மைக்ரோ அவன் தேங்காய் பர்ஃபி

தேதி: March 30, 2009

பரிமாறும் அளவு: 20 பர்ஃபிகள் வரும்.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

தேங்காய் துருவல் - 2 கப்,
சர்க்கரை இல்லாத கோவா - 1 கப் (விருப்ப பட்டால்),
சர்க்கரை - 1 கப்,
பால் - 2 கப்,
ஏலக்காய் - 2,
நெய் - 1 மேசைக்கரண்டி.


 

மைக்ரோ அவன் பாத்திரத்தில் துருவிய தேங்காய், சர்க்கரை, பால் சேர்த்து மீடியம் சூட்டில் 10 நிமிடம் வைக்கவும் (இடையிடையே கலக்கி விடவும்).
வெளியே எடுத்து, கோவா சேர்த்து கலக்கி மீண்டும் 5 நிமிடம் வைக்கவும்.
(கோவா சேர்க்கவில்லையானாலும் பாத்திரத்தில் உள்ளதை கலக்கி 5 நிமிடம் அவனில் வைக்கவும்).
வெளியே எடுத்து நெய் சேர்த்து நன்கு கலக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி, துண்டுகளாக்கவும்.
சுவையான சுலபமான தேங்காய் பர்ஃபி ரெடி.


மேலும் சில குறிப்புகள்


Comments

தேங்காய் சம்பந்தப்பட்ட எல்லா டிஸ்ம் சூப்பரா இருக்கும் அதிலும் பர்பியா எனக்கு ரொம்ப பிடிக்கும் சூப்பர்