ஹாய் எனக்கு திருநெல்வேலி உங்களுக்குமா?

திருநெல்வேலி சகோதரிகள் எல்லாரும் வாங்க பா சேந்து கதைக்கலாம்

Laddu epadi seiyanum

வாழ்க வளமுடன்

என்னலே, எல்லாருஞ் ச‌வுக்கியமா?

ஊரு ஊரா த்ரெட் தொடங்குதாவளே, நம்ம ஊருக்குன்னு ஒண்ணையும் காணோமேன்னு நெனச்சுகிட்டே இருந்தேன், இன்னா தொடங்கிபிட்டாவள்ல.

அம்மா சுப்ஸ், தின்னவேலி பக்கம் "பேச"த்தானே செய்வாவ‌, "கதைக்க" மாட்டாவ‌ளே? ஊர‌விட்டு வந்து கொறநாளாச்சோ?

அதாருவே இங்கன‌ வந்து லட்டு எப்படி செய்யன்னு கேக்கது? தின்னவேலில அல்வாதான் பேம‌சு. லட்ட பத்தி கேக்கணும்னா திருப்பதிகாரவுகள்ட கேளு, செரியா?

இவ்ளோ அலப்பர விடும்போதே எல்லாருக்கும் வெளங்கிருக்கும் நா தின்னவேலிகாரிதேன்னு. ஆமாப்பு, எனக்கும் தின்னவேலிச் சீமதான்.

ஆத்தி அக்கா திருநெல்வேலி யா. இந்த பாஷைய கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு தா.
திருநெல்வேலி பக்கம் எங்குட்டு இருக்கிய . நான் highground

வீட்ல இர்ருந்து காச எடுத்துகிட்டு ஸ்வீட் கடைக்கு போஇ பூந்தி வாங்கிட்டு வந்து கொஞ்சோல பாகு எடுத்து ஊத்தி கொஞ்சோல நெய் விட்டு உருண்டைய பிடிச்ச லட்டு ரெடி பா.

சுப்ஸ்,

நான் இப்போ அபுதாபியில இருக்கேன்.

எந்த ஊரு போனாலும் திருநெல்வேலி குசும்பு விடமாட்டேங்குது.

சரிப்பா, அப்புறமா பாப்போம்.

ஹாய் சுப்ஸ், நமக்கு திருநெல்வேலி இல்லைங்க.

பிரியா லட்டு யாரும் சமைக்கலாமில் படத்துடன் சித்ரா செல்ல துரை கொடுத்து இருப்பார்கல் பாருங்கள்.
ஜலீலா

Jaleelakamal

அட அவங்க ஊர்காரங்கவங்களை அழைச்சா நீங்க அந்த ஊரில்லைன்னு பதிவு போட வந்தீங்களா!உங்களுக்கு கலாய்பதற்க்கு வேறு இடமே கிடைக்கலையா?

அதுசரி ஹுஸைன் பழையபடி அந்த தின்னவேலி பாஷையிலேயே கலக்குங்க.அதை படிக்க நல்லாவும் இருக்கு,நகைச்சுவையாவும் இருக்கு.அதுவும் அந்த லட்டு பத்தி நீங்க சொல்லியிருப்பது படிக்க சிரிப்பு தான் வருது.

சரி சரி நான் போறேன்,தனிஷா உங்களை கூப்பிடுறாங்க,அப்ராக்கு சரியானதும் வருவாங்க போல...

சுகன்யா போகதீங்க... சுப்ஸ்தான் எனக்கு திருநெல்வேலி உங்களுக்கு கேட்டாங்க அதுதான்....
சரி இதுக்கு மேல இங்க அரட்டை அடிச்சேன்,திருநெல்வேலிக்காரவ‌ங்க அவங்க குசும்பை காட்டிடுவாங்க நான் போறேன்.

நாங்கலாம் ரொம்ப நல்லவங்க பா
குசும்பு எல்லாம் கொஞ்சம் கூட இல்ல பா.
பார்க்க வந்தோரை பேச வைக்கும் அளவுக்கு நல்லவர்கள் பா.

மேலும் சில பதிவுகள்