PERIODS PROBLEM

எனக்கு குழந்தை பிறந்து 3 வ்ய்து ஆகிறது periods problem one month விட்டு வ்ருகிற்து over bleedinga இருக்கு நானும் எவ்ளோ DOCTOR இடம் காட்டிடேன் எந்த பயனும் இல்ல now i am in dubai இப்பவும் problem தொடர்ந்துகிட்டேதான் இருக்கிறது DOctor கொடுத்த tablet போட்டுதான் stop பண்றேன் இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன் friends i have polycystic ovaries

தோழிகள் சுகா, மற்றும், வினை சொன்ன‌‌ படி செய்யுங்கள்

இன்னும் ஒன்று டாக்கட்ரிடம் போய் காண்பியுங்கள்.
இங்கு பிரைம் மெடிக்கலில் மஞ்சு கைனக்காலஜிஸ்ட் என்க்கு தெரிந்த ஒருவருக்கு நல்ல டிரீட்மெண்ட் செய்தார் போய் வேண்டுமானால் கேட்டு பாருஙக்ள்,

எனக்கு தெரிந்தது/
1. முட்டை பால் காலையில் வெரும் வயிற்றில் குடிங்க/
2. அபப்டி இல்லை இரண்டு முட்டை அல்ல்து முறன்று அவித்து மிளகு உப்பு போட்டு காலையில் சாப்பிடுங்கள் அப்படியே ரெஸ்ட் எடுக்கவும்.
3. சர்க்கரை நோய் எதுவும் இல்லை என்றால் தேன் ஒரு குழிகரண்டி அள்வு குடித்து பாருஙக்ள்.

Jaleelakamal

அன்பு சகோதரி இதுவும் தங்களுக்கு பயன்படும் என நினைக்கிறேன்.

“அந்த மூணு நாள் ரொம்ப கஷ்டமா இருக்கு ... அடி வயிறெல்லாம் வலிக்குது... காலு கையெல்லாம் அசதியா இருக்கு... வாந்தி வாந்தியா வருது... எந்திரிக்கவே முடியாம என்னென்னமோ செய்யுது ...”

முதல்ல வேளா வேளைக்கு நல்லா சாப்பிடுங்க... நெரைய பழங்க, கீரையெல்லாம் சேத்துக்க வேணும்.

வெத்துல - - - 4
சீரகம் - 2 கரண்டி
சின்ன வெங்காயம் - 4
பூண்டுப் பல்லு - 4

இது எல்லாத்தையும் சேர்த்து அரைச்சு, கொதிக்க வைச்சு, அந்தச் சாறோட வெண்ணெய் கலந்து, மாதவெலக்கு வாரதுக்கு முன்னாடியும், வந்த பின்னாடியும் குடிக்கணும்... இது மாதிரி 3 இல்ல 4 மாசத்துக்கு, குடிச்சிக்கிட்டு வந்தால் குணம் தெரியும்

இன்னொரு மருந்து

அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

இன்னொரு மருந்து

“சடமாஞ்சில், திரிகடுகு, சிற்றரத்தை சேர்த்து இடிச்சி கஷாயம் செஞ்சு குடிக்கலாம். இந்த ரெண்டு மருந்தையும் செஞ்சு குடிச்சா, மாதவெலக்கு காலத்துல வர்ற தலைவலி, வாந்தி, வெள்ளைப் படறது, அசதி எதுவுமே வராது... கருப்பையும், சினைப்பையும் கூட வலுப் பெறும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க....”

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

முற்காலதில் மாதவிலக்குக் காலங்களில் பெண்களை தனியாக தங்க விடுவார்கள். எந்த வேலையும் செய்ய விடாமல் முழு ஓய்வு கொடுப்பார்கள். சிலர் இதை மூடப் பழக்கம் எனலாம். ஆனால் அந்த பழக்கத்திலும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.

தற்போது நவீன உலகத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வு என்பது இல்லை. பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு சுழற்சியை ஒரு சாபமாக நினைக்கின்றனர். இது தாய்மை உணர்வை நினவுப்படுத்து ஒர் நிகழ்ச்சி என்பதையே மறந்து விடுகிறார்கள். பசி, தூக்கம் போல் இதுவும் ஒரு வித இயற்கை நிகழ்வுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சில பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி போன்றவற்றால் அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதனால் மாதவிலக்கை தள்ளிப் போடவும், சில சமயங்களில் வெகு விரைவில் வரவும் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது. இயல்பாக மாதம் ஒருமுறை என்ற சுழற்சியை மாற்றினால் பின் வரும் காலங்களில் பல உபாதைகளை சந்திக்கவேண்டி வரும்.

பெண்களின் மாதவிலக்கானது வாத, பித்த, கப அடிப்படையில் உடலின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

வாத உடம்புக் காரர்களுக்கு மாதவிலக்கின் இடைவெளி ஒழுங்கற்றிருக்கும். ஓரளவுக்கு உதிரம் குறைவாக, உறைந்த நிலையில் சிறு கட்டிகளாகக் கூட வெளியேறும். இந்த காலகட்டத்தில் அடிவயிறு இறுக்கமாக இருப்பதுபோல் தோன்றும். வயிற்று வலியும் கூடவே மலச்சிக்கலும் ஏற்படும். சில நேரங்களில் வயிற்றுப் போக்கு கூட ஏற்படலாம். எரிச்சல், கோபம், தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.

இந்த வாதஉடம்புக்காரர்கள் அதிக வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் எடையைக் குறைக்க நினைத்தால் சில சமயங்களில் மாதவிலக்கு தள்ளிப்போக வாய்ப்புண்டு.

பித்த உடம்பைக் கொண்ட மகளிருக்கு மாதவிலக்கு இடைவெளி குறையும். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். 5 நாட்களுக்கு மேல்கூட உதிரப்போக்கு இருக்கும். வயிற்றுப்போக்கு, முகத்தில் பருக்கள் தோன்றும். உடம்பு தடித்து காணப்படும். ஒருபக்க தலைவலி தோன்றலாம்.

கப உடம்பு மகளிருக்கு இயல்பான உதிரப்போக்கு இருக்கும். ஆனால் இவர்களுக்கு பல உபாதைகள் அதாவது மார்பகங்களில் வீக்கம், முதுகு, இடுப்பு, கை, கால்களில் வலி போன்றவை ஏற்படும். அஜீரணக் கோளாறு ஏற்படும். இத்தகைய உபாதைகளுக்கு உணவு மூலமும், ஓய்வின் மூலமும் நடைமுறையிலேயே தீர்வு காணலாம்.

கடைபிடிக்க வேண்டியவை

முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.

அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும்.

அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும்.

ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.

டீ, காபி, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.

காய்ச்சி ஆறவைத்த நீரை அருந்துவது நல்லது.

வாசனை திரவியங்களை உபயோகப் படுத்த வேண்டாம்.

மாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால்

பத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும். இந்தக் காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு பெறச் செய்யும்.

மாதவிலக்கின் போது ஓழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளைக் கழுவி எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பனைவெல்லம் கலந்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அந்த தண்ணீரை ஆறவைத்து குடித்து வந்தால் உதிரப்போக்கு சீராக இருக்கும்.

மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

அன்பு சகோதரன்

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

டியர் பெனாசி முதலில் நியாபகம் இல்லை..யோசித்தபிந்தான் நியாபகம் வந்தது முன்பு பேசி இருக்கேன்னு சரியான டாக்டர்ர போஇ பாருங்கள்...இந்தியா பக்கம் வந்தால் இங்கே காட்டுங்க

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Anbana farvin, vanakkam,.
Anakamaga neengal nalamagi eruppeergal endru ninaikeran.

www.madanhomeoclinic.com entha lingil
maruthuvarai parkkavum. He is the Hon.Prof. in sri sairam homeopathy medical college in chennai and he is the classmate of my homeo doctor Mr.Parthiban
His E-mail < madanhomeoclinic@dataone.in>. His wife is also homeo doctor.
You pl. go through the website and have the best treatment.
May god bless you for good health.
Anbudan Poongothai

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

intha mathiri nerankali egg niraya sappidungal.nalla palan tharum.

மேலும் சில பதிவுகள்