தேதி: April 3, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
சுறா மீன் – அரை கிலோ
வெங்காயம் – 2
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் - 6
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை – 6 இலை
கொத்தமல்லி – சிறிதளவு
கடுகு – தாளிக்க
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பூண்டினை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

சுறா மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் நன்றாக வேக விடவும்.

பிறகு வேக வைத்துள்ள சுறாமீனில் இருந்து தோலினை நீக்கிவிட்டு அதனை உதிர்த்து கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு தாளித்த பிறகு மிகவும் பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டினை சேர்த்து வதக்கவும்.

பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அதில் இஞ்சி, தேவையான அளவு உப்பு மற்றும் உதிர்த்து வைத்து உள்ள சுறா மீனை சேர்க்கவும்.

அதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும். 5 நிமிடம் குறைந்த தீயில் வேகவிடவும். (தண்ணீர் சிறிது கூட சேர்க்க கூடாது)

கடைசியாக இறக்குவதற்கு சற்று முன் கொத்தமல்லி தழையை தூவி கிளறி விடவும்.

சுவையான சுறா புட்டு ரெடி. இந்த குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

Comments
கீதாச்சல் சுறா புட்டு,
கீதாச்சல் சுறா புட்டு,
நான் இவ்வளவு நாளும் நினைத்திருந்தேன் சுறாப்புட்டு என்றால், சுறா மீனைப் போட்டு புட்டு அவிப்பது என்று, கீரைப்புட்டுப்போல். இதை நாங்கள் சுறா வறை என்றுதான் சொல்வோம்.
எனக்கு இங்கு சுறா கிடைப்பதில்லை, போன தடவை கிடைத்தது, அதை பத்திரமாக வைத்துள்ளேன், என் விரதம் முடிய செய்து அறுசுவைக்கு அனுப்பலாம் என்று. நல்லவேளை உங்கள் குறிப்பு போட்டதைப் பார்த்து விட்டேன். நன்றாகச் செய்திருக்கிறீங்க. எனக்கு இது நல்ல விருப்பம், நான் கொஞ்சம் தேங்காய்ப்பூவும் சேர்ப்பேன்.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
சூப்பர்
சூப்பரா இருக்கு கீதா,நானும் எப்ப விரதம் முடியும்னு இருக்கேன்.
அதிரா, மேனகா
அதிரா, மேனகா
மிகவும் நன்றி.
விரதம் முடியும் வரை காத்து இருக்காமல் மீன் கிடைக்கும் பொழுதே செய்து விடுங்க…நான் அப்படி தான் என்னுடைய விரத்தினை விட்டுவிட்டேன்..என்ன செய்ய…உங்களை போல என்னால் இருக்க முடியவில்லை..(விரதம் என்று நீங்கள் கூறுவது உடல் இளைக்க எடுக்கும் முயர்ச்சியை தானே சொல்லிறிங்க…உண்மையான விரதமி இல்லை அல்லவே…அப்படி என்றால் மன்னித்துவிடுங்க பா…)
எங்களுக்கு உங்களுடைய கீரைபுட்டு செய்முறையினை சொல்லி கொடுங்கள்…இது உங்கள் ஊரின் சிறப்பு உணவு என்று நினைக்கிறேன்…நான் இதுவரை கீரைபுட்டு சாப்பிட்டது இல்லை..
அன்புடன்,
கீதா ஆச்சல்
கீதா சுறாபுட்டு
கீதா சுறாபுட்டு பார்க்கவே சூப்பரா இருக்கு, எனக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்லுங்க நீங்க இந்தியாவில ,அதுவும் தமிழ்நாட்டில் ஏதாவது கட்சில இருக்கீங்களா?:)(பிரசண்ட்டேசன் சூப்பர்:0)
Hi Geetha
Looks just Beautiful! I'll try this for sure. Thx for sharing :))
Vaazhga Valamudan
நன்றாக இருக்கு
indira
indira
சுறாபுட்டு
சரஸ்வதி மிகவும் நன்றி பா.
எப்படி இருக்கிங்க?
இந்திரா,
மிகவும் நன்றி. கண்டிப்பாக செய்து பாருங்கள்.
கவி,
இது உங்களுக்கே நியமாபா…நான் பாட்டுக்கு இருக்கின்…நீங்கள் கட்சி, அரசியல் என்று என்னை சொல்றிங்க…வீட்டில் அனைவரும் நலமா? உங்கள் மகன் எப்படி இருக்காங்க?
அன்புடன்,
கீதா ஆச்சல்
சுறா புட்டு
சுறா புட்டு ரொம்ப அருமையா இருந்தது
சுறா புட்டு
தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி nasreen.
doubt
i want to know ( in english what is the name of sura)
HAVE A NICE DAY
In english its Shark fish :)
In english its Shark fish :)
சுறா
போன வருஷத்துக் கேள்வி. பரவாயில்லை, தெரிந்ததைச் சொல்லி வைப்போம், யாருக்காவது உதவும். ;)
இங்கு 'சீ ஃபூட்' விற்குமிடங்களில் சுறா மீனுக்கு "lemon fish" என்று சொல்லுவார்கள்.
- இமா க்றிஸ்