சமைத்து அசத்தலாம் - 11, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புத் தோழிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 10, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி -11 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம்,கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின் குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான்
கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை மனோ அக்கா(175), ஜூபைதா(31) இருவருடையதையும் சேர்த்துச் செய்யப்போகிறோம். (இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5 (arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து, செய்யுங்கள்.

வரும் செவ்வாய்க்கிழமை (07/04) முடிவடையும். புதன்கிழமை(08/04), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

தனிஷா, செல்வியக்கா, கீதாச்சல், உத்தமி, வனிதா, ESMSசெல்வி, ஸ்ரீ, கவி.எஸ், மேனகா,வின்னி, சைனாமஹா, சுரேஜினி, இலா, சுகன்யா, விஜி, இந்திரா, வத்சலா, ரேணுகா, அஸ்மா, துஷ்யந்தி, அரசி, சாய் கீதா, சீதாக்கா, ஜலீலாக்கா, ஸாதிகா அக்கா, மனோஅக்கா, அம்முலு அனைவருக்கும் மற்றும் ஆசியா, மைதிலி அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(30/03) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்னிடம் 3 -4 பேர், எப்போ மனோ அக்காவுடையதைச் செய்யப்போகிறீங்கள், என கேட்டபடி இருந்தார்கள்.... இதோ ஆரம்பமாகிவிட்டது. ஆவலுடன் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஓடிவந்து நிறையச் செய்து அசத்த வேணும், சரியோ?.

நான் பச்சை வேர்க்கடலை வடை ஸ்டெப் பை ஸ்டெப் படங்கள் எடுக்கப்போகிறேன். மனோ அக்கா, இன்னும் உள்ளே போய் ஒருநாள் கூட உங்கள் குறிப்புக்கள் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு வரவில்லை. முகப்பிலுள்ளதைப் பார்த்து, பச்சை வேர்க்கடலையும், வாழைக்காயும் பாகிஸ்தான் கடைக்குப் போய் வாங்கி வந்திட்டேன். இனித்தான் உள்ளே பார்த்துச் செய்யப்போகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

இன்று மனோ அக்கா சமையலில் காலை தக்காளி ரவா உப்புமா,மதியம் காளான் புலாவ் ,தெரிவு செய்தாச்சு.செய்து விட்டு பின்னூட்டம் கொடுத்து விடுகிறேன்.நான் பெயர் கேள்விபடாத நிறைய புது ரெசிப்பி இருக்கு.செய்து பார்க்கணும்.ஜுபைதா அவர்களின் சமையல் நாளை செய்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

பருப்பு சேமியா உசிலி
முட்டை பஜ்ஜி

indira

டிய‌ர் அதிரா, ரேணு, ம‌னோ அக்கா

இன்று மனோ அக்கா சமையைலில் இருந்து தக்காளி மிளகு ரசம் செய்தேன்.
மதியம் சாப்பீட்டு விட்டு அங்கு பின்னூட்டம் அளிக்கிறேன்.

ஜ‌லீலா

Jaleelakamal

அன்புள்ள அதிரா!

இந்த 11ம் பகுதிக்கு என்னைத் தேர்வு செய்திருப்பதற்கு முதலில் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த 11ம் பகுதி வரை வெற்றிகரமாக இந்தத் இழையை நடத்திக் கொண்டு, அனைத்து சகோதரியரின் சமையல் குறிப்புகளை தொடர்ந்து செய்யும் முயற்சியில் ஊக்கத்துடனும் ஆர்வத்துடனும் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கும், உங்களுடன் இணைந்து உங்களின் முயற்சியில் பங்கு பெற்றிருக்கும் ரேணுகாவின் ஆர்வத்திற்கும் என் அன்பான பாராட்டுக்கள்!!

மற்றவர்கள் ருசித்து பாராட்டிய, வித்தியாசமான சமையல் குறிப்புகளையே நான் ‘கூட்டாஞ்சோற்றில்’ அதிகம் இணைத்திருக்கிறேன். அவற்றை செய்து பார்க்கவிருக்கும் அனைத்து சகோதரிகளுக்கும் முன் கூட்டியே என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். யாருக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள், விளக்கம் தருகிறேன்.

ஆசியா வாங்கோ, இம்முறை றைவர் சீற்றைப் பிடித்துவிட்டீங்களோ?(பாவம் செல்வியக்கா:( ) மிக்க நன்றி.

இந்திரா, ஜலீலாக்கா மிக்க நன்றி. ஜலீலாக்கா இம்முறை நீங்கள்தானோ .....:)?...

மனோ அக்கா, ஆரம்பத்திலேயே வந்து ஊக்கம் கொடுக்கிறீங்கள் மிக்க நன்றி.

இன்னுமொன்று, முடியுமானவரை படங்கள் எடுத்து (முடிவில்) அட்மினுக்கு அனுப்பி வையுங்கள் எல்லோரிடமும் கமெரா இருக்கிறதுதானே. ஒவ்வொரு முறையும் சொன்னதுதான், ஆனால் கொஞ்சம் அதிகமாக ஞாபகப் படுத்துகிறேன். எல்லோரும் வாங்கோ ஆரம்பமாகிவிட்டது..... எங்கே போயிட்டீங்க.... சமையல் புலி.... சிங்கம்... மான்.... கோழி..... பூனை:)... எல்லாம் வந்து கலக்குங்கோ.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நமக்கு ட்ரைவர் சீட் எல்லாம் வேண்டாம்,அது ரொம்ப பொறுப்பானது,அப்புறம் ட்ரெயின் ஒழுங்காக போக வேண்டாமா?முதல் பெட்டியில் இடம் போதும்.நான் வரும் சில நாட்களுக்கு கொஞ்சம் பிசி.அதனால் முடியும் போது செய்து விடுவோம் என்று வந்தேன்,சில நாட்கள் முன்பு மனோ அக்காவிடம் பேசினேன்,என் மகளும் பேசினாள்.மிக இனிமையான குரல்,பாடுவது போல் இருந்தது.நல்ல பேசினாங்க.மகிழ்ச்சி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இன்று மனோ அவர்களின் தக்காளி ரசம் செய்தேன்.சுவை நன்றாக இருந்தது.அவருக்கு பின்னூட்டமும் கொடுத்து விட்டேன்.

அதிரா மற்றும் ரேணுகா நலமா? இதோ நான் வந்துட்டேன் பா.
மனோ அக்காவின் கத்தரிக்காய் தக்காளி கொத்சு, செள செள பீர்க்கை கூட்டு
செய்தேன் நன்றாகயிருந்தது .

என்றும் அன்புடன்,
மைதிலி.

Mb

மேலும் சில பதிவுகள்