். இப்ப நல்ல வெய்யில்காலமாக இருப்பதால் குழந்தைக்கு காட்டன் உடைகள், படுக்கை விரிப்புகளை பயன்படுத்துங்கள். முகத்திற்கு பவுடர் பூசவேண்டாம். தாய்ப்பால் மட்டும்தானே கொடுக்கிறீர்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். சரி ஆகிவிடும். குழந்தைக்கு என்ன பெயர் வைத்துள்ளீர்கள்?

உமா நிறைய க்ரீம் பவுடர் லோஷன் இருந்தால் உபயோகமாகும் ஒன்றிரண்டு வைத்துவிட்ர்டு மற்றது யாருக்காவதெல்லாம் கொடுத்து விடுங்கள்.எக்ஸ்பயர் ஆகி விடப் போகிறது..பேபி லோஷன் நாம் கூட உபயோகிக்கலாம்..
ரப்பர் ஷீட்டில் படுக்க வைப்பீர்களா?ஆமாம் என்றால் அதுவும் காரணமாக இருக்கலாம்.நல்ல ஈரத்தை உரிஞ்சும் காட்டன் நேப்பி துணி வாங்கி உனயோகிக்கலாம் அதனால் அப்படியே குழந்தையை தைரியமாக படுக்க வைக்கலாம்.

ஹாய் உமா!
என் குழந்தைகளுக்கு கூட அதுபோல் இருந்தது. யார் குழந்தையை பார்க்க வந்தாலும் முகத்தை தொடவோ, முத்தம் கொடுக்கவோ அனுமதிக்க வேண்டாம்.
குழந்தைகள் முகம் ரொம்ப சாஃப்ட். அதனால் நம் கைகளில் நமக்கே தெரியாமல் இருக்கும் கிருமிகள் குழந்தையின் மென்மையான சருமத்தினை பாதிக்கும்.

அன்பு அதிரா எப்படி இருக்கீங்க? உங்கள் வாழ்த்துக்கு நன்றி. ஆமாம் அதிரா நானும் இந்த கேள்விக்கான பதில்களை பார்த்தேன் J&J பற்றின விவாதம் அதில் தான் இருந்தது. ஆனால் விவாதம் ஒரு முடிவுக்கு வரலை. அதனால் தான் மறுபடி நான் கேட்டேன். உண்மை தான் அதிரா நான் ரொம்ப தான் வாயை கட்டுறேன். எல்லாமே யோசிச்சு தான் சாப்பிடுறேன்(மதுரைக்காரனுங்க ஒரு இட்லிக்கு எவ்வளவு சட்னி, சாம்பார் ஊத்தி சாப்பிடுவோம் தெரியுமா?). ஆனா இப்போ ரொம்ப தான் control பண்ணிட்டேன்.

//இப்போதும் நீங்கள் குளிர்மையான உணவுகளையும் யூஸ் வகைகளையும் எடுங்கள்//

அதனால் குழந்தைக்கு ஏதும் சளி பிடிக்காதா? ஏன்னா 2 நாள் முன்பு அவன் 2 முறை இருமினான். இத்தனைக்கும் நான் சளி பிடிக்கிற மாதிரி ஏதும் சாப்பிடலை.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

ஜலீலா மேம், ஆமா Dr கூட 3 மாசத்துக்கு சில குழந்தைகளுக்கு இப்படித்தான் இருக்கும்னு சொல்றார். நான் பவுடர் ரொம்ப கேர்புல்லாத்தான் அவனுக்குப்போடுறேன். அதுவுமே பால் வாடை வராமல் இருக்கத்தான். லோஷன் இப்ப வேண்டாம் 3 மாசம் போகட்டும்னு Dr. சொல்றார். ஏன்னு தெரியலை.

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

மேலும் சில பதிவுகள்