உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல்

தேதி: March 30, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய உருளைக்கிழங்கு – 2
பச்சை பட்டாணி – அரை கப்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பூண்டு – 3 பல்
கறிவேப்பிலை – 4 இலை
கடுகு - தாளிக்க
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
தனியா தூள் – அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு


 

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நீளமான துண்டுகளாக நறுக்கவும். பூண்டினை நசுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கினை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
ஒரு நாண் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகை தாளிக்கவும். பின்னர் அதில் நசுக்கி வைத்திருக்கும் பூண்டினை போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் பூண்டுடன் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தினை போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதுனுடன் உருளைக்கிழங்கினை போட்டு வதக்கவும்.
பிறகு பச்சை பட்டாணி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
தண்ணீர் ஊற்ற தேவையில்லை. குறைந்த தீயில் சுமார் 15 நிமிடம் வேக வைக்கவும். 5 நிமிடத்திற்கு ஒரு முறை நன்றாக கிளறி வேக விடவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு வெந்தவுடன் ஒரு முறை கிளறி விட்டு மேலே கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி வறுவல் ரெடி. இந்த குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹாய் திருமதி கீதா,

ஒரு சின்ன சந்தேகம்.....பட்டாணியை ஊர வைத்து ,மற்றும் அதை வேக வைக வேண்டுமா ????........இந்த சமையல் குறிப்பை பார்த்தும் செய்ய ஆசைய இருக்கு....நேரம் கிடைக்கும் போது பதில் தரவும்.......

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ,
எப்படி இருக்கிங்க? கொஞ்சம் லேட்டாக பதில் கொடுப்பதற்கு தவறாக நினைக்க வேண்டாம்.
Fresh அல்லது frozen பச்சை பட்டாணி அப்படியே சேர்த்து சமைக்கலாம்.
ஆனால் காய்ந்த பச்சை பட்டாணியினை சில மணி நேரம் ஊறவைத்து பின் அதனை வேகவைத்து தான் சேர்க்க வேண்டும்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

ஹாய் கீதா,

மிகவும் நன்றி கீதா அக்கா,....நான் உங்கள் பதில் பார்த்தபின் தான் இந்த சமையலை செய்ய வேண்டும் என நினைத்தேன்.......நன்றி.......

அன்புடன்
ஸ்ரீ

ஸ்ரீ,
மிகவும் நன்றி . எப்படி இருக்கிங்க? கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்

i tried this receipe. it is very nice. i m new to this site pa.

கீதா நேற்று உங்க உருளை-பட்டாணி வறுவல் செய்தேன்.... ரொம்ப ஈஸியாவும், சுவை அருமையாகவும் இருந்தது...... செல்வி அம்மாவின் முட்டை மசாலா சாதத்தோடு சாப்பிட சூப்பரா இருந்தது...... என் ஹஸ்-ம் நல்லா இருக்குன்னு சொல்லிட்டே இருந்தார்....

அநேக அன்புடன்
ஜெயந்தி