முட்டைக்கோஸ் துவையல்

தேதி: April 1, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

சிறிய வெங்காயம்- 1 கை
பொடியாக அரிந்த தக்காளி- அரை கப்
துருவிய இஞ்சி- அரை ஸ்பூன்
சிறிய பூண்டிதழ்கள்-6
துருவிய முட்டைக்கோஸ்- 2 கப்
புளி- சிறிய நெல்லியளவு
உளுத்தம்பருப்பு- 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய்-5
பெருங்காயப்பவுடர்- அரை ஸ்பூன்
அரிந்த கொத்தமல்லி- அரை கப்
தேங்காய்த்துருவல்-அரை கப்
தேவையான உப்பு
எண்ணெய்- 3 மேசைக்கரண்டி

முதலில் பருப்புகளை இலேசான சிவப்பில் வறுத்துக்கொள்லவும்.
அதன் பின் அதே எண்ணெயில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, தக்காளி, காயம்,கொத்தமல்லி அனைத்தையும் நன்கு வதக்கி இறுதியாக முட்டைக்கோஸ் சேர்த்து வதக்கவும்.
வதக்கிய பொருள்களுடன் புளி, தேங்காய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

மேலும் சில குறிப்புகள்

Comments

Superb. Very good recipe. Enjoyed the taste. hats off.

அன்பு மனோ அக்கா இந்த குறிப்பு முழுமை அடையவில்லை என்று நினைக்கிறேன்
அல்லது முட்டைகோஸும் சேர்த்து அரைத்து சட்னி போல் ஆகி விட வேண்டுமா

அன்புள்ள தாளிகா!

காய்கறிகளை வதக்கிய பிறகு, அடுத்த வரியில் புளி, தேங்காய் சேர்த்து உப்புடன் அரைக்கவும் என்று எழுதியிருந்தேன். அப்படியென்றால் வதக்கிய பொருள்களுடன் சேர்த்தரைக்க வேண்டுமென்றுதானே அர்த்தம்? இருந்தாலும் உங்களுக்காக ‘வதக்கிய பொருள்களுடன் ‘ என்ற ஒரு வரியைச் சேர்த்திருக்கிறேன். சரி தானே?

ஹாய் மனோ,நான் elu from qatar.
உங்களைப்போல (sorry i am not able to proceed fastly and continue in english)I too do this.but not all ingredients u used.simply i fry the cabbage until golden brown with green chilli,one piece garlic,little tomato,little tamrarind,cumin seeds and make it grinded and garnish with mustard,blackgram dal ...that also tastes good only.
I also try ur receipe and send my feed back
even in capsicum also we can make thuvaiyal like how we do for coriander leaves the same procedure.

அன்பு தோழிகளே,பொருத்து கொள்ளுங்கள்.விரைவில் முற்றிலும் தமிழ் வரும்...
அன்புடன்
elu

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

Sow.MohanaRavi
SUPPER!

வாழ்க வளமுடன்!
அன்புடன்
மாமி (எ) மோகனா ரவி...