விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

சகோதரி திருமதி சேகர் மற்றும் சகோதரர் அருண் சொல்லியது போல் பர்ர்ட், பார்ட்டா பிரித்து எழுதுகிறேன்.

அன்பு சகோதரி அதிரா

1982 ல் இருந்து விமானம் ஓட்ட கற்று கொண்டு இது வரை 12 ரக விமானங்களை ஓட்டி இருக்கிறேன். (245 கிலோ முதல் 1,95,000 கிலோ எடை வரை) ஏற குறைய 6000 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் மற்றும் விமானம் பயிற்றுவிக்கும் சிறப்பு தகுதி. மேற்கொண்டு எப்ப்வாவது நேரம் கிடைக்கும் போது ஓட்டஓடிசலுக்கு பெயிண்டு அடிக்கும் தகுதியும் உள்ளது.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நன்றி ஹைஷ் அவர்களே...
இப்படி விளக்கமாகச் சொன்னால்தானே என் போன்றவர்களுக்குப் புரிகிறது. உங்கள் பதிலைப் பார்த்த பின்னரே, நீங்கள் இவ்வளவு அனுபவசாலி என்பது புரிகிறது. உங்கள் விமான அனுபவங்களை எங்களுக்கும் சொல்லுங்கள்.

ஒருவேளை, உங்கள் விமானத்தில், நாங்களும் பயணித்திருக்கலாம் என நினைக்கும்போது, இக்குளிரிலும் எனக்கு வியர்த்துக் கொட்டுகிறது:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

விமான பயணத்தில் ஏன் பெல்ட் போடவேண்டும்?
விமானம் பறக்கும் போது நான்கு விசை(Force) அதில் செயல்படும்.
1. Force of gravity - புவிஈர்ப்பு விசை (கீழ் நோக்கி)
2. Lift - லிப்ட் எனபடும் மேல்நோக்கு விசை
3. Thrust from the Engine - இஞ்சினின் உந்து விசை முன்புறம்.
4. Drag due to Air resistance - எதிர் காற்றினால் உண்டாகும் தடை“டிராக்”
இந்த நான்கு விசையும் இரு புள்ளிகளில் செயல்படும். அவை சென்டர் ஆப் கிராவிடி மேலும் சென்டர் ஆப் பிரஷர். அந்த புள்ளிகளை மிக துல்லியமாக சமபடுத்தி விமானத்தை செலுத்த வேண்டும்.
இதில் பயணிகள் கவனிக்க வேண்டியது ஒன்று மட்டும்தான். விமானம் மேலே ஏறும் மற்றும் இறங்கும் போது இருக்கையை விட்டு எழுந்திரிக்க கூடாது. அது சென்ட்ர் ஆப் கிராவிட்டியை பாதிக்கும்.
எப்பொது பெல்ட் போட்டாலும் அதை இருக்கமாகதான் போட வேண்டும். அது விமானம் மேலே ஏறும் மற்றும் இறங்கும் போது எதாவது விபத்து நேர்ந்தால் உங்களுக்கு அடிபடாமல் காப்பாற்றும்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

விமான பயணம் கடல் கடந்து செல்வதென்றால், சேலை கட்டுவதை தவிர்த்து சுடி அல்லது ஜீன்ஸ் போட்டு கொண்டு செல்வது நன்று.

காரணம்: பயணிகள் விமானத்தில் “பாரசூட்” கிடையாது. இருந்தால் விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் பயணிகளாகிய உங்களை எல்லாம் விட்டுவிட்டு நான் மட்டும் “பாரசூட்” மூலம் குதித்து தப்பிவிடுவேன் என்றுதான். எது நடந்தாலும் எல்லோரும் ஒன்றாக இருப்போமே!!!

1. தரை மீது பறக்கும் போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டால் உடனே ஓடுதளத்தில் கீழே இறக்கிவிடுவார்கள் (Force Landing), ஓடுதளம் இல்லாவிட்டாலும் கீழே இறக்கிவிடுவார்கள் , அதற்கு பெயர் “கிராஷ் லெண்டிங் –Crash Landing”. அப்போது பணிபெண்கள் சொல்லும் படி பெல்டை இறுக்கி அணிய வேண்டும், அவர்கள் சொல்லும் கிராஷ் பொசிஷ்ஷனில் (Crash Position) உட்கார்ந்தால், முதுகு எலும்பில் அடிபடாது.

2. கடல் மீது பறக்கும் போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டால் கடலில் கீழே இறக்கிவிடுவார்கள், அதற்கு பெயர் “டிச்சிங் - Ditching”. அப்போது பணிபெண்கள் சொல்லும் படி பெல்டை இறுக்கி அணியவேண்டும், அவர்கள் சொல்லும் கிராஷ் பொசிஷ்ஷனில் உட்கார்ந்தால், முதுகு எலும்பில் அடிபடாது. மேலும் விமானம் எந்த பக்கம் சாய்ந்து (உதா... இடது)இருக்கிறதோ அதற்கு எதிர்புறம் (வலது) சன்னல் அல்லது கதவு வழியாக வெளியேற வேண்டும். அப்போது தண்ணீரில் குதித்து பின் ரப்பர் படகில் (“டிங்கி – dinghy “ஏறும் போது சேலை கட்டி இருந்தால், சேலை சிக்கி ஆபத்து ஏற்படலாம்.

3. இது போன்ற நேரத்தில் பதற்றம் கூடாது. பெங்களுர் விபத்து நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். அதில் பதற்றத்தின் காரணமாக தான் நிறைய பேர் பலியானார்கள்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

என்டம்மே ..நான் கிணற்றில் எட்டிப் பார்த்தாலே தலைசுற்றும் இதில் விமானத்தில் இருந்து கீழ விழுவேன் என்கிறபொழுது பாதிவழியிலேயெ உயிர் பிரிந்து விடும் என்பது உறுதி.
அருமையான தகவல்கள் தருகிறீர்கள் மிகவும் சுவாரசியமாக பேசுகிறீர்கள் இன்னும் நிறைய எழுதுங்கள்

அனைத்து தகவல்களும் அருமை.இன்னும் நிறைய எழுதுங்க.தொடர்ந்து படிக்க ஆவலா இருக்கு.எனக்கு இந்த விமான பயணம் என்றாலே டென்ஷனா இருக்கும்.எனக்கு 14 மணிநேரம் ஆகும் இந்தியா போவதற்க்கு.அதுவுமில்லாமல் என் கால் வேற வீங்கி நடக்க முடியமால் ஆகிடும்.இது எதனால்?

அன்பு சகோதரி தளிகா, மேனகா,

மிகவும் நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அண்ணா நீங்கள் எழுதுவது படித்து கொண்டு இருக்கேன். விமான பயண்ம் கொஞ்சம் போய் விட்டது. இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு சுத்தமாக நீச்சல் தெரியாது. சப்போஸ் நீங்கள் சொன்னது போல் விமானம் கடலில் இறங்கினால் நான் தப்புவேன்னா மாட்டேன்னா சொல்லுங்கள்.

அன்பு தங்கை

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அண்ணா நீங்க இன்னும் நிரைய எழுதுங்க, விமானதில் பயணம் செய்யும் நமக்கு தேவையான ஒன்று. கண்டிப்பா இன்னும் அதிகம் எழுதனும்.அப்பம் தான் எது நடந்தாலும் பயப்படாம சிந்திது செயல் பட முடியும். அந்த நேரத்தில் ஒன்றும் தெரியாமல் முளிப்பதை விட எல்லாம் தெரிந்து செயல் படுவது நல்லது தானே.

அன்பு தங்கை

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மிகப்பயனுள்ள தொடர்.தொடர்ந்து எழுதுங்கள்.உங்கள் நேரத்தை எங்களுக்காகவும் சிறிது செலவிடுவது மகிழ்ச்சி.முழுவதும் படித்துவிட்டேன்.நிறைய விஷயங்கள் தெரிய ஒரு நல்ல சந்தர்ப்பம்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்