எங்க ஊரு கல்யாணம்

வனிதாவும் சாய்கீதாவும் கல்யாணங்களைப் பற்றி சிரியா பகுதியில் பேசினார்களே, அதற்குப் பதில் எழுதலாம் என்று ஆரம்பித்தேன். ரொம்பப் பெரிய பதிவு ஆகிவிட்டது. இதை அங்கு போட்டால் நல்லா இருக்காது. அதனால் தனி இழையே போட்டுவிட்டேன்.

படித்து விட்டு தோழிகளும் மற்ற நாட்டு கல்யாணங்களைப் பற்றி உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.

நான் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (U.A.E.) இருக்கிறேன். இங்கே என்னோடு வேலை பார்த்த ஒரு இந்நாட்டுப் பெண்ணின் இளைய சகோதரியின் திருமணத்திற்குப் போயிருந்தேன். அந்த அனுபவத்தை எழுதுகிறேன்.

அதனோடு, மற்ற அரபு நண்பர்கள், செய்தித்தாள்கள் மூலம் தெரிந்து கொண்டவைகளையும் எழுதியிருக்கிறேன்.

தவறான தகவல்கள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள்.

இங்கே உள்ள கல்யாணங்கள் நம்மளோடதை கம்பேர் செய்தா ரொம்ப சிம்பிள்ன்னுதான் சொல்லணும். ஆனா அதுக்கு ஆகுற செலவிலேயே நம்ம ஊர்ல 5, 6 கல்யாணம் பண்ணிடலாம். (due to currency conversion rate)

அரசாங்கம் ஆண்களுக்குக் கல்யாணம் பண்றதுக்கு பண உதவி செய்யும். இன்னும் நிறைய உதவிகள் கிடைக்கும். ஆனால் அந்நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்தால் மட்டுமே உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டுப் பெண்களைத் திருமண‌ம் செய்தால் கிடையாது.

பெண்களுக்கு ஆண்கள்தான் நகை, கல்யாணச் செலவுக்குப் பணம், கல்யாண உடை, கல்யாணத்திற்குப் பிறகு இருக்க வீடு, விட்டுக்குரிய எல்லா சாதனங்கள், வேலையாட்கள், எல்லாம் கொடுக்க வேண்டும். இந்த செலவுகளுக்குப் பயந்து இந்த ஊர் இளைஞர்கள் வெளிநாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வது அதிகரித்துள்ளதால் திருமணமாகாத முதிர்கன்னிகளின் எண்ணிக்கைப் பெருகி விட்டது !!! அதைத் தடுக்கவே அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை.

சில பெண்களின் பெற்றோர்கள் அதிக வரதட்சணை எதிர்பார்த்து வரும் வரன்களைத் தட்டிக் கழிப்பார்கள் என்றும் கேள்விப்பட்டேன். நேரத்தப் பாருங்க..

என் கணவரின் மேலாளரின் (பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர்) மனைவியோடு பேசிக்கொண்டிருந்தபோது, எத்தனைக் குழந்தைகள் என்று கேட்டேன். அவர், 3 ம‌கள்களும், ஒரு மகனும் என்றவர், உடனே சொன்னார், "தேங்க் காட். ஒரே ஒரு மகன்தான்" என்று!!

இப்பொதெல்லாம் இந்த ஊர் இளைஞர்கள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குப் படிக்கச் செல்வதால் அந்நாட்டுப் பெண்களையே அதிகம் விரும்புகின்றனர். வரதட்சணையும் கொடுக்க வேண்டியதில்லையே, அதனாலும் இருக்கலாம்.

அனுமதிக்கப் பட்டிருந்தாலும், படித்த இளைஞர்கள் ஒன்றுக்கு மேல் திருமணம் செய்ய விரும்புவதில்லை. குடும்பத்தை நடத்த ஆகும் செலவும் மிக அதிகம் அவர்களுக்கு. இந்தியர்கள் 2 குழந்தைகளுடன் நிறுத்துவது போல், இவர்களுக்கு 4 குழந்தைகள்.

நம்ம ஊரில் ஒரு குடும்பத்தில் 5 பிள்ளைகள் இருந்தால், முதலில் மூத்தவருக்கு, பின் அடுத்தவர் என்று வரிசையாகத்தான் திருமணம் ஆகும். ஆனால் இவர்களோ, அப்படியெல்லாம் பார்ப்பதில்லை. 5 பிள்ளைகள் இருந்தால், முதலில் கடைசிப் பையனுக்கு/ பெண்ணுக்கு வரன் அமந்தால் கூட திருமணம் முடித்து விடுவார்கள். பெரும்பாலும் பையன்களே பெண்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

விவாகரத்தும் அதிகம்; மறுமணமும் அதிகம். இதில் ஆண், பெண் வித்தியாசம் இல்லை.

கல்யாணத்தில் முக்கிய நிகழ்ச்சியான ஒப்பந்தத்தில் இரு தரப்பும் கையெழுத்திடும் நிகழ்ச்சியை முதலிலேயே வீட்டில் வைத்து முடித்துக் கொள்வார்கள். பிறகு நிதானமாக ஒரு நாள் மண்டபத்தில் விருந்து ஏற்பாடு செய்பவார்கள். ஆண்கள் ஒரு ஹாலில், பெண்கள் ஒரு ஹாலில் இருப்பார்கள்.

பெண்கள் ஹாலில் வாசல் பக்கம் இரு வீட்டுப் பெண்களும் வரிசையாக நின்று வருபவர்களை கட்டிபிடித்து, கன்னத்தால் கன்னத்தை உரசி வரவேற்கிறார்கள்.

இரு தரப்பிலும் பாட்டு, ஆட்டம், பாட்டம்தான். பெண்கள் மட்டுமே எனபதால், பர்தாவைக் கழட்டிவிட்டு இளம்பெண்கள் எல்லாம் சேர்ந்து நடனம் ஆடுவார்கள். பெண்ணின் நெருங்கிய சொந்தங்களில் உள்ள பெண்கள், மணப்பெண்ணை மிஞ்சிய மேக்கப்பும், உடையும் போட்டிருப்பார்கள். இதில் சேராத மற்றப் பெண்கள் பேசிக் கொண்டும், வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் இருப்பார்கள்.(நானும்தான்).

வேலைகாரப் பெண்கள் டீ, கவா காஃபி, ஸ்வீட்ஸ் போன்றவை பரிமாறுவார்கள்.

இதில் ஆட்டம், பாட்டம் எல்லாம் ஒவ்வொரு குடும்பத்தைப் பொறுத்தது. கண்டிப்பான சிலர் கொஞ்சமும் அனுமதிப்பதில்லை. சில குடும்பத்திலோ, இதற்கென தனியே, பாட்டு, நடனக் குழுவையே ஏற்பாடு செய்வார்களாம்.

இப்படியே கொஞ்ச நேரம் போனபிறகு, மணப்பெண் வருவார், வெள்ளை கவுனில் தேவதை மாதிரி. உடன் மணமகனும் வருவார். வரும் நேரம் எல்லாப் பெண்களும் படபடவென பர்தாவை எடுத்து அணிந்து அமைதியாக உட்கார்ந்து விடுவார்கள்.

இருவரும் கைப்பிடித்து ஹால் வாசலிலிருந்து மெல்ல அடி மேல் அடி வைத்து நடந்து மேடையில் போய் அமருவர். சுமார் அரைமணி நேரம் ஆகும் அதற்கு மட்டும். அதை ஒரு பெண் வீடியோகிராபர் படம் பிடிப்பார்!!. தரையில் நீண்டு புரளும் பெண்ணின் உடையை ஒருவர் சரிசெய்து கொண்டே பின்னால் போவார். சரிசெய்யும் பெண்ணின் உடையை இன்னொருவர் சரி செய்தார்!!

நான் சென்ற கல்யாணத்தில் மணமகன் வரவில்லை. அவர் மிகுந்த மதப்பற்று உள்ளவர் என்பதால் பெண்களிடையே வர மறுத்துவிட்டார் எனப் பெண்ணின் சகோதரி சொன்னார். மணப்பெண் மட்டுமே வந்தார். பெண்ணின் இளைய சகோதரன் அவளைக் கைப்பிடித்து அழைத்து வந்தார். அவரை சில நடுவயதுப் பெண்கள் ஏதோ கிண்டல் செய்ய, அவர் வேறுவழியில்லாமல் அமைதியாகச் சிரித்துக் கொண்டுப் போனார். ("உன் கல்யாணத்தில் நடப்பதற்குப் பயிற்சி எடுக்கிறாயா" என்று கேட்டிருப்பார்களோ??)

பிறகு அவர்கள் அமர்ந்தவுடன் எல்லாரும் சாப்பிடக் கிளம்பிவிடுவார்கள்!! நம்ம ஊரைப் போல வாழ்த்து கூறவோ, பரிசு வழங்குவதோ இல்லை!!

சாப்பாடுதான் மிக விசேஷம் கல்யாணங்களில்! அவரவர் வசதிக்கேற்ப விருந்து இருக்கும். ஒரு பெரிய தாம்பாளத்தில் பிரியாணி, குபூஸ், சிறு கோப்பைகளில் ஹமூஸ், முதப்பல், மைதா தோசை மாதிரி செய்து அதன் மேல் சாம்பார் போல ஊற்றியது, பழ சாலட், ஸ்வீட்கள் என்று இன்னும் என்னென்னவொ நிறைந்திருக்கும். ஒரு வட்ட டேபிளில் இருக்கும் உண்வை 4 பேர் பகிர்ந்து உண்ண வேண்டும். முக்கால்வாசி வீணாகத்தான் போகிறது.

சாப்பாடு முடிந்ததும் விடைபெற்றுக் கிளம்பிவிட்டேன். வேறு நிகழ்ச்சிகள் ஒன்றும் இருக்காது என்று சொன்னார்கள். மணமகளை மணமகனின் வீட்டுக்கு அழைத்துப் போவார்களாம்.

குடும்ப‌ங்களின் செல்வாக்குக்கு ஏற்ப வீடு, மண்டபம் அலங்கரிப்பு, வாண‌வேடிக்கை, போன்றவை இருக்கும்.

பெண் தரப்பில் வரதட்சணை இல்லை என்பது நல்ல விஷயம் என்றாலும், ஆண்களுக்கு அது சிரமமாக இருக்கிறதே. இங்கும் அதனால் பெண்கள்தானே பாதிக்கப் படுகிறார்கள்.

இன்னொன்று, பெண் நகைகள் அள்ளிப் போட்டுக் கொண்டிருக்கவில்லை. மிக மிக சிம்பிளாகவே அணிந்திருந்தாள்.

கல்யாணத்தில் என்னை மிகக் கவர்ந்த விஷயம், மணமகன் வீட்டினர் என்ற பந்தா இல்லாதது. நம் ஊர் என்றால் மணமகன் வீட்டினரை விழுந்து விழுந்து கவனிக்க வேண்டுமே ! இங்கே அப்படி ஒன்றுமே இல்லை. யார் பெண் வீடு, யார் பையன் வீடு என்றே தெரியவில்லை. அவரவர் தேவைக்கு வந்தார்கள், சாப்பிட்டார்கள், கிளம்பினார்கள்.

போன வாரம் அந்தப் பெண்ணின் திருமணம். அழைத்திருந்தாள். நடந்த இடம் இங்கிருந்து கொஞ்சம் தொலைவு, அதனல் போக முடியவில்லை.

இப்படி தான் திருமதி ஹுசேன்
இவருடைய கொலீக் பெண்ணுக்கு திருமணம் சிரியனாம்..இவர் சொல்றார் 2 வாரமா எதுவோ க்லாசுக்கு போகுதாம் இப்ப போய் இந்தபொண்ணு என்ன படிக்க போகுதுன்னு பார்த்தால் மணமேடையில் எப்படி நடக்க எப்படி நிற்க என்று கத்துக்க போகுதாம்:-0
அதே மாதிரி சிடியை தான் பார்த்தேன்
நான் போகவில்லை.பொண்ணு நல்ல ஃபேஷன் ஷோ மாதிரி அழகா கேட் வாக் போடுது..பெண்களும் ஆண்களும் சுத்தி சுத்தி ஆட்டம்.
ஒரே கலகலப்பாக இருக்கு பார்க்க..கைய்யில் மண்மகனும் மணமகளும் பூச்செண்டை பின்னால் எறிந்து விட்டு போனார்கள் அது தான் எதுக்கு என்று புரியவில்லை.
ரொம்ப சிம்பிளாக இருந்தது ஆனால் நீட்டாக இருந்தது...சாப்பிட வைத்த பொருட்கள் நம்ப ஊர் சாப்பாடின் ருசியில் 20% கூட வராது என்றாலும் அது அலஙரித்து வைத்திருந்த அழகுக்கே வயிறு நிறைந்து விடும்.

இன்னுமொரு முக்கிய விஷயம் இங்கு பெண்கள் திருமணமாகாமல் கஷ்டப்படுவது இங்கு பெண்களை கட்டி மேய்ப்பது ரொம்ப கஷ்டம்..நம்மை போல விரலுக்கேத்த வீக்கம் கெடையாது...வரவுக்கு மீரிய செலவு.
குறிபா லெபனீஸ் அந்த பெண்களை திருமணம் செய்தால் சுத்தமா கட்டுப்படி ஆகாதம் அப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கையை தான் விரும்புவார்கள்..அவர்களுக்கு எளிமையாக வாழ்வது என்றால் எப்படி என்றும் தெரியாது.
நான் இங்கு முதல் முதலாக ஒரு ஐடியா இல்லாமல் 1 மாசத்துக்கு முன்பே கணவர் அவசரமாக வரவழைத்து விட்டார்..அதனால் வருவதற்கு முந்தைய நாள் தான் வீட்டில் பொருட்கள் வாங்கி வைத்தார்...அதைக் கண்டு இவருடைய சிரியன் நண்பருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை..எப்படி உன் மனைவி இதற்கெல்லாம் சம்மதிக்கிறார்..எங்கள் வீடுகளின் புருஷனே வேண்டாம் என்று போய்விடுவார்களாம் ..மணப்பெண் வரும்பொழுது ஃபுல் செட்டப்பில் இருந்தால் தான் குடும்பம் நடத்துவார்களாம்...இவர் சொன்னாராம் முந்தைய நாள் இரவு பொருட்கள் வாங்கினதுக்கே உனக்கு இவ்வளவு ஆச்சரியம்...நான் பொருஏ வாங்காமல் காலி வீட்டில் விட்டாலும் என் மனைவி என்னுடன் குடும்பம் நடத்துவாள் என்று..அவருக்கு இன்றும் ஆச்சரியம் இன்றும் சொல்லுவார் அதிசயமாக...சொன்ன மனுஷன் அதுக்கு பிறகு இப்ப ரெண்டு கல்யாணம் பன்னியாச்சு காரணம் அவளை அஃப்போர்ட் பன்ன முடியலை என்றராம்
பிறகு திருமதி ஹுஸென் எனக்கொரு சந்தேகம் இங்கு சில லோகல்ஸ் வில்லாக்களில் வீட்டின் மேலே தேசிய கொடி பறக்கிறதே நான் கூட தேச பக்தி என்று விட்டு விட்டேன் ஆனால் கணவர் சொல்கிறார் வீட்டில் வயதுக்கு வந்த பெண் இருக்கிறாள் அதனால் நல்ல வரன் வந்தால் நாங்கள் தாயார் என்பதற்கு அடையாளமாக கொடி வைக்கிறார்களாம் நிஜமாகவா?

ஆமாம் தளிகா,

ஒவ்வொரு டேபிளையும் மெனக்கெட்டு மிக அழகாக வண்ண, பட்டு டேபிள் க்ளாத், பூ வகைகள் கொண்டு அலங்கரித்திருந்தார்கள். உண‌வு டெக்கரேஷனும் சூப்பர்.

தேசியக்கொடி பறப்பதற்கு இப்படி ஒரு அர்த்தமா? தெரியவில்லையே, விசாரித்து விட்டு சொல்கிறேன்.

உங்களுடன் பேசுவது இதுதான் முதல் முறை என நினைக்கின்றேன்.நலமா?இப்போது ஆரம்பித்த திரட் நன்றாக உள்ளது.அழகாக விளக்கி உள்ளீர்கள் அமீரக திருமணத்தைப்பற்றி.பிழைகள் இல்லாமலும்,தெளிவாகவும் எழுதியமைக்கு பாராட்டுக்கள்.இதே திரட்டில் மற்றவர்களும் தாங்கள் வசிக்கும் நாட்டில்,ஊரில் நடக்கும் திருமணத்தைப்பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

எனக்கு தெரிந்த கேட்ட, நேரில் பார்த்த, கேள்வி பட்ட அரபி பெண்கள், கல்யாணம் பற்றியும் சொல்கிறேன்.

மிஸஸ் ஹூசைன், மற்றும் தளிக்கா சொல்வது மிகச்சரியே.

அப்ப்டியே தேவதை மாதிரி உடை பார்க்கவே ரொம்ப நல்ல இருக்கும்.

முக்கியமா கல்யாணத்திற்கு முன் மெகந்தி அப்ப அப்பா அது தான் மெயில் அவர்களுக்கு அதுவும், பேஷியல், மேக்கப். இதுக்குதான் அரபி பெண்கள் அவ்வளவு செலவு செய்கிறார்கள்.

தளிக்கா செல்வது போல் பெண் வயதுக்கு வந்து விட்டால் வீட்டின் வெளியே கொடி கட்டி விடுவார்கள்.

கல்யாணத்தில் சாப்பாடு, குபூஸ், ஹமூஸ், கப்சா, நிறைய வெரைட்டியான புட்டிங் வகைகள். நம் மைதா தோசை போல் ஆனால் இனிப்பில்லாமல் குட்டி குட்டி யாஇருக்கும் அதும் ரொம்ப முக்கியவமான அயிட்டம் போல இருக்கு.
குலோப் ஜாமுன் மாதிரி ட‌ம்பிளிஙஸ் இது ரொம்ப‌ முக்கிய‌ம், ப‌ழ‌வைக‌ள் வித‌ வித‌ மாக‌ இருக்கும்.

க‌ல்யாண‌த்தில் பெண்க‌ள் த‌னி ஆண்க‌ள் த‌னி தான் ஆகையால் எல்லோருடைய‌ டிரெஸுமே ரொம்ப‌ கிளாம‌ராக‌ தான் இருக்கும்.

கையில் வ‌ங்கி போடும் இட‌ம் எல்லாம் கூட‌ மெக‌ந்தி போட்டு இருப்பார்க‌ள்.
வ‌ழ‌க்க‌ம் போல் இர‌ண்டு கைக‌ள், கால் முழ‌ங்கால் வ‌ரை மெக‌ந்தி , இது சின்ன‌ குழ‌ந்தைக‌ள் முத‌ல் கிழ‌விக‌ளும் ரொம்ப‌ ஆர்வ‌மா போட்டு கொள்வார்க‌ள்.

சின்ன‌ சின்ன‌ விஷேங்க‌ளுக்கு கூட‌ மெக‌ந்தி இல்லாம‌ல் முடியாது.

என் சொந்த‌ கார‌ பெண் ரொம்ப‌ நாளா கூப்பிட்டு கொண்டு இருந்தால் வாங்க‌ பிரீயா மெக‌ந்ஹ்டி போட்டு விடுகீறேன், என்று.

நானும் நேர‌ம் கிடைக்காத‌தால் வ‌ரேன் வ‌ரேன் என்று சொல்லி ஒரு வ‌ருட‌ம் ஆகிவிட்ட‌து.
இந்த‌ த‌ட‌வை க‌ல்யாண‌ நாளுக்கு கை நிறைய‌ கால் முழுவ‌தும் மெக‌ந்தி போட்டே ஆக‌னும் என்று நானும் போனேன் அந்த‌ பிர‌ப‌ல‌ பியுட்டி ச‌லூன்க்கு, மாலை 4.30 க்கு சென்றேன். இர‌வு 9 ம‌ணிக்கு தான் வீடு திரும்பினேன்.
அப‌ப் கூட‌ அங்கிருந்து வ‌ர‌ ம‌ன‌தில்லை.

அன்று நான் இருந்த‌ ச‌ந்தோஷ‌த்துக்கு அள‌வே இல்லை.

பெரிய‌ ச‌லூன், ஒன்லி சேக் மார்க‌ள், இமிகிரேஷ‌ன், க‌வ‌ர்மெண்ட் உத்தியோக‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் ம‌ட்டுமே வ‌ரும் இட‌மாம் அது. ஒன்லி லேடிஸ்.

ஒரு ப‌க்க‌ம் பேஷிய‌ல் ந‌ட‌க்குது ஒரு ப‌க்க‌ம் பெடிகியுர் , மெனிகியுர், ஒரு ப‌க்க‌ம் ஐபுரோ.
ஒரு ப‌க்க‌ த‌லைக்கு மெக‌ந்தி,

ஆனால் இர‌ண்டு பெரிய‌ ஹாலில் மெக‌ந்தி எம்மாடி ராணி போல் உட்கார‌வைத்து அர‌ன்ம‌ணையில் உள்ள‌ வ‌ட்ட‌ வ‌டிவ‌ பில்லோ இர‌ண்டு கையும் வ‌லிக்காம‌ல் இருக்க‌, காலுக்கு ஒரு வ‌ட்ட‌ வ‌டிவ‌ பில்லோ, மெக‌ந்தி இர‌ண்டு கை முழுந்தும் போட்டு விட்டு அது காய‌ வைக்க‌ ப‌க‌க்த்தில் ஒரு பேன் வேறு.

நான் இது வ‌ரை பியுட்டி பார்ல‌ரே போன‌தில்லை ஒரு முறை ஈதுக்கு முன் போன‌வ‌ருட‌ம் பெடிகியுர் செய்ய‌ போனேன், அதிலிருந்து அவ‌ர்க‌ள் செய்த‌ முறிஅ பார்த்து அப‌ப்டியே வீட்டில் நான் செய்து கொள்வ‌து.

ச‌ரி ஒரெ கால் பித்த் வெடிப்பு அத‌ற்கு வீட்டில் தான் நானே ப‌த்து நாள‌க்கு ஒரு முறிஅ உட‌கார்ந்து கிளீன் செய்வேன்.

அதையும் அங்கேயே முடித்து கொள்ளலாம் என்று. நல்ல பெரிய வசதியான சோபாவில் உட்காரவைத்து சூப்பரா பெடிகியுர் செய்து விட்டார்கள் செய்து முடித்து கடையசியில் ஒரு பிங்க் கலர் திரவம் போட்டு காலை கழுவி விட்டார்கள்.

இத‌ற்கு முன் ரோடில் ந‌ட‌ந்து போகும் போது , அர‌பி பிலிப்பைனிக‌ள் பாத‌த்தை பார்த்தால் அப்ப‌டியே கிள்ளி விட்டா ர‌த்த‌ம் வ‌ருவ‌து போல் இருக்கும். சே ந‌ம்ம‌ கால் த‌னே இப்ப‌டி இருக்கு என்று நினைத்து கொள்வேன்.

அந்த‌ சொந்த‌ கார‌ பொண்ணு இனி ஒரு வார‌த்திற்கு உங்க‌ள் பாத‌ம் ரோஸ் க‌ல‌ரில் இருக்கும் என்றார்க‌ள்.பார்த்த‌ இதான் விஷிய‌ம் போல‌ அந்த‌ பொண்ணு என‌க்கு ம‌ட்டும் டீயும் கொண்டு வ‌ந்து கொடுத்தார்.
அந்த‌ அழ‌கான‌ மெக‌ந்திகைய‌ பொட்டோ எடுத்தும் வைத்து கொண்டேன்.
அன்று பொழுது என‌க்கு சூப்ப‌ர் ,

மெக‌ந்தி போட‌ இன்னொரு பெரிய‌ ஹால் ந‌ல்ல‌ கார்பெட், சுற்றிலும் கீழே உட்காரும் சோபா போட்டு இருந்த‌து, பிற‌கு சுவ‌ர் முழுவ‌தும் என்ன‌ற்ற‌ கால் கைக‌லுக்கு போடு சிடைன்க‌ள். அங்கு டீவும் ஓடுது எல்லோரும் இழ்ட‌த்து பாட்டு ப‌டி கொண்டு. போடு கீறார்க‌ள்.

க‌டைசியில் அதை ந‌ட‌த்துப‌வ‌ர் ய‌ர் என்று பார்த்தால் மேங்க்ளூர் லேடியாம். மெக‌ந்தி கோன் எல்லாம் அவ‌ர்க‌ளே தான் வீட்டில் த‌யாரித்து கொண்டு வ‌ருவார்க‌ளாம்.
கால் கை ந‌க‌த்துக்கு என்று த‌னி மெக‌ந்தியாம், அது அப்ப‌ போட்ட‌து இன்னும் கூட‌ என் கால் ந‌க‌த்தில் க‌ல‌ர் போக‌ வே இல்லை முன்று மாத‌ம் ஆகிற‌து.

என்ன‌ தோழிக‌ளே போர‌டித்து விட்டேனா?
ஜ‌லீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்