விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

சகோதரி திருமதி சேகர் மற்றும் சகோதரர் அருண் சொல்லியது போல் பர்ர்ட், பார்ட்டா பிரித்து எழுதுகிறேன்.

அன்பு சகோதரிகள் அதிரா, சோனியா, தளீகா, சமலினி மற்றும் ஷர்மி ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

அன்பு சகோதரி அதிரா:

1. இது போன்ற நேரத்தில் ஜன்னல் அருகில் இருப்பவர்கள் வெளியே விமானத்தின் இறக்கையை பார்த்தால் அது 10-12 அடிகள் மேலும் கீழும் ஆடும் அதை கண்டு நம்ப கமல் மாதிரி பயம் கொள்ள வேண்டாம். அதற்கு பெயர் “விங் ஃபெலேக்ஸிங் –Wing Flexing there is enough structural strength to combat the bending load of the wing” அதை தாங்கும் அளவுக்கு இறக்கைக்கு பலம் உள்ளது.

2. கர்ப்பிணி பெண்களுக்கு: நான் ஆக இருந்தால், விமானம் போவதற்க்கு என்று ஆகாயத்திலும் தனி வழிகள் இண்டெர்நெஷனல், மற்றும் நெஷனல் சாலைகள் ( தரை மேல் 5 மைல், கடல்மேல் 10 மைல் அகலம்) இருக்கும். அந்த சாலைகளில் ஏதும் புயல் சின்னம் இருக்கிறதா என்று செயற்கை கோள் படத்தை பார்த்து விட்டு முடிவு எடுப்பேன். உறுபினர்களுக்கு சாலைகளை பற்றி தெரியாத்தால் கடந்து போகும் நாட்டில் புயல் இல்லாமல் பார்த்து பயணம் செய்யலாம். கண்டிப்பாக முதல் மூன்று மாதங்கள் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

3. உரிமையோடு எத்தனை கேள்விகள் வேண்டுமானலும் கேட்கலாம். ஓகேவா!!!.

அன்பு சகோதரி சோனியா, எல்லாம் சும்மா ஒரு விளையாட்டுக்குதான். நான் ஓட்டுனராக இருந்தால் அருகிலேயே ”ஜம்ப் சீட்டில்” உட்காரவைத்து அழைத்து போகிறேன். கடலில் இருக்கும் ஒரே பயம் இந்த புட்டு எல்லாம் அருசுவையில் செய்யராங்களே அந்த மீனால் (சுறா) மட்டும்தான், அதனால அது சோனியா பிரபா கிட்ட கோவிச்சுகிட்ட மாதிரி அருசுவை உறுபினர்கள் மேல் ரொம்ப கோவமா இருக்கும். அதுக்கு விமானத்தில் இருக்கும் “லைப் ராப்ட்” ல் ஒரு மருந்து இருக்கும் அதை அண்ணன் எடுத்து தண்ணியிலே போட்டா சுறா மீன் எல்லாம் பயந்துகிட்டு தூரமா ஓடிடும்.

அன்பு சகோதரி தளீகா: விமானிகள், பணிபெண்கள் அனைவரும் இதில் நன்றாக பயிற்சி பெற்றவர்கள் மேலும் அடிகடி மறக்காமல் இருக்க மீண்டும் பயிற்சிக்கு செல்லவேண்டும். அதில் அவர்களுக்கு ஆளுமையும் கற்று கொடுக்கபடும். அதனால் கவலை படவேண்டியது இல்லை.(CRM - Cockpit Resource Management training including Leadership training and Refresher Course. Also Sea, Land, Jungle, Snow survival training)

அன்பு சகோதரி சமலினி: நலம் விசாரித்தற்கு நன்றி. கிழே இருக்கும் லிங்கில் காது மற்றும் இதுவரை சொன்ன பொருள்கள் மற்றும் பயிற்சியின் ஸ்லைடு ஷோ போட்டு இருகிறேன் பார்க்கவும். முடிந்தால் ”வல்சல்வா” வீடியோவும் போடுகிறேன்.
http://rides.webshots.com/slideshow/570854137swEqzC

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

சகோதரர் ஹைஷ் அவர்களுக்கு
உங்கள் லிங்கில் படங்கள் பார்த்தேன். குழந்தைகளுக்கான பெல்ட், படத்திலுள்ளதுபோல் எப்பவும் எமக்கு கிடைக்கவில்லை. மடியில் வைத்திருக்க தந்தார்கள்(எக்ஸ்ராவாக), பின்னர் பெரியவர்களின் பெல்ட் தான் பாவித்திருக்கிறோம். குழந்தையிலிருந்தே பிள்ளைகளைக் கொண்டு போகிறோம், இப்படிக் கண்டதில்லை.

நான் பிளேன் ஆடும்போது, பிளேனின் இறகுகளைக் கவனிக்கவில்லை, பிள்ளைகள் றோலர் ஹோஸ்ரலில் போவதுபோல் சந்தோசப்பட்டார்கள் அந் நேரம்.

கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் என்னவோவெல்லாம் சொல்லிப் பயமுறுத்திறீங்கள்:), இது கொஞ்சம்கூட நல்லாவே இல்லை:). படங்களில் விமான விபத்துப் படங்களைப் போட்டு பீதியை இன்னும் அதிகமாக்கிவிட்டீங்கள்.

சோனியா, தளிகா, எனக்கு ஒன்று மட்டும் புரிஞ்சுபோச்சு,:)பிளேனில் ஏதாவது விபத்து வந்தால், ஒன்றில் ஆகாயத்தில் சாவது அல்லது கடலிலே மீன் கடித்துச் சாவது, எது நல்லது என்பதை முடிவு எடுக்கவேண்டியது எமது கையில்.... நிம்மதி நிம்மதி உங்கள் சொய்ஸ்:).....

சகோதரர் ஹைஷ், விமானத்தின் முன் பகுதியில் ஜன்னல்கள் உள்ளதல்லோ? அவற்றை, எந்த நேரத்தில் பார்ப்பதற்கு பயன்படுத்துவீங்கள்? ஸ்கிறீனைப் பார்த்துத்தானே விமானத்தை ஓட்டுவீங்கள்? நீங்கள் இந்தப் பக்கமும் விமானம் ஓடுவதுண்டோ?(யூ.கே, யூறோப், கனடா...).

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு சகோதரி அதிரா:

இந்த பெல்ட் பெரிய கடைகளில் கிடைக்கும், வாங்கும் போது (FAA or CAA Approved)என்று பார்த்து வாங்க வேண்டும். அதுவும் 16 அங்குல அகலதிற்கு மேல் இருக்க கூடாது.

அந்த விபத்துகளில் நல்ல விஷயம் என்ன வென்றால் அதில் உள்ள பாதுகாப்பு சாதன்ங்களை பார்ப்பதற்குதான்.

விமானம் இரண்டு விதமான் விதிகளின் படி ஓட்டுவார்கள்.

1. விஷ்வல் பிளைட் ரூல் (Visual Flight Rule – VFR), முன் இருக்கும் சன்னல் வழியாக பூமியை பார்த்து ஓட்டுவது.

2. இன்ஸ்ருமெண்ட் பிளைட் ரூல்(Instrument Flight Rules - IFR, அது ஸ்கினைப் பார்த்து ஓட்டுவது. அப்போது வெளியில் பார்த்தாலும் எதும் தெரியாது (Take Off and Landings are done with ILS-(Instrument Landing System) Category I (2600 feet visibility) or II (Visibility 1600 feet) or III A , III B or III C ( III C is used for zero visibility).

இது வரை எகிப்து, துருக்கி, ரஷியா வரைதான் வந்து இருக்கிறேன்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அண்ணா வந்துடிங்களா எப்படி இருகிங்க.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

கர்பிணி பெண்கள் எந்த மாதத்தில் இருந்து விமானத்தில் பயணம் செய்ய கூடாது. சொல்லுங்கள் அண்ணா.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

உங்க baro trauma விளக்கம் அருமை, மக்களுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்... விளக்குங்க விளக்குங்கன்னு சொல்லி சொல்லி ரொம்ப விளக்கிட்டீங்க.... காது வரைபடம் போடாதது ஒன்னு தான் குறை - அந்தளவுக்கு சொல்லிட்டீங்க !!!

உண்மையாலுமே கடல்வாழுயிரிணங்களை துரத்த பவுடர் போடுவீங்களா?

எனக்கு அந்த கர்ப்பிணி பெண்கள் பயணம் புரியல - நானா இருந்தான்னு ஆரம்பிச்சு, அதுக்குமேல நீங்க எழுதியது புரியல - மீண்டும் விளக்க முடியுமா?

முதல் மூணு மாசம் போகக்கூடாதுன்னு தெரியும், ஆனா ஒரு வேளை போக வேண்டி இருந்தால், ஏதாவது அறிவுரை அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கை இருக்கா? என் கேள்விக்கு பதில் முடிஞ்சா சொல்லுங்க - நான் கோவிச்சுக்க மாட்டேன் :-))

இந்த பகுதி ரொம்ப நல்லா போயிகிட்டு இருக்கு, வாழ்த்துக்கள்.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

ஹாய் அண்ணா நலமா இருக்கிங்கலா? இப்பதான் பதிவை பார்த்தேன். /// சகோதரி பிரபாதாமு: பிரபாவையும், சோனியாவையும் அதிலும் குறிப்பாக அதிகமாக அடம்பிடிக்கும் தளிகா ஆகிய எல்லோரையும் சேர்த்து பணி பெண்களை விட்டு பிடித்து தள்ளி விட சொல்கிறேன் – யாம் இருக்க பயம் ஏன்? ///// அண்ணா இப்படி செல்லி பயம் உண்டு பன்னுரிங்கலே....

உண்மையிலே விமான பயணம் இவ்வளவு பயம் இருக்கும் என்று தெரியாது அண்ணா.... படிக்க படிக்கா இவ்வளவு விஷயம் இருக்கான்னு பிரம்மிப்பா இருக்கு.....

அண்ணா என்ன கீழே தள்ளினா அந்த அதிர்ச்சியிலே எனக்கு உயிர் போயிடும்.

சோனி என் மேல என்ன உனக்கு கோபம். //அண்ணா நான் போகும் விமானத்தில் நீங்கள் ஓட்டுனராக இருந்தாள், உங்களை எழுப்பி விட்டு விட்டு நான் வந்து ஓட்டுவேன்// இது நியாமா சோனி. வேண்டாம்ப்பா பயனிகள் பாவம்.... சோனி எல்லாருக்கும் நிரையா ஜடியா குடுக்குரா....

அண்ணா தயவு செய்து சோனி இட்டு போகாதிங்க. ஏனா லஞ்ச்ம் குடுத்து பனிப்பெண்னை கரக்டு பன்னிடுவா.... அதனால் சோனி வந்தா நீங்க விமானம் ஓட்டாதிங்க.... சும்ம சென்னேன்.

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அண்ணா கர்பிணிகள் எந்த மாதத்தில் செல்லக்கூடாது. அதாவது முதல் 3 மாதம், பிறகு 3 மாதம் செல்லக்கூடது என்று ஏன் செல்லுகிரார்கள்.

இதனால் ஏதேனும் ஆபத்து வருமா?

சிலர் குழந்தைக்கு மூளை வளர்ச்சி பாதிப்பு ஏற்படும் என்று கூறுகினர். அது ஏன்? அண்ணா....

விளக்கினால் நன்ராக இருக்கும்..

" வாழ்க வளமுடன்"
பிரபாதாமு.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

அன்பு சகோதரிகள் சோனியா, திருமதி சேகர், பிரபாதாமு ஆகிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

சகோதரி சோனியா: கர்பிணி பெண்கள் முதல் மூன்று மாதம் வரை விமானத்தில் பயணம் செய்ய கூடாது. அதன் பிறகு அந்த அளவுக்கு பாதிப்பு இல்லை. (1. Turbulence, 2. Some time landing shock can exceed 1.5 g)

சகோதரி திருமதி சேகர்: உங்களின் பாராட்டுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். (There are delayed Barotitis and Barosinusitis this may not be required for the passengers).

1. குறிப்பாக ஷார்க் ரிப்பெல்சிவ் (Shark repulsive powder) பவுடர் தேவைப்பட்டால் போடுவார்கள்.

2. முதல் மூன்று மாதங்கள் தவிர்தல் நலம். முடியவில்லை என்றால் நாம் எந்தவிதமான முன் எச்சரிக்கையும் எடுக்க முடியாது. (வண்டிய கொஞ்சம் மேடு பள்ளம் பார்த்து ஓட்ட சொல்லவும் முடியாது. Turbulence and landing shocks are unavoidable –which cannot be controlled by the pilot). // நான் கோவிச்சுக்க மாட்டேன் :-)) // இதுல இருந்து ஒன்னு மட்டும் தெரி/புரியுதுங்க. என் பதிலை படிச்சா உங்களுக்கு கோவம் வருதுன்னு!!!

பி.கு.: காது படமும் போட்டாச்சிங்க.

தனிதனியா பார்க இந்த லிங்:

http://community.webshots.com/user/Haish12

ஸ்லைட் ஷோ பார்க இந்த லிங்:

http://rides.webshots.com/slideshow/570854137swEqzC

சகோதரி பிரபாதாமு: மற்ற இழைகளில் விசாரித்தமைக்கும் மிகவும் நன்றி. குடும்பத்தினர் அனைவரும் நலமா?

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரன்.

சகோதரி பிரபாதாமு: முதல் மூன்றுமாதங்கள் பயணித்தால் கருசிதைவு எற்பட வாய்புகள்(தான்) அதிகம் இருபதால் தவிற்க்க சொல்வது. எனக்கு தெரிந்து இரண்டு குழந்தைகள் விமானத்திலேயே பிறந்து இருக்கிறார்கள். சில கம்பெனிகளில் அந்த குழந்தைக்கு ஆயுள் முழுவதும் அந்த ஏர்லைனில் இலவச பயண அனுமதியும் கொடுபார்கள். அதனால் கடைசி மூன்று மாதங்களுக்கு பயமில்லை. மற்றபடி பயணத்திற்கு முன் கண்டிப்பாக மருதுவர் ஆலோசனை இன்றி பயணம் செய்ய கூடாது.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்