பீட்ரூட் அல்வா

தேதி: April 4, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பீட்ரூட் - அரை கிலோ
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
ஏலக்காய் - 5
சீனி - அரை கிலோ
நெய் - 100 கிராம்
பால் - அரை படி


 

முதலில் பீட்ரூடைத் தோல் சீவி நடுவில் ஓடும் பச்சைத் தண்டை நீக்கி சிறு துண்டுகளாய் வெட்டி தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும்.
அரை வேக்காடானதும் பீட்ரூட்டை எடுத்து அம்மியில் வைத்து அரைக்கவும். நன்கு அரைத்துக் கொண்டு ஒரு பாத்திரத்தில் பாலை சுண்டக் காய்ச்சி ஓர் ஆழாக்குப் பாலானதும் பீட்ரூட்டைப் போட்டுக் கிண்டவும்.
பத்து நிமிடம் கழித்து சீனி போடவும். சீனி இளகி தண்ணீர் விட்டு பிறகு சீனித் தண்ணீர் கொஞ்சம் வற்றியதும் முந்திரிப்பருப்பை அரைத்து அதில் போட்டு நன்கு கிண்டி, நெய் போட்டு எல்லாம் நன்கு கெட்டியானதும் ஏலக்காயைப் பொடி செய்து தூவி இறக்கவும். ஏலக்காய்க்குப் பதிலாக எசன்ஸ் விடலாம். பாலிற்குப் பதிலாக ஒரு தேங்காயில் ஒரு ஆழாக்குப் பால் எடுத்துக் கொள்ளவும்.


மேலும் சில குறிப்புகள்