விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

சகோதரி திருமதி சேகர் மற்றும் சகோதரர் அருண் சொல்லியது போல் பர்ர்ட், பார்ட்டா பிரித்து எழுதுகிறேன்.

hai harish eppadi irukkinga.enakku iduvaraikkum yarume mail pannadu illa.nan arusuvaikku pudusu so neengalum en kelvia kandukkama vitradinga.idhu en kozhandai pathina kelvi nan next month flightla poganum bahrain poran ennoda deliverykku india vandan so next month nan gulf poganum en kozhandaikku 6 months agudu ava already in digene problem irukku su enakku flightla avala kuttittu eppadi thania pogaporanu therila neengadan enakku helpful advice kudukkanum pls anna ennai unga thangaia ninaichi enakku answer pannunga pls.
radhikasuresh

radhikasuresh

Mr. Haish is on leave now!!

There are so many places where friends have dicussed reg. handling a baby in flights. Go to "Mandram" and search for this this topic there in tamil. Reading this thread from beginning also will give you an idea about it.

As your baby is 6 months old now, its not a big deal.

hai mrs.hussain.thanku very much.i am new to arusuvai.enakku unga friendship kidaikkuma.
radhikasuresh

radhikasuresh

எல்லாரும் இங்க ஃப்ரண்ட்ஸ்தான். அரட்டைப் பக்கம் வாங்க. நிறைய நல்ல ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க, சந்தனா, மஹி...

ஆனா தமிழ் எழுதப் படிங்க. (கீழே "எழுத்துதவி" இருக்கும்)

தற்சமயம் தவிற்க முடியாத வேலைகள் பல இருப்பதால், 24 மே க்கு பிறகு உங்கள் கேள்விக்கு பதில் விரிவாக எழுதுகிறேன்.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

1. எந்த காரணம் கொண்டும் குழந்தையின் கால அட்டவணையை டிஸ்டர்ப் செய்யக் கூடாது. அதாவது தூங்குவது, சாப்பிடுவது போன்றவைகளை.

2. முடிந்த வரை பிஸியான டைம் அல்லது நேரம் கெட்ட நேரத்தில் கிடைக்கும் விமான டிக்கட் சீப்பாக இருக்கிறது என்று எடுகாதீர்கள்.

3. முடிந்தால் முதல் வரிசை சீட் கேட்டு வாங்கவும். முன்னால் சீட் இல்லாததால் புழங்கும் இடம் அதிகமாக இருக்கும்.

4. எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்:

a. டயப்பர்ஸ், துடைக்கும் பேப்பர், டயப்பர் ரேஷ் கீரிம்.

b. இரண்டு டிஸ்போஸபிள் பை 1. உபயோக படுத்திய டயப்பர்ஸ் போட்டுவைக்க. (தூக்கி எறிய வேண்டிய பொருட்களுக்கு) 2. மற்ற பை வீட்டுக்கு எடுத்து சென்று துவைப்பதற்க்கு.

c. Purelle தண்ணீர் கிடைக்காத போது கை சுத்தம் செய்யவும், தாய்பால் கொடுப்பதற்கு முன்பும் உபயோகப்படுத்தலாம்.

d. பேபி கம்பளி, விமானத்தில் கொடுப்பதை உபயோகப்படுத்த வேண்டாம்.

e. விமானத்தில் பொதுவாக குளிராகதான் இருக்கும் அதனால் குழந்தைக்கு இரண்டு, முன்று சட்டைகள் போட்டுவைக்கவும்.

f. தாய்பால் பொது இடங்களில் கொடுக்கும் போது அணிய சில உடைகள் உள்ளது. மேலும் தவறி மேலாடை ஈரமாகிவிட்டால் மறைப்பதற்க்கு மாற்று மேலாடை அல்லது ஜாகெட்/விண்ட்ஷிடர் எடுத்து செல்லவும்.

g. Lysol or VIROFREE குழந்தைக்கு துணிமாற்றும் முன் ஸ்ப்ரே செய்து அந்த இடத்தை சுத்தம் செய்து விட்டு குழந்தையை கீழே போடவும்.

h. தண்ணீர் பாட்டில், விமானத்தில் ஈரபதம் மிக குறைவாக இருக்கும் அதனால் நீங்களும், குழந்தையும் நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும்.

i. பாதி திட உணவு கலக்க Bowl, Spoon. துடைக்க துணி.

j. விளையாட்டு காட்ட சில பொம்மைகள்.

k. சிறு குடை. வெய்யில் அல்லது மழை பாதுகாப்புக்கு.

l. நீங்கள் தனியாக சென்றால், டாய்லெட் போகும் முன் குழந்தை தூங்கி கொண்டு இருந்தாலும் பணிப்பெண்ணை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு செல்லவும். சந்தோஷமாக பார்த்துக் கொள்வார்கள்.

காதுவலி:

1. விமானம் நகர ஆரம்பித்தவுடன் பேசிஃப்யர் கொடுத்து குழந்தையை சப்ப விடவேண்டும். குழந்தைக்கு மூக்கு துவாரம் காய்ந்து இருந்தால் காது வலி வர வாய்ப்பு இருக்கிறது. அதனால் மருத்துவரிடம் கேட்டு மூக்கை ஈரமாக வைக்க ட்ராப்ஸ் வாங்கி ஒரு வராத்திற்க்கு முன்பே ட்ரை பண்ணவும். டேக் ஆப் க்கு ஒரு மணி நேரத்திற்க்கு முன் மருத்துவர் சொன்ன அளவுக்கு ட்ராப்ஸ் போடவும்.

2. கண்டிப்பாக சளி பிடித்து இருந்தால் பயணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால் காதில் உள்ள செவிபறை கிழிய வாய்ப்புகள் அதிகம்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்