வாழைப்பழ கேக்

தேதி: April 7, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதாமா - 200 கிராம்
மில்க்மெயிட் - 1 கப்
முட்டை - 5 வெள்ளைக் கரு
சீனி - 1 கப்
வெண்ணெய் - 50 கிராம்
வாழைப்பழம் - 10
பேக்கிங்பவுடர் - 1 தேக்கரண்டி
சோடா உப்பு - 1 தேக்கரண்டி
பாதாம் பருப்பு - 100 கிராம்
வெனிலா எசன்ஸ் - 1 தேக்கரண்டி
நெய் - 100 கிராம்


 

பாதாம் பருப்பை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
முட்டையின் வெள்ளைக்கரு, வெண்ணெய், வாழைப்பழம், சீனி ஆகியவற்றை மிக்ஸியில் இட்டு 2 நிமிடம் அரைக்கவும்.
சட்டியில் 2 தேக்கரண்டி நெய்விட்டுக் காய்ந்ததும் மில்க்மெயிட்டை ஊற்றவும்.
அத்துடன் எசன்ஸ் சேர்க்கவும்.
சட்டியில் ஒட்டாதவாறு கிளறிக் கொண்டே இருக்கவும்.
கிளறும் போது மாவை சிறிது சிறிதாகப் போட்டுக் கிளறவும்.
2 நிமிடம் கழித்து வாழைப்பழக் கலவை, பேக்கிங் பவுடர், சோடா உப்பு சேர்த்து சிறிது நெய் ஊற்றிக் கிளறவும்.
நன்கு சுருண்டு வரும் போது பாதாம் பருப்பைப் போட்டுக் கிளறி, நெய் தடவிய தட்டில் ஊற்றி, தட்டி சிறிய துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அக்கா உங்களுடைய குறிப்பில் இருந்த வாழைப்பழ கேக் மிகமிகசுவையாக இருந்தது அத்துடன் இப்படிப்பட்ட சுவையான குறிப்பை தந்ததிற்கு உங்களுக்கு என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

துஷ்யந்தி, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"