விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

சகோதரி திருமதி சேகர் மற்றும் சகோதரர் அருண் சொல்லியது போல் பர்ர்ட், பார்ட்டா பிரித்து எழுதுகிறேன்.

பீனியல் சுரப்பியில் மெலடோனின் (Melatonin) எனும் ஹார்மோன், சூரியன் மறைந்து இரண்டு மணி நேரம் கழித்துதான் சுரக்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் முழுகதிர் ஓளிர் வீச்சு உள்ள விளக்கின் (Florescent light or CFL) வெளிச்சம் இருந்தால் இது சுரக்க தாமதம் ஆகும். இது தான் நம்மை தூங்கவைக்கும் ஹார்மோன். அதனால் நாம் தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன் சாதாரண விளக்கு (Incandescent lamp or Red night lamp) வெளிச்சதில் இருப்பது நல்லது. அதே போல் நாம் ஊருக்கு புறப்படும் மூன்று நாட்களுக்கு முன் நம்மை தயார் படுத்தி கொள்ளவேண்டும்.

உதாரணத்திற்கு யூகே ல் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்யும் நாள் 15 மே 2009, இரண்டு நாடுகளுக்கும் 5 ½ மணி நேரம் வித்தியாசம். வழக்கமாக நீங்கள் காலை 6 மணிக்கு எழுந்து இரவு 10 மணிக்கு தூங்குவீர்கள் என்று வைத்து கொண்டால். மூன்று நாட்கள் மட்டும் நீங்கள் செய்ய வேண்டியது.

12 மே இரவு 9 மணிக்கு தூங்கி
13 மே காலை 5 மணிக்கு எழும்பி இரவு 8 மணிக்கு தூங்கி
14 மே காலை 4 மணிக்கு எழும்பி இரவு 7 மணிக்கு தூங்கி
15 மே காலை 3 மணிக்கு எழும்ப வேண்டும். இப்படி செய்தால் ஜெட் லேக் வருவதை தவிர்க்கலாம். உதவிக்கு சரியான விளக்குகளை உபயோகிக்கவும்.

திரும்பி இந்தியாவில் இருந்து யூகே வரும் போது, பயணம் 20 ஜூன் 2009 என்றால்: மூன்று நாட்கள் மட்டும் நீங்கள் செய்ய வேண்டியது.

17 ஜூன் இரவு 11 மணிக்கு தூங்கி
18 ஜூன் காலை 7 மணிக்கு எழும்பி இரவு 12 மணிக்கு தூங்கி
19 ஜூன் காலை 8 மணிக்கு எழும்பி இரவு 1 மணிக்கு தூங்கி
20 ஜூன் காலை 9 மணிக்கு எழும்ப வேண்டும்.

இப்படி செய்தால் ஜெட் லேக் வருவதை தவிர்க்கலாம். உதவிக்கு சரியான விளக்குகளை உபயோகிக்கவும்.

அதே போல் சில உணவுகள் மெலடோனின் (Melatonin) எனும் ஹார்மோன் சுரக்கவும் அதை தடைசெய்யவும் உதவும். அதை அடுத்த பதிவில் பார்போம்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ரொம்ப அருமையா இருக்கு. முகப்பில் பார்க்கும் போது அனுவம் வாய்ந்த அருசுவை அம்மணிகளின் கருத்து பகிர்வாக இருக்கும் என் நினைத்ததுண்டு. ஏன்னா உள்ள போய் படிக்க போதுமான நேரம் இல்லை.
இன்று கிடைத்தது நேரம். சரியான ஆளிமிருந்து மிகச்சரியான பதிவு, சரியான நேரத்திற்கு (ஆமாம் இன்னும் 8 நாள் தான் இருக்கு இந்தியா போக).
என்னதான் கூகிள் செர்ச் பண்ணி எல்லாத்தையும் ஒரளவு தெரிஞ்சுகிட்டாலும், அனுவசாலிகளிடமிருந்து (இது ரொம்ப கரெக்டான வார்த்தையா? - பைலட்), நேரிடையாக, அதுவும் தாய்மொழியில கிடைக்கிற விஷயங்களுக்கு ஈடு இணை இல்லை.
சார், ஏற்கனவே 1 மணி நேரம் லேட் லன்சுக்கு. பின்ன வரேன்.

indira

அன்பு சகோதரி முனைவர் இந்திரா அவர்களுக்கு,

பாரட்டுதலுக்கு மிகவும் நன்றி

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

//அழுகிற குழந்தைக்குதான் பால் கிடைக்கும் என்பார்கள்//
நாங்கள் அழுது கண்ணும் காய்ந்து, கேட்டதும் மறந்துபோச்சு, இன்னும் பதிலே இல்லையே:).... ஐயையோ கனவின் பலன்கள் பற்றிக் கேட்டதைத்தான் சொல்கிறேன்... பொறுத்தார் பூமியாழ்வாராம்...:) அதுதான் பொறுமையாக:)......

இந்த ஜெட் லேக் பற்றி மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீங்கள், படிக்க நன்றாக இருக்கு, ஆனாலும் உங்களுக்கு ஒன்று தெரியுமோ? பிரயாணத்துக்கு, 3 நாட்களுக்கு முன்பிருந்து நித்திரையே வராதே... லைட் எல்லாம் அணைத்துப் படுத்தாலும், திடுக்கிட்டு எழும்பி, ஐயையோ அதை வைக்க மறந்திட்டனே... இப்படி புலம்பத்தான் நேரம் போதுமாயிருக்கும்.

நீங்கள் உண்மையை எழுதுறீங்க, நான் என் கதையைப் புலம்புகிறேன்:) தப்பெனில் மன்னிக்கவும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வாவ் ரொம்ப யூஸ்புல். நான் இன்று தான் உங்களுடைய்ய எல்லா பதிவுகளயும் படித்தேன். நன்றாக நல்ல பயனுள்ளதாக இருக்கு, உங்களுக்கு நன்றி. எங்களோடு பகிர்ந்துகொள்வைதையும் எல்லாருக்கும் நல்ல பதில் அளிப்பதும் பாராட்ட வேண்டியது.
எல்லாரையும் போல் எனக்கும் ஒரு கேள்வி. என் ஹஸ்பெண்ட் எப்பவும் ஏர்பேளன் பற்றி நிறய்ய படித்து எனக்கும் சொல்வார்ம் டிஸ்கவரி சேனலில் ஒரு தடவை ஏர்பஸ்ஸை பற்றி நிறய்ய கான்பித்தாங்க 2 மனிநேரம் விடாமல் பார்த்தார், என் ஹஸ்பெண்டும் அவர் ப்ரென்டும் ஒரு ஏர்ரோ ஜாய்ஸ்டிக் வைத்துள்ள ஒரு சாப்ட்வேர் வாங்கி டைம் கிடைக்கும் போது எல்லாம் அதை வைத்து ஒட்டி பார்ப்பார். நல்ல இண்டஸ்டிங் ஆ இருக்கும்.
இவருடயய நன்பர் இங்குள்ள ஒரு லோக்கல் பேள்லின் ஒரு சண்டே போர் ஒட்டி வந்தார் இவரையும் அழைத்துள்ளார், இன்னும் போகல்லை.
ரொம்ப உயரமில்லாமல் இருக்கும் நான் பார்த்தேன், என் தோழியின் கனவரும் இவருடைய்ய தோழரும் தான் பைலட்டின் அருகில் இருந்த்து ஒட்டி பார்த்தாங்க.

என் பொன்னுக்கு ஒரே ஆசை எப்பவும் என்னிடமும் அவரிடமும் கேட்பா, மம்மி,டாடி எனக்கு பைலட் இருக்க்ற அவர் ஒட்டறதை பார்க்கனும் பார்க்கனும் என்று, நாங்க தான் அதேல்லாம் நிறய்ய பார்மாலிட்ட்டிஸ் இருக்கு பர்மிஷன் எல்லாம் வாங்கி தான் பார்க்கனும் என்று இவர் சொல்வார்.
நிங்க சொல்லுங்க அதற்க்கு என்ன செய்ய வேண்டும் எங்கு பர்மிஷ்ன வாங்கனும், அனுமதிப்பார்களா?
எங்க எதிர் வீட்டில் ஒரு வெள்ளைகாரர் அவர் கூட ஏதோ பைலைட் என்று சொல்லியதுண்டு நாங்க இதுவரை கேட்டதில்லை, என் தோழி விட்டின் பக்கது வீட்டிலும் ஒரு பென் பைல்ட் இருக்கிறாங்க. அவங்களும் கேட்டு சொல்கிறேன் என்று சொன்னாங்க, அதன் பிறகு இதுவரை மீட் பன்னியதில்லை.
டைம் கிடைக்கும் போது சொல்லுங்க.
நன்றி.

நானும் இந்த் த்ரெட்டை இன்று தான் எல்லம் படித்து
முடித்தேன். தொடரட்டும் உங்கள் பணி.

அன்பு சகோதரி விஜி
தங்களின் பாரட்டுகளுக்கு மிகவும் நன்றி
---------------------------
உணவுகளின் மூலம் எப்படி ஜெட் லேகயை குறைப்பது என் பார்ப்போம். அடிபடையாக முதலில் விருந்து சாப்பிட்டுவிட்டு பின்பு விரதம் ( வயிற்றை மட்டும் காயப்போடுவது) கடைசியாக அதிக புரதசத்துள்ள உணவு உண்ண வேண்டும்.

அதே போல் நாம் ஊருக்கு புறப்படும் மூன்று நாட்களுக்கு முன் நம்மை தயார் படுத்தி கொள்ளவேண்டும்.
அதே உதாரணத்திற்கு யூகே இல் இருந்து இந்தியாவிற்கு பயணம் செய்யும் நாள் 15 மே 2009, மூன்று நாட்கள் மட்டும் நீங்கள் சாப்பிட வேண்டியவைகள்.

12 மே

காலையும் மதியமும் : அதிக புரதம் அடங்கிய மட்டன், சிக்கன், மீன், முட்டை, பாலடைக்கட்டி, டோஃபு (e.g. meat, fish, chicken, cheese, eggs, tofu) இவை உடலில் சில ராசாயன மாற்றங்களையும் சில ஹார்மோன்களையும் சுரக்க செய்து நம்மை விழிப்போடும், சுறுசுறுப்பாகவும் வைத்து இருக்கும் (stimulate the body's production of epinephrine, norepinephrine, and dopamine (substances called catecholamines) which help the body maintain an alert, awake state.)

இரவு: புரதமே இல்லாத மாவுச் சத்துள்ள உணவு சாப்பிட்டால் அது மெலடோனின் (Melatonin) எனும் ஹார்மோன் சுரக்க உதவி தூக்கத்தை வரவழைக்கும், (e.g. cereal grains, wheat, rice, oats, potatoes, fruit, peas, pasta , bread, dried fruit).

13 மே

இன்று விரதம், அதனால் வெறும் சல்லாட் மற்றும் கிளியர் சூப் குடிக்கலாம். இது நமது தசைகளுக்கு தேவையான சக்தியை ஈரலில் இருந்து குறைக்கும் (கிளைகோஜன்). இது நமது உடல் கடிகாரத்தின் மணியை திருத்த உதவும்.

14 மே

இன்று 12 ஆம் தேதி சொன்ன அதே உணவு வகைகளை உண்ண வேண்டும்.( மட்டன், சிக்கன்).

15 மே

புறப்படும் நாள் மறுபடியும் விரதம்

பி.கு: காபி, டீ மாலை 3 இருந்து 5 வரை குடித்தால் நமது கடிகாரத்தை பாதிக்காது. எப்போது காலை எழ்ந்தவுடன் அரை மணியில் இருந்து முக்கால் மணி நேரதில் காலை உணவு சாப்பிட்டு விடவேண்டும்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி விஜி

பயணிகள் விமானதின் ”காக்பிட்” பயணிகள் பார்க்க தற்சமயம் அனுமதி கிடையாது. தெரிந்த விமானி அதில் இருந்தால், அதுவும் அவர் அனுமதித்தால் மட்டுமே பார்க்கமுடியும். (விமான பாதுகாப்பு காரணமாக). மற்றபடி ”ஃபிளைங் கிளப்” விமானங்களில் “ஜாய் ரெய்டு” க்கு பணம் கொடுத்தால் அழைத்து செல்வார்கள் அப்போது பார்கலாம்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஸ்

அப்படியே இன்னும் கொஞ்சம் இந்தப்பக்கம் வந்தீங்கன்னா நல்லா இருக்கும் (US). நாங்க வீட்டுக்கு போகும் போது உறவினர்கள் எங்களை பார்க்க மதியம், சாயந்திரம் மாதிரி வருவாங்க, கண்ணெல்லாம் சொக்கும், தலை வலிக்கும், ஆனா அப்ப தூங்கவும் முடியாது, அவங்களுக்கு அது புரியவும் புரியாது.

அதே மாதிரி திரும்பி வரும் போது வந்து ஒரே நாளில் வேலைக்கு போற மாதிரி தான் இருக்கும். நாங்க வேற வழிஇல்லாம sleeping pills (மருத்துவர் ஆலோசனைப்படி தான்) எடுத்துட்டு தூங்கிடுவோம். நீங்க சொன்ன உணவு பழக்கவழக்கங்கள் பற்றி அறிந்ததில்லை.

அது மட்டுமில்லாம இந்த உணவுப்பழக்கங்கள் தினமும் கடைபிடிக்கவும் நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறேன், அதாவது காலையில் proteins மற்றும் மாலையில் carbohydrates. ஏன்னா எனக்கு எப்போ சாப்பிட்டாலும் தூக்கம் அரை மணி நேரத்துல வந்துடும் :-)

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

அன்பு சகோதரி திருமதி சேகர்,

மனமார்ந்த நன்றிகள், நீங்கள் கொடுக்கும் இடைவிடாத ஊக்கத்திற்கு, (US, UK ) வருவதற்கான வாய்ப்புகள் அடுத்த வருடத்தில் இருந்துதான். இத்துடன் இலவச இணைப்பாக நீங்கள் கேட்ட கால் வலி காரணங்களும் அதன் நிவர்த்தியும்.

விமான பயணத்தின் போது ஏற்படும் கால் மற்றும் பாததின் வீக்கத்திற்கு ஒரே ஒரு காரணம் தான். அது இரத்த ஓட்டம் சீர்மையாக இல்லாமை. மூளைக்கு நான்கு நிமிடத்திற்கு மேல் இரத்தம் போகவில்லை என்றால் மனிதன் கோமாவில் வீழ்ந்து விடுவான் என்பது அனைவரும் அறிந்த்தே. அதனால் தான் இயற்கையின் படைப்பில் மூளைக்கும் இருதயத்திற்கும் இருக்கும் தூரம், இருதயத்திற்கும் கால்களுக்கு இருக்கும் தூரத்தை விட குறைவு. கால்களுக்கு இரத்த ஓட்டம் பாதிபதற்கான் காரணங்கள். நீண்ட நேர பயணத்தில் இரத்த்தில் உள்ள பிளாஸ்மா பிரிந்து செல்களுக்கு செல்ல முடியாமையினால் சிறை எனப்படும் இரத்த குழாயின் அழுத்தம் அதிகரிப்பதால் ஏற்படுகிறது.

1. நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பது.
2. சீட்டில் இருக்கும் ஃபோம் (ஒரளவுக்குதான் தாக்கம்)
3. கால் மேல் கால் போட்டு உட்காருவது.
4. காலில் உள்ள தசைகளுக்கு இயக்கம் இன்மை.

இதை தவிர்க்க செய்யவேண்டியவைகள்:

1. இருக்கமான உடை அணிந்து பயணம் செய்யக் கூடாது.
2. உட்கார்ந்து இருக்கும் போது அடிக்கடி காலை நீட்டி மடக்குவது கணுக்காலை வலது புறமாகவும், இடது புறமாகவும் சுற்றுவது.
3. கால் மேல் கால் போடுவதை தவிர்ப்பது.
4. மது அருந்த கூடாது (ஹஸ்/உங்களவருக்கு)
5. அரை மணி நேரத்திற்கு ஒர் முறை தண்ணீர் குடித்தல் (அப்போது தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க நடந்து போக வேண்டிய கட்டாயம் வரும் இதனால் காலில் உள்ள தசைகள் இயக்கப்பட்டு இரத்த ஓட்டம் சீராகும்.

இப்படி செய்தால் கால் வீக்கம் வரவேவராது என்று கண்டிப்பாக சொல்லலாம்.

பி.கு: அப்படியே கால் வீங்கி விட்டால். காலையும், இரவு படுக்கும் முன், கணுக்கால் நனையும் அளவுக்கு வெது வெதுப்பான் தண்ணீரில் ஒரு கைபிடி அளவுக்கு கல் உப்பு போட்டு நன்கு கலக்கிய பிறகு காலை அதில் ¼ முதல் ½ மணி நேரம் வைத்திருந்தால் விரைவில் குணமடையும்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ஹைஸ்

வருக வருக, நீங்க இங்க வந்தா உங்களை சந்திப்பதில் ரொம்ப சந்தோசம் தான்.

ஹி ஹி, ஆனா நான் சொல்ல வந்தது வேற - உங்க ஜெட் லாக் பற்றிய பதிவை அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை கொஞ்சம் US மக்களுக்கும் extend பண்ணுங்கன்னு சொன்னேன் :-)

கால் வீக்கம் பற்றிய இலவச இணைப்பு அருமை -இதை எனக்காக கேட்கலை - அறுசுவை மக்களுக்காக கேட்டேன். நாங்க இதில கொஞ்சம் அனுபவபட்டுட்டோம்... ஹி ஹி. இப்பவெல்லாம் direct flight ல போகாம transfer பண்ணி தான் போறது - ஏன்னா நடுவில கொஞ்சம் இறங்கி நடக்கலாமுன்னு தான். அதுமட்டுமில்லாம, நீங்க சொன்ன அடிக்கடி toilet போற விஷயமும் கடைபிடிப்பதுண்டு.

நீங்க சொன்னதோட இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம் - ரொம்ப நேரம் தொடர்ந்து உட்கார்ந்து கொண்டே பயணித்தால் காலில் ரத்தம் தேங்கி உறைந்து போவதற்கான வாய்ப்புகளும் அதிகம். இந்த உறைந்த ரத்தம் பிறகு சிறு கட்டிகளாக பிரிந்து நம் நுரையீரலுக்கு சென்று ரத்த அடைப்பை உண்டு பண்ணிடும். இந்த complication ஆபத்தானதென்றாலும் மிகச்சிலருக்கு தான் ஏற்படும். இருந்தாலும், கண்டம் விட்டு கண்டம் போற direct flight பயணிகள் இது குறித்து எச்சரிக்கையோட இருக்கணும்.

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

மேலும் சில பதிவுகள்