தூய தமிழில் பேசலாம் வாங்க

இந்த பதிவு ஒரு போட்டி பதிவு
எனக்கும் சோனியாவுக்குமான சவால் இது
(சவால் உருவான இடம்
ஹாய் எனக்கு திருநெல்வேலி உங்களுக்குமா?)

அனைவரும் வருக ஆதரவு தருக

வெற்றியின் பக்கம் நீங்கள் தோழிகளே
நீங்கள் என் பக்கம்
அதனால் வெற்றி என் பக்கம்

சோனியா வின் இந்த பயம் தான்
எனது வெற்றியின் முதல் படி

பாலும் தெளி தேனும்
பாகும் பருப்பும்
இவை நாலும் கலந்துங்களுக்கு
நான் தருகிறேன் தோழியரே

எனக்கு ஆதரவு தர வாரீரே

சுப்ஸ் என்னப்பா இது உடனே துடங்கீடியா. நான் சும்மா விளையாடுக்கு அப்படி எழுதுனேன். அதன் பிறகு நான் அடுத்த பதிவு போட போனேன் பா ,அதுக்குள்ள நெட் ஒபென் ஆகல அதான் இப்பம் போடுரேன். என்னால யாருக்கும் பலன் இல்லை என்றாலும், மன வருத்தம் குடுக்க நான் விரும்பவில்லை, நான் உங்கள கிண்டல் செய்வதாக நினைத்து யெதாவது எழுதி அது அடுத்தவங்க மனசை புன்படுத்த போகுது. இந்த விவாதத்துக்கு நான் வரவில்லை.சாரி.எப்போதும் போல எல்லாருக்கும் பிடித்த தங்கை. தோழி, மகளாக இருக்க விரும்புரேன் பா.அரட்டை அடிப்ப தோடு நிறுத்துவது எனக்கு நல்லது.

அன்புடன் சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

என்னபா திடீரென இவ்வாறு பேசுகிறீர்கள்
இது சவாலோ போட்டியோ இல்ல பா
நம்மில் எத்தனை பேரால் தூய தமிழில் பேச முடிகிறதென்று நமக்கு நாமே வைத்து கொள்ளும் சோதனை பா
(தூய தமிழில் ஒரு நிமிடம் பேசவும் என்று)
அது போல் தான் யார் மனதையும் புண் படுத்துவது இல்லை பா

இந்த பதிவிற்கான ஆட்சேபனைகள் வரவேற்க படுகின்றன

சுப்ஸ்,

ஈஸி, ஈஸி, கூல், கூல்... கொஞ்சம் அந்த தாமிரபரணி தண்ணீ எடுத்து குடிங்க....இப்ப பேசுங்க..பாத்தீங்களா..எவ்வளவு சாந்தமா ஆயிட்டீங்க..

என்னதிது... உடனே வரிஞ்சு கட்டிட்டு களத்தில குதிச்சுட்டீங்க..நீங்க மட்டும்தானா, இல்ல அடியாட்கள் யாரும் பக்கத்தில இருக்காங்களா..

பாத்தீங்களா, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்டீங்க.. நல்லவேளை 'திருப்பாச்சி' எதுவும் கையில இல்லையே?

சோனியா சொன்ன மாதிரி இங்க சும்மா ஜாலியா பேசமட்டும்தான் செய்யணும். அதாவது "Only talking..No Action.."

எனக்கு ரெண்டு ஊரும் ஒண்ணுதான்ப்பா. எதை விட்டுக்கொடுக்க முடியும்?

இப்ப இதை என் வீட்டுக்காரர்ட்ட சொன்னா உடனே "நாகர்கோவில்காரங்க எப்பவும் தன்மையாதான் இருப்பாங்கன்னு இப்பவாவது நம்பறியா"ன்னு என்னை (மறுபடியும்) வாருவாரே, என்ன பதில் சொல்வேன்??

நீங்கள் உங்கள் கணவரிடம் கூறுங்கள் அக்கா
நாகர்கோவில் ஆட்கள் கு நம்பிக்கை அதிகம் என்று
தன்னால் தூய பேச முடியாது என்ற நம்பிக்கைய சொல்றேன்

இது என்ன பனி போரா
இல்லையே தமிழை வளர்க்க
எதோ நம்மால் முடிந்தது

இந்த பதிவிற்கு முதல் பதிவே ஆட்சேபனை பதிவு என்பதால் இந்த பதிவிற்கு இன்றே மூடு விழா

இந்த மூடு விழாவிற்கு காரணமான அனைவர்க்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

நன்றி வணக்கம்

சுபம்

உங்கள் கனவர் சொன்னது சரிதான். நாங்கள் எப்போது விவாதத்திற்க்கு போவது கிடையாது. சரியாக தான் சொல்லி இருகங்க உங்கள் கனவர். அவருக்கு என் நன்றியை சொல்லி விடுங்க மா. நாங்கள் வீன் விவாதத்திற்கு போவதும் கிடையாது வந்த விவாதத்தை விடுவதும் கிடையாது. சுப்ஸ்க்கு பதில் யார் மனதையும் காயப்படுத்தாமல் நான் தனியா கொடுக்கிறேன் மா.

அன்பு தங்கை சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சுப்ஸ் நீங்க சொல்வது சரிதான், நீங்க ஒன்னு செய்ங்க. நாகர்கோவிலா திருநெல்வேலியா என்று பார்க்காமல் அனைவரையும் வந்து இங்கு தூய தமிழில் பேச சொல்லுங்கள். அப்படியாவது உங்கள் ஆசை நிரவேறட்டும். தமிழும் வளர்ந்த மாதிரி இருக்கும். எந்த பிரச்சனையும் வராது பா.

அன்பு தோழி சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

//நாகர்கோவிலா திருநெல்வேலியா ///

ஊர்ப்பெயரை மாற்ற வேண்டும்:) எனக்கு இரு ஊர்களிலும் சகோதர, சகோதரிகள் இருக்கிறார்கள், அதனால் ஒரு பக்கம் வாதிட நான் மாட்டேன்..... மாட்டேன்.....:)

உள்ளம் உருகுதம்மா.... உங்கள் தலைப்பெல்லாம் பார்க்கையிலே.......:)

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சுப்ஸ் நீங்க சொல்வது சரிதான், நீங்க ஒன்னு செய்ங்க. நாகர்கோவிலா திருநெல்வேலியா என்று பார்க்காமல் அனைவரையும் வந்து இங்கு தூய தமிழில் பேச சொல்லுங்கள். அப்படியாவது உங்கள் ஆசை நிரவேறட்டும். தமிழும் வளர்ந்த மாதிரி இருக்கும். எந்த பிரச்சனையும் வராது பா.

அன்பு தோழி சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்