விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

சகோதரி திருமதி சேகர் மற்றும் சகோதரர் அருண் சொல்லியது போல் பர்ர்ட், பார்ட்டா பிரித்து எழுதுகிறேன்.

அன்பு சகோதரி திருமதி ஹூசேன் :

நமது வீட்டில் பிள்ளைகளின் விளையாட்டு பொருள் எதாவது தண்ணீரில் விழுந்தால் சில தண்ணீரில் மூழ்கி விடும், சில தண்ணீரில் சிறிது நேரம் கழித்து மூழ்கும், சில மிதந்து கொண்டே இருக்கும்.

கப்பல் இரும்பினால் ஆனது (1,00,000 கிலோவிற்கும் மேலாகவும் உள்ளது) மிதக்கிறது போல் தான் விமானமும்.

விமானம் காற்றில் பறப்பதினால், சில இடங்களில் மட்டும் இரும்பு மற்றும் ட்டைடானியம், பல இடங்களில் “ட்யூராலுமின்” இப்போது நிறைய இடங்களில் “கார்பன் ஃபைபர்”, எனபடும் “காம்போசிட் மெட்டீரியல்” இவைகளை கொண்டு செய்யப்படுகிறது.

விமான சட்ட திட்டதின் படி எந்த ஒரு பயணிகள் விமானமும் தண்ணீரில் விழுந்தால் அதில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு தக்கவாறு மிதக்க வேண்டும் என்பது விதி. அதனால் விமானம் சில மணி நேரம் தான் மிதக்கும்.

கடலில் சிறு அலை, மிதமான அலை மற்றும் பேராலைகளுக்கு தக்கவாறு அலைகளுக்கு எதிர்ராக இறக்காமல் (90 டிகிரி அல்லது 270 டிகிரி) அதற்கு ஒத்தவாறு இறக்கவேண்டும் (0 அல்லது 180 டிகிரி). இதில் காற்று வீசும் திசையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விமானி சரியாக இறக்காவிட்டால், விமானம் அம்பு போல் தண்ணீரில் சொருகி கொள்ள கூடிய வாய்ப்பும் உள்ளது.

உங்களுக்காக் 15 ஜனவரி 2009 நடந்த ஏர்பஸ் விபத்து படங்களும், வீடியோ லிங் கொடுத்து இருக்கிறேன் நேரம் இருந்தால் பார்கவும்.

http://community.webshots.com/album/570854137swEqzC

http://www.youtube.com/watch?v=DihzKZSrlJE

அன்பு சகோதரி அதிராவிற்கு :

விமானத்திற்கு உபயோக படும் நேரத்திற்கு ஏற்ப சிறிய, பெரிய மற்றும் மிக பெரிய சர்விஸிங் இருக்கும். அப்போது சர்விஸிங் முடிந்த விமானத்தை ஓட விட்டு, மற்றதை சர்விஸிங் செய்ய எடுத்து கொள்வார்கள்.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

கடவுளே அம்பு போல் சொருகுமா..நான் எப்பவும் முன்னாடி சீட் கேட்டு வாங்குவேன் கால் நீட்டி உக்கார இனி பின்னாடி சீட் வாங்கனும்

எல்லா கம்பெனிகளிலும் இந்த சலுகை கிடையாது. ஒரு சிலர்தான் இச்சலுகை வழச்ங்குகிறார்கள். அடுத்த கேள்விக்கு மன்றத்தில் பதில் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி தளீகா,

உங்களுடைய கேள்வியை இன்றுதான் பார்த்தேன். தாமத்திற்கு வருந்துகிறேன். அது “ஏர் ப்ரேஷ்னர்” . அதனால் பயணிகளுக்கு எந்த கெடுதலும் இல்லை

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஓகே அண்ணா நான் கேட்டதிற்க்கு பதில் சொல்ல முடியாதுனி சொல்லிடிங்க, ரொம்ப நன்றி.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

இது எப்படி ஏற்படுகிறது?

நமது உடலுக்குள் நடக்கும் எல்லா வேலைகளும் (குறிப்பாக: உணவு செரிக்க வயிற்றில் அமிலம், தூக்கம், பழைய செல்களை புதுபிக்கும் வேலை) நமது உடலில் இருக்கும் கடிகாரதின் படி காலம் தவறாமல் நடக்கும். வழக்கமாக நாம் சரியான நேரத்தில் இந்த வேலைகளை செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும் உடல் தன் வேலையை சரியான நேரத்தின் படிதான் செய்யும். அதனால் தான் நிறைய பேர் சரியான நேரத்தில் சாப்பிடா விட்டால் அல்சர் வர காரணம்.

ஜெடலேக் வர காரணம் இந்த கடிகாரம்தான். எந்த ஒரு கருவியாக இருந்தாலும் அது இயங்க சக்தி அல்லது ஆற்றல் தேவை. இந்த கடிகாரத்திற்கு “சர்கார்டியன் அல்லது பயோ ரிதம் - Circadian or Bio rhythm” என்று சொல்லப் படுகிறது. இது இயங்க தேவையான சக்தி சூரிய ஓளி. அதிலும் குறிப்பாக நீல நிறம். அதாவது நம் கண்ணுக்கு புலப்படும் ஓளிக்கற்றையில் 7 நிறம் உள்ளது அதில் சிவப்பு குறைந்த அலை அதிர்வு கொண்டது, மிக அதிக அலையதிர்வு கொண்ட மனித கண்ணால் பார்க்க கூடியது இந்த நீல நிறம் அதற்கு பிறகு உள்ள புற ஊதா (Ultra violet) கண்ணுக்கு தெரியாது.

இந்த நீல நிறத்தில் இருந்து வரும் மின்காந்த அலைகள் விழிதிரையில் உள்ள ராட்ஸ், கோன்ஸ் தவிர மற்றும் ஒரு அமைப்பில் மின்வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தும். அது மூளையில் உள்ள ஹைப்போ தாலமஸ் (Hypothalamus) எனும் நாளமில்லா சுரபியில் இருந்து சீரோட்டினின் (Serotonin) என்ற ஹார்மோனை சுரக்கும் இந்த சீரோட்டினின் மூளையில் உள்ள பீனியல் சுரப்பியில் மெலடோனின் (Melatonin) எனும் ஹார்மோனாக தன்மாற்றம் அடைகிறது. இந்த ஹார்மோன்தான் இரவு பகல் என்று உடலுக்கு உணர்த்துவது.
இதன் விளைவுகள், குறைப்பதற்கான வழிகள் அடுத்த பதிவில்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

நன்று ஹைஸ், நானும் இந்த தலைப்பை பற்றி எழுத உங்களுக்கு பரிந்துரைக்கலாம் என்றிருந்தேன்.

தொலை தூர விமானப்பயணம் மேற்க்கொள்ளும் மக்களுக்கு கண்டிப்பாக தெரிய வேண்டிய விஷயமிது..... சிறப்பாக எழுதுகிறீர்கள்...... தொடருங்கள்........

இன்னொரு தலைப்பும் என் மனதில் உள்ளது, உங்கள் மனதிலும் இருக்கிறது என்று தெரியும் - கால் வீக்கம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள், முக்கியமாக அதற்கான தடுப்பு நடவடிக்கைகள்...... இது ஒரு suggestion தான், உங்கள் வரிசைப்படியே எழுதுங்கள் !!

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அன்பு சகோதரி திருமதி சேகர்,

மிகவும் நன்றி, சகோதரி செந்தமிழ் செல்வியின் மகளுக்கு இந்த கஷ்டம் என்று மின்னஞ்சல் வந்ததால் என் வரிசையை மாற்றிவிடேன். 5 வயது குழந்தை பஞ்சு மிட்டாய் கேட்டால் அதற்கு 20 வயதில் கொடுத்தால் மதிப்பேது. அதனால் மனதில் பட்டால் தயவு செய்து உடனே சொல்லிவிடுங்கள்.

“உடுக்கை இழந்தார் கைபோல ஆங்கே
இடுகண் களைவதாம் நட்பு”

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

எனக்கு பயமாக இருந்தது - உங்கள் வரிசையில் தலையிடுகிறேனோ என்று, அதனால் தான் சொல்லவில்லை.

ஹி ஹி அந்த திருக்குறளுக்கு அர்த்தம் எனக்குத் தெரியும்.... நீங்கள் அது போலவே அவர்களுக்கு உதவி செய்தது மகிழ்ச்சியை தருகிறது... சில சமயம் எனக்கு பதில் தெரிந்திருந்தாலும், என்னை விட பெரியவர்கள் அல்லது அனுபவசாலிகள் சிறப்பான பதில் போட்டிருந்தால் நான் விலகிக்கொள்வதுண்டு.....

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அன்பு சகோதரி திருமதி சேகர்,

அழுகிற குழந்தைக்குதான் பால் கிடைக்கும் என்பார்கள். அது போல் அருசுவை உறுப்பினருக்கு எது தேவை என்று தெரிந்தால் வரிசை படுத்த வசதியாக இருக்கும். மேலும் (27 மார்ச் 2010) அதற்கு நடுவிலும் காணமல் போனவர்களின் பகுதிக்கும் நான் போக வேண்டி இருக்கும்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்