விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

விமான பயணமும் அதன் பிரச்சைகளும்:

சகோதரி திருமதி சேகர் மற்றும் சகோதரர் அருண் சொல்லியது போல் பர்ர்ட், பார்ட்டா பிரித்து எழுதுகிறேன்.

அன்பு சகோதரி திருமதி சேகர்,

சாப்பிட்ட உடன் தூக்கம் வருகிறது என்றால் நீங்கள் அதிக மாவு சத்து (சர்கரை சத்து – High Glycemic Index) உள்ள உணவு உட்கொள்கிறீர்கள். குறைந்த மாவு சத்து சாப்பிட்டால் சரியாகி விடும். அதே போல் நமது சாப்பாட்டில் உள்ள சத்துகளில் 70 சதம் மூளைக்கும் 30 சதம் உடலுக்கும் செலவாகும். இதை அடிபடையாக கொண்டு தேர்வு, விளையாட்டு நேரங்களில் குழந்தைகளின் உணவின் மூலமாக அவர்களுக்கும் உதவலாம்

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அன்பு சகோதரி திருமதி சேகர்,

நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் நீங்கள் எல்லோரும் எப்போதொ ஒரு முறைதானே பயணிக்கிறிர்கள். விமானத்தில் பணிபெண்கள் கூட நடந்து கொண்டு இருப்பார்கள். விமானிகளோ அதே இருக்கையில்தானே உட்கார்ந்து இருக்கிறார்கள். அவர்களின் உடல்கூறில் இறைவன் ஏதும் வித்தியாசத்தை படைக்கவில்லையே. அப்படி என்றால் அவர்களுக்கு ஏன் இது போல் வருவதில்லை? 65 வயது வரை பறந்து கொண்டுதான் இருகிறார்கள், என்றால் அது ஏன்? ஓன்று விழிப்புணர்வு. இரண்டுவது உடற்பயிற்சி அவ்வளவுதான். (They are not different from arusuvai members)

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

அண்ணா டெலிவரிக்குமுன் வக்கேசன் பிளான் பண்ண உங்களுடைய திரட் உதவியாக இருந்தது மிக்க நன்றி.நான் இதில் பதிவு போட காரணம் இந்த மிகவும் பயனுள்ள திரட் என் பக்கத்துக்கு வரவேண்டும் என்பதே.உங்கள் பதில்கள் விளக்கங்கள் ஒவ்வொன்றும் தமிழில் அவ்வளவு நேர்த்தியாகவும் ஆழமான கருத்தாகவும் இருக்கு.

சுரேஜினி

நன்றி ஹைஸ்

இப்ப glycemic index பத்தி தான் படிச்சிட்டு இருக்கேன், நான் செய்து சாப்பிடும் புழுங்கலரிசி உணவு high glycemic index உடையதுன்னு குடுத்திருக்காங்க. இது பற்றி தெளிவா தெரிஞ்சுட்டு வேற ஏதாவது இழைல இதை பத்தி எழுதறேன்... இதனை பற்றிய அறிமுகத்துக்கு ரொம்ப நன்றி...

நீங்க சொல்வது சரி தான் - உங்களுக்கு அதுவே பணி என்பதால் அது குறித்த விழிப்புணர்வும் பயிற்சியும் உண்டு... ஆனா எங்களுக்கு, எப்போவாச்சும் வருடத்துக்கு ஒரு முறை தான் இந்த மாதிரி intercontinental travel, அது தான் பிரச்சனை - இப்ப இதையெல்லாம் படிச்ச பிறகு நாங்களும் விவரமாயிடுவோம்......

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

எங்க ரொம்ப நாளாவே காணோம் ? உடல்நிலை எப்படி இருக்கு? வேறு எதாவது கேட்க வேண்டும் என்றால் மின்னஞ்சல் அனுப்பவும், கண்டிப்பாக பதில் சொல்கிறேன்.

Haish12@gmail.com

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

ரொம்ப நன்றி. நல்ல பொறுமையா பதில் தருவதை நினைத்து சந்தோஷமா இருக்கு.
ப்ளைட்டில் டாக்டர்கள் இருப்பார்களா? ஏன் என்றால் என் தோழி இந்தியாவுக்கு பயனம் செய்ய போகிறாங்க. அவங்க அம்மாவுக்கு நடக்க கூட முடியாமல் இருக்கிற நிலைமை. உடல்நிலை ரொம்ப முடியாமல் இருக்கிறது.
மேலும் உங்கள் பதிவுகளை நான் படித்து எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அவசியம் கேட்கிறேன்.

எங்கள் வீமானப்பயணம் எப்போதும் இரவில் தான் அமைகிறது.என் மனதில் அடிக்கடி இந்த கேள்வி வருவதுண்டு.இரவில் விமானம் ஓட்டுவது விமானிகளுக்கு ஈசியா?அல்லது பகலிலா?எதுவும் வித்தியாசம் இருக்கா?நேரம் கிடைக்கும் போது பதில் சொல்லுங்கள்.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

சகொதரர் ஹைஷ்
நல்லா பயனுள்ள குறிப்புகள் குடுக்கிறிங்க நன்றி தொடர்ந்து எலுதுங்கள்.

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ஹெலோ ஹைஷ் ,
மிகவும் நல்லதொரு தலைப்பு கொடுத்து விளக்கமும் கொடுப்பதற்கா என் நன்றிகளும் பாராட்டுகளும் உங்களுக்கு.
நாங்கள் முதன்முதலாக குழைந்தையுடன் விமான பயணம் மேற்கொள்ள இருக்கிறோம் இன்னும் ஓரிரு மாதங்களில் சரியான நேரத்தில் இது அமைந்தது போல் உள்ளது.
நீங்கள் கடலுரில் படித்தவர் என்பதை வேறொரு த்ரெடில் பார்த்தேன்.உங்கள் சொந்த ஊர் எது? என் கணவரின் ஊர் தான் அது.அவரும் செயின்ட் ஜோசப்பில் தான் பள்ளியில் படித்தார்.
மேலும் தொடந்து எழுதுங்கள்.
எனக்கும் சகோதரர் தான் நீங்கள் எல்லோரும் அதை குறிப்பிட்டுள்ளதால் நான் ஒரு வித்தையாசமாக அறுசுவை தோழிகள் போல் தோழர் என அழைதுள்ளேன். தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.

மீண்டும் என் நன்றிகள் பல
உமா.

அன்பு சகோதரிகளுக்கு,

சகோதரி விஜி : பயணம் செய்பவர்களில் யாரவது மருத்துவர் இருக்கலாம். ஆனால் விமானத்தில் விமானிகள் இருவர், 50 பயணிகளுக்கு ஒரு பணி பெண் என்ற விகிததில்தான் இருபார்கள். மருத்துவர் கிடையாது. அப்படி உயிருக்கு போராடும் நிலை யாரக்காவது ஏற்ப்பட்டால். விமானத்தை உடனடியாக கிழே இறக்கிதான் உதவி செய்யவேண்டும். (Distress and Emergency Landing ) அதிஅவசர மற்றும் அவசரமாக விமானத்தை இறக்குவதை பற்றி பின் வரும் பகுதியில் எழுதுகிறேன்.

சகோதரி ஆசியா உமர்: விமானம் ஓட்ட இரவு அல்லது பகல் என்பதில் அவ்வளவு வித்தியாசம் கிடையாது. எனக்கு தனிப்பட்ட முறையில் இரவு பிடிக்கும். வானத்தில் உள்ள விண்மீன்கள், எரி நட்சத்திரங்கள், கீழே தெரியும் சிறிய, பெரிய ஊர்களின்(அதில் எத்தனை மனிதர்கள் என்று வியந்து) விளக்கு வெளிச்சங்களை பார்த்து ரசித்து, ஆச்சரிய பட்டு கொண்டு விமானம் ஓட்டுவது மிக அற்புதமான ஒன்று.

சகோதரி சுகா: பராட்டுதலுக்கு மிகவும் நன்றி.

சகோதரி உமா : நான் பிறந்து கடலூர் (ஜி.எச் இல்) பூர்விகமும் அதுதான். ஆனால் ராஜஸ்தானில் இருந்து கடலூர் வரை 9 பள்ளிகளில் படித்து, கடைசியாக கடலூர் செய்ட் ஜோசப் (8 வது முதல் 11 வது (1977-78) வரை படித்தேன்) பின்பு கடலூரில் PUC அரசு கலை கல்லூரியில் படித்தேன். உங்கள் கணவர் எந்த வருடம் அங்கு படித்தார்? அனேகமாக அதே ஆசிரியர்கள் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். (ஆட்டோகிராப் படம் நினைவுக்கு வந்தது) உறவு என்பது உடல் (வயது) சார்ந்த்து, ஆனால் அருசுவை உறவு மனம் மற்றும் உணர்வு சார்ந்த்து (வயது சார்ந்த்து அல்ல). அதனால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். உங்களது பணியும், திறமைகளும் இன்னும் வளர என் வாழ்த்துகள்.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்