மசாலா உளுந்து பூரி

தேதி: April 5, 2009

பரிமாறும் அளவு: (4 - 6 )நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதாமா (கோதுமைமா) - 500 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
பால் - தேவையான அளவு
உளுத்தம்பருப்பு - 200 கிராம்
பெருஞ்சீரகம் (தனியா) - 2 தேக்கரண்டி
சின்ன சீரகம் (சீரகம்) - 2 தேக்கரண்டி
செத்தல் மிளகாய் (காய்ந்த மிளகாய்) - 4
மிளகு - சிறிதளவு
பட்டர் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தண்ணீர்- தேவையான அளவு
கொதிதண்ணீர்- தேவையான அளவு


 

ஒரு பாத்திரத்தில் உளுத்தம்பருப்பை போட்டு அதன் மேல் தண்ணீர் விட்டு அதனை 1 மணித்தியாலம் ஊறவிட்டு அதனை அரைக்கவும்.
பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருஞ்சீரகம்(தனியா), சின்னசீரகம்(சீரகம்), செத்தமிளகாய்(காய்ந்தமிளகாய்), மிளகு, உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.
இன்னொரு பாத்திரத்தில் மைதாமா(கோதுமைமா), உப்பு, பட்டர், பால், கொதிதண்ணீர் ஆகியவற்றை சேர்த்து சப்பாத்திக்கு (ரொட்டிக்கு)மா குழைப்பதினை போல குழைக்கவும்.
குழைத்த மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
சிறிய உருண்டைகளாக உருட்டியதன் பின்பு அதிலிருந்து ஒரு உருண்டையை எடுத்து அதனை ஒரு பலகையில் வைத்து அதனை ரோலரினால் (உருட்டு கட்டையினால்) உருட்டி தட்டையாக்கவும்(அப்பளம் போல தட்டவும்).
பின்பு செய்து வைத்திருக்கும் உளுந்து கலவையில் இருந்து (1- 2)மேசைக்கரண்டி எடுத்து அதனை தட்டையாக்கிய மாவின் நடு பகுதியின் மேல் வைத்து மூடவும்.
மூடிய பின்பு அதனை மீண்டும் உருண்டையாக்கி மீண்டும் ரோலரினால்(உருட்டு கட்டையினால்)உருட்டி தட்டையாக்கவும்(பூரி போல தட்டவும்).
தட்டியபின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பின்பு இதனை போல மற்றைய பூரிகளையும் செய்யவும்.
எல்லாவற்றையும் செய்த பின்பு அவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கியபின்பு அதில் எண்ணெய்விட்டு சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் தட்டி வைத்திருக்கும் பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு அதனை பொரித்து எடுக்கவும்.
அதன் பின்பு பூரி தயாராகிவிடும். தயாரான பூரியை இரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
இதனைப் போல எல்லா பூரிகளையும் செய்து பொரித்தெடுத்து வைக்கவும்.
பின்பு ஒருதட்டில் மசாலா உளுந்துபூரிகளை வைத்து அதனுடன் கிழங்கு பிரட்டல் கறியுடன் அல்லது ஏதாவது ஒரு பிரட்டல் கறியுடன் பரிமாறவும்.


மசாலா உளுந்து பூரி சத்தானது, உடலுக்கு ஊட்டம் தரக்கூடியது மிக மிக சுவையானது, பலத்தை தரக்கூடியது அத்துடன் இது பெண் குழந்தைகளுக்கு மிக மிக நல்லது. எச்சரிக்கை - உளுந்து அலர்ஜி உடையவர்கள், இருதய நோயாளர் வைத்தியரின்

ஆலோசனைப்படி உண்ணவும். மாற்று முறை - விரும்பினால் மைதாமாவுடன் ஒரு முட்டையையும் உடைத்து ஊற்றி சேர்த்து குழைக்கலாம்(சுவை கூடுதலாக காணப்படும்)

மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாய் துஷ்யந்தி வணக்கம் நலம்தானா?

உங்களின் இந்த மசாலா உழுந்து பூரியில் இரண்டாவதாக உழுந்தினை அரைத்த பின்னர் பெரும்சீரகம் மிளகாய் உப்பு மிளகு ஆகியவற்றினை அரைத்த உழுந்துடன்
அரைத்தா அல்லது எப்படி சேர்ப்பது என்று தயவு செய்து குறிப்பிடவும்.
அடுத்து உழுந்தினை எந்த பதத்திற்கு அரைப்பது? இருக்கமாகவா அல்லது தோசை
மா பதத்திட்கா?
உங்கள் அருமையான குறிப்புகளுக்கு நன்றி

அன்புடன்
ஈசன்

ஹாய் ஈசன் அறிவது நான் நல்ல சுகமாக இருக்கின்றேன்.நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்? எந்த நாட்டில் இருக்கின்றீர்கள்? இயலுமானால் உங்களை பற்றி எழுதவும்? எனது குறிப்பை பார்த்து விளக்கம் கேட்டதிற்கு நன்றி நீங்கள் கேட்ட கேள்விகளுக்கான விளக்கம் கீழே உள்ளது இதற்கு மேல் விளக்கம் தேவை என்றால் எழுதவும்.
விளக்கம் -
பின்பு ஊறிய உளுந்தை கிரைண்டரில்(மிக்ஸியில்)போட்டு தண்ணீர் அதிகம்விடாது மிகமிக நன்றாகவும் கட்டியாகவும் அரைக்கவும்,பின்பு அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பெருஞ்சீரகம்(சேம்பு),சின்னசீரகம்(சீரகம்)மிக மிகசிறியதுண்டுகள் செத்தமிளகாய்(காய்ந்த மிளகாய்) ஓரளவு அரைத்த மிளகு,உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்கவும்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"