விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

சகோதரி திருமதி சேகர் மற்றும் சகோதரர் அருண் சொல்லியது போல் பர்ர்ட், பார்ட்டா பிரித்து எழுதுகிறேன்.

ஹாய் தாளிக்கா அக்கா //// ஒரு வேளை சேலை கட்டினால் நல்ல தலைப்பை இறுக்கி சொருகிக்க வேண்டிய தான்
சகோதரா குதிக்க மாட்டேன்னு அடம் பிடிக்க மாட்டாங்களா சிலர்..அப்படி சொன்னா நீங்க பிடிச்சு தள்ளி விடுவீங்களோ..நான் அப்படி தான் சொல்வேன்னு நினைகிறேன் /// இந்த கருத்து நல்லா இருக்கே.

நம் சகோதரர் என்ன செல்ரார்ன்னு பார்க்கலாம்.

ஜலீலா அக்கா நலமா? நான் கூட துங்க மாட்டேன். யார் யார் வீட்டுக்கு போகனும் யோசிச்சுக்கிட்டு இருப்பேன். இதுவரை துங்கனது இல்லை.

சகோதரரே வயதானவர் எப்படி தனை பார்த்து கொள்வது. யார் யார் விமானத்தில் பயனிக்க கூடாது. ( வியாதி அஸ்தர்கள்) எந்த மாதிரி வியாதி அடுத்தவர்களை பாதிக்கும். ஏனெனில் full ஏர்கான் அதனால் குழந்தைகலுக்கும், மற்றவர்கலுக்கும் பாதிக்கூடாது. அத்தான் கேட்டேன்.

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அன்பு சகோதரிகள், பிரபாதாமு, சோனியா, தளீகா, சவுதி செல்வி, ஜலீலா பானு

ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

சகோதரி பிரபாதாமு: பிரபாவையும், சோனியாவையும் அதிலும் குறிப்பாக அதிகமாக அடம்பிடிக்கும் தளிகா ஆகிய எல்லோரையும் சேர்த்து பணி பெண்களை விட்டு பிடித்து தள்ளி விட சொல்கிறேன் – யாம் இருக்க பயம் ஏன்?

வயதானவர்கள் மேலும் சிறுபிள்ளைகள் என்றால் எமெர்ஜென்சியின் போது அதிகமான கஷ்டம் உண்டு (unavoidable attrition). அதையெல்லாம் இங்கு பதிய வேண்டாமே. எந்த பெரிய தொற்று வியாதிகள் இருந்தாலும் பயணம் செய்ய கூடாது. விமானத்தின் ஏர்கண்டிஷனர் காற்றை குளிர்விப்பதோடு வெளிகாற்றையும் உள்ளே சுழற்சி செய்யும் அதனால் காற்றினால் பரவும் தொற்று அதிகம் பாதிக்காது.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

விபத்து என்பது சொல்லிவிட்டு வராது. அதனால் தான் எல்லா விமானிகளும், ஓடுதளத்தில் புகும் முன் ஒரு ஜபம் (Revision of Emergency Procedures –Positive thinking in case of Negative events) சொல்வோம். அது என்னவென்றால் எஞ்சின் ஓடாமல் நின்று விட்டால், எஞ்சின் தீ பிடித்து கொண்டால் என்ன செய்வது என்றுதான். விமான விபத்து கோடியில் ஒன்றாக கூட இருக்கலாம், அதனால் நாம் எப்போது அதற்கு தயாரக இருக்கவேண்டும் அல்லவா ?, அதனால் தான் இந்த ரிவிஷன்.

வான்வெளியிலும் அதாவது காற்றிலும் நீரில் இருப்பது போல் சுழல்கள் உண்டு, நிறைய தமிழ் சொற்கள் அதற்கு தெரியாததால் ஆங்கிலத்தில் கொடுத்து இருக்கிறேன் அவை High wind speed, Micro burst, Jet stream, CAT-Clear Air Turbulence இது போல் இன்னும் நிறைய இருக்கிறது. அது என்ன செய்யும் என்பதுதான் நமக்கு தேவை. அது விமானதில் உள்ள பயணிகள் மற்றும் கட்டபடாத உங்கள் கைபை, பால்பாட்டில் போன்ற அனைத்தையும் பாகு பாடு இன்றி (விமானத்தயும் சேர்த்துதான்) குலுக்கும் இதற்க்கு பெயர் “டர்புலன்ஸ்- Turbulence (Light, Moderate, heavy, very heavy)” இது மிதமாக வில் இருந்து மிக ஆக்ரோஷமாக வரை விமானத்தை குலுக்க வாய்ப்பு இருக்கிறது. அப்போது அனைத்தும் விமானதின் உள் தாறுமாறாக தூக்கி எறியப்படும்.

http://community.webshots.com/user/Haish12

இந்த லிங்கில் இரண்டு படம் இணைத்து இருக்கிறேன் அதில் முதல் படம் “ரேடார்” எனப்படும் கருவி இதில் பச்சை (மிதம்), மஞ்சள் (நடுதரம்), சிவப்பு (அதிகத்தில் இருந்து ஆக்ரோஷம் வரை) டர்புலன்ஸ் ஏற்படும். இயற்கையின் பலதிற்கு எதிர் மனிதனின் பலம் ஒன்றுமே இல்லை.

இரண்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை மடியில் வைத்து பெல்ட் போட்டு கொள்ளலாம். ஆனால் மிகவும் பாதுகாப்பானது ”சி.ஆர்.எஸ் – CRS- Child Restraining System” என்படும் சிஸ்டம்தான். அது இரண்டாவது படத்தில் உள்ளது

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அண்ணா ஜெயலெட்சுமி அக்காவுக்கு அருசுவை ஓபன் அகலியாம். அது எதனால் என்று சொல்லுங்கள்.
அனைத்து அருசுவை தோழியர்களைவ்யும் ஜெயா அக்கா விசாரித்தா சொல்ல சொன்னாங்க. எனக்கு தனி தனியாக சொல்ல தெரியாது அதான் மொத்தமா விசாரிது விட்டேன்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

திரு ஹைஷ் சகோதரர் அவர்களுக்கு,
இந்த கீழே குதிக்கும் விஷயம் எனக்கும் கேட்கவே தலை சுற்றுகிறது. விமானம் புறப்படும் முன், ஒரு பணிப்பெண், அந்த லைவ் ஜக்கெட்டைக் காட்டி சொல்லிக்கொண்டிருப்பாரெல்லோ, நான் அதைக் கவனிப்பதில்லை, காரணம் பயம், அப்படி எதுவும் நடக்கக்கூடாதென்றுதான் வேண்டிக்கொள்வேன்.

ஒரு முறை விமானம் புறப்பட்டு கிட்டத்தட்ட 3 மணித்தியாலங்களில், அறிவித்தார்கள் பெல்டைப் போடுங்கள், காற்று பலமாக இருக்கிறதென்று. பெல்ட்டைப் போட்டுக்கொண்டு இருந்தோம். கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலங்களுக்கு, சீற்றை விட்டு மேலே மேலே தூக்கி வீசத் தொடங்கிவிட்டது எங்களை, அவ்வளவு காற்று. அப்போ நான் நினைத்தேன், கற்பிணிப் பெண்கள் பிரயாணம் செய்யலாம் என்கிறார்களே... இப்படி ஏற்பட்டால் என்ன கதி என்று? கற்பிணிப் பெண்கள் பிரயாணம் செய்வது பற்றி, தனிப்பட்ட முறையாக ஒரு பைலட் என்கிற முறையில் உங்கள் கருத்தென்ன?.

இன்னும் இதில் எனக்கு கேள்விகள் இருக்கு, ஆனால் அடிபட்ட பூனையல்லவா நான்:) எனவே ஒவ்வொன்றாகத்தான் கேட்பேன்:)(குறைநினைக்க வேண்டாம் நான் பகிடிக்கு சொன்னேன்).

நன்றாக இருக்கு உங்கள் தொடர் எழுதுங்கள். விமானத்தில் இதுவரை ஏறாதவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அண்ணா நான் போகும் விமானத்தில் நீங்கள் ஓட்டுனராக இருந்தாள், உங்களை எழுப்பி விட்டு விட்டு நான் வந்து ஓட்டுவேன். என்னையா தள்ளி விட சொல்லுவிங்க, இப்பம் யார் விழுவாங்கனி தெரியும் உங்களுக்கு.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

அண்ணா கடலில் பெரிய மீன், திமிங்கலம், முதளை எல்லம் கிடக்கும்லா, அப்பம் என்ன செய்வது. தயவு செய்து என்ன மட்டும் கரைல இறக்கி விட சொன்னா பனி பென் இறக்கி விடுவாங்களா. நான் வேன்னும்னா லஞ்சம் கொடுக்கிறேன். நான் ஒரு மீன் வாய்க்கு தான் இருப்பேன்.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

எனக்கும் அதான் பயம் கடலுக்குள் குதிச்சு ரப்பர் படகில் எப்படி ஏறுவது ..அதற்குள் எதுவாவது நம்மை கடித்து விடாதா.
ரப்பர் படகு எங்கிருக்கும் எல்லாரையும் ஒரே இடத்தில் தள்ளி விடுவார்களா ?
விமானம் விழப்போகிறது என்ற அந்த நேரத்திலும் பணிப்பெண்ணுக்கு இதையெல்லாம் நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கவோ அல்லது நம் பாதுகாப்பு பற்றியோ நினைக்கும் மனநிலையில் இருப்பார்களா ஒரே குழப்பமாக இருக்கு

அக்கா பயப்படாதிங்க. விமானத்தில் ஏறும்போதே பனிபெண்ணுக்கு பிராய்கெட் போட்டு வைதுகோங்க பின்னாடி இது போன்ற விசயத்தில் உதவும்.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

வணக்கம் haish அண்ணா அவர்களுக்கு எப்படி இருக்றீங்கள்? அண்ணா எனக்கும் விமானத்தில் பயணம் செய்யும் போது பயங்கரமா காது வலிக்கும் (நீங்கள் சொல்வது போல் விமானம் தரை இறங்கும் போது தான் அதிகமா இருக்கும்) என்னால் தாங்க முடிவதில்லை அழுகயே வரும்.கடைசியாக நான் பயணம் செய்யும் போது விமானப்பணிப் பெண்னிடம் சொன்னேன் அவங்க 2 ப்ளாஸ்ரிக் கப் தந்தார்கள் இரண்டு காதிலேயும் வைத்து அமுக்கி பிடிக்க சொல்லி சொன்னார்கள் அப்போது எனக்கு வலி குறைவாக இருந்தது.இப்போது நீங்கள் நல்ல தகவல் தந்திருக்றீங்கள் ரொம்ப நன்றி அண்ணா.

மேலும் மேலும் உங்கள் சேவை உயர என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள்

அன்புடன்
சமலினி

மேலும் சில பதிவுகள்