கசகசா அல்வா

தேதி: April 6, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பால் - 200 மி.லி
கசகசா - 250 கிராம்
வெல்லம் - 300 கிராம்
நெய் - 100 கிராம்
உலர்ந்த திராட்சை - 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 10
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி


 

கசகசாவை 2 மணிநேரம் பாலில் ஊறவைக்கவும்.
அதை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைப் பாகு காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவும்.
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் நெய்யை விட்டு சூடு செய்யவும்.
அரைத்த கசகசாவை நெய்யில் ஊற்றி மெல்லிய தீயில் கைவிடாமல் கிளற வேண்டும்.
கலவை கெட்டியாகும் போது வெல்லப்பாகை விட்டுக் கிளறவும்.
ஒட்டாத பதம் வரும் போது வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் போட்டு கிளறி இறக்கவும்.
சுவையான கசகசா அல்வா தயார்.


மேலும் சில குறிப்புகள்


Comments

hello madam this is the first time i m replying.i tried this halva yesterday for my husband birthday,it was came very good,en husband office la ellorum paratinanga.thanku very much.