சிரிய நாடு - பகுதி 3

தோழிகள் பலரும் சிரிய (Syria) நாடு பற்றி தெரிந்து கொள்ள காட்டிய ஆர்வத்தை பார்த்து எனக்கும் இந்த நாட்டை பற்றி எழுத ஆசை வந்துவிட்டது. :) எனக்கு தெரிந்த விஷயங்களை என் அனுபவங்களை இங்கே எழுதுகிறேன். உங்களுக்கு சுவாரச்யாமாக இருந்தால் சந்தோஷம்... இதுவரை எழுதிய அனுபவம் இல்லை, இதுவே முதன் முறை, பிழைகளுக்கு மன்னிக்கவேண்டும்.

பகுதி 2, 100 பதிவுகளை தாண்டியதால் ஓப்பன் செய்ய தாமதமாகும்.... ஆகவே தோழிகள் அனைவரும் "சிரிய நாடு - பகுதி 3"ல் தொடர வேண்டும் என அன்போடு கேட்டு கொள்கிறேன். இதையும் 100 பதிவு ஆக்குங்கோ, என் சந்தோஷத்தை பலமடங்காகுங்கோ. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டமாஸ்கஸ் வந்த சில தினங்களில் எங்களுக்கு பக்கத்து நாடான பேரூத்(Beirut - Lebanan) போய் வர வாய்ப்பு கிடைத்தது. ஒரே நாள் தான்... அதிகம் சுற்ற நேரம் கிடையாது. ஆனாலும் போய் வந்த அந்த அனுபவத்தை சொல்கிறேன். டமாஸ்கசில் இருந்து கிளம்பி 1 மணி நேரத்தில் எல்லையை தொட்டோம். விசா வாங்கி உள்ளே நுழையவே எடுத்தது 2 மணி நேரம். முடித்து அந்த பக்கம் போனதுமே வித்தியாசம் தெரிந்தது.... ஏதோ மலை மேல் பயணம்... மிக குருகிய சாலை... அதில் சிட்டாக பறக்கும் வாகனங்கள். லெபனான் நாட்டின் தலைநகரம் தான் பேரூட். மிக அழகான கடற்கரை ஓரம் அமைந்த ஊர். நம்ம பல படங்களில் பார்த்து இருக்கும் "Pigeon Rocks" இந்த நாட்டில் தான் இருக்கு. போகும் வழியில் சமீபத்தில் நடந்த போர் காரணமாக பாதித்த இடங்களை கண்டு கண்ணில் நீர் வரும்போல் இருந்தது. அழகான கட்டிடம்.. ஜல்லடையாக ஓட்டை போடப்பட்டிருந்தது... அத்தனையும் தோட்டா மழை. அழகான இரண்டு மலைகளை இனைக்கும் மிக பிரம்மான்டமான ஒரு பாலம் நடுவில் துனி கிழிந்து தொங்குவது போல் தொங்கியது.... இந்த ஊரை பற்றி ஏன் சொல்றேன்னா... வாழ்க்கையில் எல்லாரும் ஒரு முறையாது இந்த ஊரை பார்க்கனும்... அத்தனை அழகான ஊர். சிரியாவில் இருக்கும் என்னை போன்ற வெளி நாட்டவர்க்கு முக்கியமாக இந்தியா இலங்கையை சேர்ந்தவங்களுக்கு நம்ம நாட்டு உணவு பொருள் எல்லாம் இங்கு தான் கிடைக்கும். அங்கு இருக்கும் ஒரு மார்க்கட் ஏரியாவில் இலங்கை கடைகள் மிக அதிகம். அங்கு அவர்களின் ஆடைகள், உணவு வகைகள், காய்கறிகள் எல்லாம் கிடைக்கும்.

இது மாதிரி சிரியாவில் இருந்து போய் பார்க்க கூடிய நாடுகள் சில ஜோர்டன், டர்க்கி எல்லாம்.... ஜார்டன்(Jordan) போன அனுபவமும் உண்டு.... அங்க தான் இப்போ உலக அதிசயத்தில் ஒன்றான பெட்ரா இருக்கே. ஆனால் உண்மையில் இந்த நாட்டுக்குலாம் போய் வந்தா தான் சிரியா எவ்வளவு அழகான நல்ல ஊருன்னு தோணும். ஏன்னா... இங்கு எல்லாமே விலைவாசி ரொம்ப அதிகம். ஒரு பொருளும் வாங்க முடியாது. ஜோர்டனில் மிகவும் பிரபலமான ஒன்னு பாட்டிலில் மண்னால் ஓவியம் உருவாக்குவது. புரியலையா??? அதாவது சன்ன கலர் கலர் மனல் வைத்து, ஒரு கம்பியால் குத்தி குத்தி பாட்டிலை நிறப்புவாங்க... அவங்க நிரப்பியதும் பார்த்தா பாட்டில் வெளி பக்கம் அழகான ஓவியம் தெரியும்.... பாலவனத்தில் ஒட்டகம், ஈச்ச மரம்'னு சூப்பரா வரைவாங்க. திறமை உள்ள மக்கள். இது எல்லாத்தையும் விட முகியமான இடம் ஜோர்டனில் இருக்கும் டெட் சீ (Dead Sea). யார் போனாலும் குதிச்சு விளையாடலாம்... மூழ்க மாட்டோம். அதன் உப்பு தன்மை, டென்சிடி அப்படி. அந்த தண்ணீரை கையில் எடுத்தால் பார்க்க எண்ணை போலவே இருக்கும். ஆனால் அந்த கடலின் தண்ணீர், மண் எல்லாமே உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு பல வெளி நாட்டு மக்கள் வந்து வெய்யில் கூட பார்க்காம மெதந்துகிட்டு இருப்பாங்க... கடல்ல தான். என்னை தவிர போன எல்லாரும் (நம்ம நாட்டு மக்கள் தான்) மெதந்துகிட்டு என்னவோ பெரிய சாதனை பண்ண மாதிரி என்னை விதவிதம்ம போட்டோ எடுக்க சொல்லிகிட்டு இருந்தாங்க. அங்கையும் சிரியா மாதிரி ரோமன் காலத்து ஆம்பி தேட்டர்கள் நிறைய இருக்கு. அதை பார்க்க போகாட்டாலும் டெட் சீ'காக ஜோர்டன் போக வேணும். அந்த இடமே மிக அழகு. நம்மலே தண்ணீரில் கையை விட்டு உப்பு கல்லை எடுக்கலாம்.. அப்படி எடுத்த உப்பு கல் என்னிடம் இன்னும் இருக்கு (கொஞ்சம் உருகி போச்சு, மிச்சம் அப்படியே இன்னும் கல்லு மாதிரி இருக்கு). இதுக்கு ஏன் டெட் சீ'னு பேர் வந்தது தெரியுமா?? இந்த கடலில் உப்பும், மினரல்ஸும் மிக அதிகம்.. அதனால் செடிகளோ, மீனோ வாழ முடியாது. எந்த உயிரினமும் வாழ முடியாத காரணத்தால் இதுக்கு டெட் சீ என்று பெயர். (இதுவும் என்னவர் சொல்லி தந்த கதை தான்). இது மற்ற கடலை விட 4 மடங்கு உப்பு தன்மை அதிகம் உள்ளது. ஆனால் இது கடல் இல்ல. உடம்புக்கும் தேவையான 35 வகையான மினரல்கள் இந்த கடல் தண்ணீரில் இருக்காம். அங்கு இருக்கும் கடைகளில் அவை எல்லாம் கிடைக்கும் (எல்லாம் அழகு சாதன பொருள் தான்). இது சிரியா பற்றிய பதிவுன்ற காரணத்தால் நான் இதோட மற்ற நாடு கதைகளை முடிச்சிடுறேன்.

இதெல்லாம் போய் சுற்றி வந்த சில வாரங்களில் எங்கள் அலுவலகத்தில் இருந்து ஒரு வார இறுதியில் சுற்றுலா போக எற்பாடு செய்தார்கள். வழக்கம் போல் பேருந்து... ஒரு பெரிய குழு கிளம்பினோம்... இதே போல் ரோமன் இடம் தான் எதையோ காட்ட போறாங்கன்னு நினைச்ச எனக்கு பல ஆச்சர்யங்கள் காத்திருந்தது!!!

- நாளை தொடர்கிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அர்ச்சனா... பரவாயில்லை, உங்கள் பதிவை காணாமல் தேடினேன். வந்துட்டீங்கன்னு பார்த்ததும் சந்தோஷமாயிடுச்சு. மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா, ஒரு வழியா சிரியாவை மேப்பிலும் கண்டுபிடிச்சுட்டேனே:-) சிரியாவையும் நேரில் பார்த்தாச்சு,உங்க ஃபோட்டோவில்தான். ஃபோட்டோஸ்ரொம்ப அழகா எடுத்து இருக்கீங்க. சூப்பர்!

வாவ் !!! அருமையான கோணங்கள் !! அந்த palymra நீங்க கண்கள் விரிய பார்த்ததா படிச்ச ஞாபகம், அப்படித்தான் இருக்கு. டான்ஸ் போட்டோக்களும் அருமை. அதுவும் ஹோட்டல் ஜன்னல் வழியே ruins - ரொம்பவே பிடிச்சிருந்தது. என் வீட்டுக்காரரும் அவரோட நண்பரும் ஒரு நாள் என்கிட்டே ரொம்ப ஆர்க்யு பண்ணினாங்க - பெண்களுக்கு சரியா போட்டோ எடுக்க வராது, காமெரா கையில குடுத்தா கண்ட கோணத்துல படமெடுப்பாங்கன்னு. கண்டிப்பா இதுல பாதியாவது நீங்க எடுத்து நம்ம மானத்தை காப்பாத்தி இருப்பீங்கன்னு நம்பறேன். இந்த பகுதி கொஞ்சம் டைம் எடுத்து படிப்பேன், அதனால நேத்து பார்க்காம (லீவ், ஊர் சுத்த போயிட்டோம்) இப்போ தான் பார்த்தேன் - அதுக்குள்ளே 716 views உங்க போட்டோ ஆல்பத்துக்கு !! ம்ம் நல்ல வேலை (இந்த ரெண்டு வார்த்தையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக்கொள்ளுங்க) !!!

ஓசி டூருக்கு நன்றி வனிதா - உங்களுக்கு நிறைய வேலை கொடுத்துட்டோம்ன்னு கஷ்டமாயிருக்கு :-) அப்புறம் ஹி ஹி நானும் உங்களை தேடிப்பார்த்து ஏமாந்து போனேன். கண்டிப்பா பப்ளிக் ல போட முடியாதுதான், இருந்தாலும் ஒரு அல்ப்ப ஆசை !!

அடுத்த பகுதியும் ஆரம்பிச்சுட்டீங்களா !! நான் ஒரு நாள் வரலைன்னா என்னென்லாம் நடந்துடுச்சு !! இப்ப ஜோர்டான், லெபனான் எல்லாம் போயாச்சா, இருங்கோ நானும் வர்றேன்....

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வனிதா இந்த பதிவு ஜோர்டான்,லெபனான் பற்றியா?பெட்ரா,டெட்சீ கேள்விபடிருக்கேன்.. எங்க அண்ணன் பெட்ரா பார்த்துவிட்டு நினைவாக எனக்கு ஒரு பெட்ரா கீசெய்ன் வாங்கி வந்தாங்க.இப்ப அதை ஆசையாக எடுத்துப்பார்த்தேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஹாய் வனிதா நலமா.அசத்துரிங்க!!! சிரியா நாடு பகுதி-3,தொடங்கியதர்க்கு முதலில் என் வாழ்த்துக்கள்.
உங்களின் சிரியா பாகம் என் கற்பனையில் இருந்தை காட்ச்சியாக்கி வைத்ததிர்க்கு நன்றி.
உங்கள் எல்லா போட்டாவும் நல்லா இருக்கு.ஒவ்வொரு இடமும் அருமையா பாரம்பரியமாயிருக்கு.
உங்கள் எழுத்து நடையும் சூப்பர்ப்.மேலும் தொடருங்கள்:)

அன்புடன்,
ஜாஸ்மின்

பகுதி 3வந்தாசா, ரொம்ப interestinga இருக்கு, photos பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கு.

Archana

Archana

வனிதா டெட் சீ'ல எல்லாரும் மிதந்திட்டு இருந்தாங்க சொன்னீங்க.. தண்ணிலதானே,அட கடல் தண்ணிலதானே???நீங்களும் மிதந்தீங்களா!!!நிஜமாவே நிறைய தெரியாத விசயங்களை தெரிந்துகொள்கிறோம்:)

அடுத்த ஆச்சரியத்திற்காகவும் காத்து கொண்டிருக்கோம்.

அன்பு சகோதரி வனிதா,

இன்று தேடி படிக்க கொஞ்சம் லேட். சாரி.

அன்பு சகோதரன்.

முகத்தில் சுருக்கங்கள் விழலாம் ஆனால் இதயத்தில் கூடாது.

ஹைஷ்126

மேலும் சில பதிவுகள்