விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

சகோதரி திருமதி சேகர் மற்றும் சகோதரர் அருண் சொல்லியது போல் பர்ர்ட், பார்ட்டா பிரித்து எழுதுகிறேன்.

1. காது வலி:

விமான பயணத்தின் போது காது வலி அனுபவம் பலபேருக்கு இருக்கும். அதுவும் விமானம் உயர போகும் போது அவ்வளவாக வலிதெரியாது ஆனால் இறங்க ஆரம்பிக்கும் போது வலி எடுக்கும் அல்லது அதிகரிக்கும். அது ஏன் என்று சொல்வதற்கு முன் காதும் அதன் அமைப்பு பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

புற காது: வெளியே தெரியும் காதுமடல். உள்ளே தெரியும் செவிப்பறை. செவிப்பறை சிலருக்கு மெல்லியதாகவும், சிலருக்கு நடுதரமாகவும், சிலருக்கு கடிதமானதாகவும் இருக்கும்.

நடு காது: செவிப்பறைக்கு உள்புறம், அதை தொட்டமாதிரி சுத்தி எலும்பும் அங்கவடி எலும்பும் இருக்கும், அதை தொட்டமாதிரி நத்தை எலும்பும் இருக்கும். இந்த அமைப்பு ஒரு மெல்லிய குழாய் (யுஸ்டேஷியன் டியுப் என்று பெயர்-இவர்தான் காது வலியின் கதாநாயகன்)மூலமாக தொண்டையில் இணைக்க பட்டு இருக்கும்.

உள் காது: அரைவட்ட கால்வாய் (ஒன்றுக்கு ஒன்று 90 டிகிரி கோணத்தில் இணைக்க பெற்று இருக்கும். (இது மிக முக்கியமான ஒரு அமைப்பு. இது தான் நாம் உட்கார்ந்து, படுத்து, திரும்புவது) இதை பற்றி விரிவாக பிறகு வரும் பதிவுகளில் சொல்கிறேன்.

வலிவர காரணம்: நடு காதில் இருக்கும் காற்றழுத்தமும், வெளிகாது அல்லது வெளியில் இருக்கும் காற்றழுத்தமும் சமமாய் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சளி பிடித்து இருந்தாலும், தொண்டையில் இன்பெக்‌ஷன் இருந்தாலும் யுஸ்டேஷியன் டியுப் தொண்டையில் திறந்திருக்கும் வாயில் அடைத்து கொள்ளும். விமானம் மேலே போக போக காற்றின் அழுத்தமும், அடர்தியும் குறையும். அதனால் நடுகாதின் அழுத்தம் அதிகமாக இருப்பதால் மிகுதியான காற்று யுஸ்டேஷியன் டியுப் தொண்டையில் திறந்திருக்கும் வாயில் வழியாக தொண்டையில் வேளியேறிவிடும். அதே போல் கீழே வரும் போது காற்றின் அழுத்தம் அதிகரிப்பதால், நடு காதில் அழுத்தம் குறைவாக இருப்பதால் வெளிக்காற்று தொண்டையில் இருக்கும் யுஸ்டேஷியன் டியுப் வாயில் வழியாக நடுகாதின் அழுத்ததை சமபடுத்த உள்ளே புக முயலும் ஆனால் வெளி அழுத்தம் அதிகமாக இருப்பதால் யுஸ்டேஷியன் டியுபை சுற்றியுள்ள அழுத்தமும் அதிகம் (தோட்ட்தில் இருக்கும் ரப்பர் குழாயின் மேல் நின்று கொண்டு தண்ணிர் பாச்சுவது போல்). அப்போது நடு காதின் காற்று அழுத்தம், வெளியில் இருக்கும் காற்று அழுத்த்தை விட குறைவாக இருப்பதால், செவிபறையை வெளி காற்று அழுத்தம் உள் நோக்கி அழுத்தும். அதனால்தான் விமானத்தின் உயரம் குறைய குறைய செவிபறையில் வலி அதிகரிக்கும். சில சமையம் வெளி அழுத்தமும், நடுகாதின் அழுத்தமும் அதிக வித்தியாசம் அடையும் போது செவிபறை கிழிந்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.

நாம் என்ன செயலாம்:

1. முடிந்தவரை விமான் பயணத்தை சளி பிடித்து இருந்தாலும், தொண்டையில் இன்பெக்‌ஷன் இருந்தாலும் தவிற்பது நல்லது. தவிற்க முடியாத போது சுடுநிரில் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க வேண்டும். (தொண்டை சுத்தமாக).
2. சுவிங்கம் மென்று கொண்டு இருக்கலாம்.
3. கொட்டாவி நன்கு வாய்திறந்து விடவேண்டும். இது எல்லாம் யுஸ்டேஷியன் டியுப் வாயில் திறக்க உதவி செய்யும்.
4. “வல்சலவா மெனுவர்” எனப்படும் பயிற்சி செய்யலாம். வாய், மூக்கு இரண்டையும் கையால் அழுத்தி மூடிக்கொண்டு காற்றை (ஒவொரு காதாக) காதுக்குள் அழுத்தி செலுத்த வேண்டும், அப்போது ”ட்ப்” என்று ஒரு சத்தம் கேட்கும். அதுதான் நடு, வெளி காதின் காற்றழுத்தம் சமன் அடைந்தை குறிக்கும். இதை சாதாரணமான சமயத்தில் பழகி கொள்ள வேண்டும். எதாவது சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்கலாம்.
அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

திரு ஹைஷ் அவர்கலுக்கு, நீங்கள் பயலட் என்று படித்தேன். ரொம்ப சந்தோஷம் அடைந்தேன் அண்ணா. ஏனெனில் என் தம்பி பயலட் ஆகனும் என்று முயற்ச்சி எடுக்கிரான். அதனால் தான்.

அண்ணா பயலட் ஆக எந்த மாதிரி வழி முறைகள் இருக்கு. ஏதேனும் லிங்கு இருந்தால் செல்லுங்கள் பிலீஸ்....

நான் இதனை இங்கு கேட்கலாமா என்று தெரியவில்லை. தவறு என்றால் என்னை மன்னிக்கவும்.

இந்த காது அடைப்பு எனக்கும் ஏர்படும். நான் நீங்கள் செல்வது போல் சுவிங்கம் சாப்பிடுவேன்.
நல்ல தகவல் சென்னதுக்கு நன்றி அண்ணா.......

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

Blank

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி பிரபா தாமு,

ஊக்கமளித்தற்க்கு மிகவும் நன்றி, விமானி உரிமம் உலகதில் மூன்று நாடுகளின் சட்ட்திட்டங்களின் படி வழங்க படுகிறது. (USA-FAA License, UK-CAA License, India-DGCA License) உங்கள் தம்பி எந்த நாட்டில் இருக்கிறாரோ அதன் படிதான் உரிமம் பெற வேண்டும். கீழே இந்திய நாட்டின் உரிமம் பெறுவதற்கான் லிங்க் கொடுத்து இருக்கிறேன்.

http://www.indianpilot.com/

http://dgca.nic.in/
வாழ்க வளமுடன்

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சகோதரர் Haish126 உடனடியா பதில் அளித்ததுக்கு மிக்க நன்றிகள். நான் அவனை பார்க்க செல்கிரேன். உங்கலுக்கு என்னுடைய மன்மார்ந்த நன்றிகள் அண்ணா....

"வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

விமான பயணம்,
திரு ஹைஷ், நீங்கள் அரம்பித்துள்ள இரு தலைப்புக்களும் படிக்க படிக்க இன்னும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால் நான் ஒன்று சொல்கிறேன் சரி என்றால் ஏற்றுக்கொள்ளுங்கள். அதாவது இவ்விரு தலைப்புக்களும் ஒரு முடிவிற்கு வந்தபின் புதுத் தலைப்பை இனி ஆரம்பியுங்கள். ஏனெனில் ஒவ்வொரு தலைப்பிலும் கேள்விகள் சந்தேகங்கள் கேட்கப்படுவதால், நிறைய புதுத் தலைப்புக்களை ஒரே நேரம் ஆரம்பித்தால் எதைப் பார்ப்பதென்று தெரியாமல் இருக்கு. ஒன்றுக்கு பதில் போடவே நிறைய நேரம் போராட வேண்டியிருக்கு. அதனால்தான்.

நீங்கள் விமானிதானே? இன்னும் அதை உங்கள் வாயால் சொல்லவில்லையே? உங்களுக்கு நிறைய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும் அதையும் பகிர்ந்து கொள்ளலாமே.

விமான பயணத்தின்போது, பயணிகள் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை பற்றியும் எழுதுங்கள். பெல்ட் போடவேண்டிய கட்டாயம், எப்போ போடவேண்டும் இப்படியானவை பற்றியெல்லாம் எழுதினால் எமக்கு நல்லது. எங்களுக்கு மிகவும் பிடித்த புறோகிராம், டிஸ்கவரியில் "எயார் கிராஸ்", ஒரு சனலில் போய்க்கொண்டிருக்கும் அதை அதிகம் விரும்பிப் பார்ப்போம். நேரமுள்ளபோது விபரமாக எழுதுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதரி அதிரா

”இரண்டுக்கு மேல் எப்பொதும் வேண்டாம்” என்று சொல்வதினால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
அப்பாடா என்று சொல்வது என் காதில் கேட்கிறது!!

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நலமா? போன காரியம் நல்லபடியாக முடிந்ததா. இது நல்ல உபயோகமான தகவல். முதல் முறை நான் விமானத்தில் பயணித்த போது, என் மகள் 3 மாத குழந்தை. ப்ளைட்டில் சரியான அழுகை. எனக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. இங்கு வந்து இறங்கும் வரை ரொம்பவே பாடு பட்டுவிட்டேன். கணவர் க்ரோசின் சிரப் 1ml கொடுத்து கொண்டு வா. காதில் பஞ்சு வைத்துவிடு என்றார். நான் எதுவும் செய்யாமல் இருந்தது எவ்ளோ தவறு என அப்போதுதான் புரிந்தது. புதிதாக செல்பவர்களுக்கு மிகவும் உபயோகமான தகவ்ல் இது.

உங்கள் தகவல் அனைத்தும் மிகவும் பிடிக்கின்றது. அதிரா சொல்வது போல் அடுத்தது என்ன என்று மனது எதிர்பார்க்கிறது. உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ஹைஷ்

சகோதரி
தனிஷா

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு சகோதரி தனிஷா

ஊக்கத்திற்கு மிகவும் நன்றி. விமான பயணத்தின் போது மிக கஷ்டமானது சளிபிடித்து மற்றும் தொணடை கட்டி இருக்கும் குழந்தையுடன் பிரயாணம் பண்ணுவதுதான்.
விமானம் புறப்படும் முன்னும், கீழ் இறங்க ஆரம்பிக்கும் முன்னும் குழந்தைக்கு வெது வெதுப்பான் தண்ணீரில் மிக சிறிதளவு உப்பு போட்டு குடிக்க கொடுத்தால் சிறிது வலி குறையும். மேலும் சத்தமாக வாய்விட்டு அழுதாலும் நல்லது. ஏன் என்றால் யுஸ்டேஷியன் டியுப் தொண்டையில் திறந்திருக்கும் வாயில் திறந்து கொள்ள ஏதுவாக இருக்கும். அதனால் அழுகிறதே என்று அதிகம் கவலை படவேண்டாம்.

குழந்தை இப்பொது நலமா?

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

//”இரண்டுக்கு மேல் எப்பொதும் வேண்டாம்” என்று சொல்வதினால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
அப்பாடா என்று சொல்வது என் காதில் கேட்கிறது!!//

இருபொருள் வாக்கியம்

உங்கள் இருபொருள் வசனம் கண்டு, சிரித்ததில் புரையேறி, எழுந்து போகிறேன், தண்ணி குடிக்க.:), "எலிமிச்சம் பழங்கள் கவனம்" என்பதுபோல் இருக்கிறது:).

தொடரட்டும் உங்கள் விமானப் பயணக் கட்டுரை... இன்னும் உங்கள் வாயால் பதில் வரவில்லை... இனியும் வரவில்லை எனில்.. விமான ஓட்டுனர் அல்ல விமானத்திற்கு பெயின்D அடிப்பவர் என அறிவித்து விடுவேன்:)...... ஐயையோ கோபித்திடாதீங்கோ... :)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்