சூரிய ஒளி மின்சாரம்

1)சூரிய ஒளி மின்சாரம் அதாவது சோலார் எலெக்ட்ரிசிடி பற்றி யாருக்காவது தெரியுமா?
நம் இந்தியாவில் அது எந்தளவுக்கு சாதியம்..செலவு அதிகம் என்று கேள்விப்பட்டேன் ஆனால் கொஞ்சம் காசு போனாலும் பரவாயில்லை என்று வசதி படைத்தவர்கள் சிந்தித்தால் அந்தளவுக்காவது மின்சாரம் மிச்சப்படுத்தலாமே .ஆனால் ஒரு நாளுக்காக எல்லா தெவைகளுக்குமான மின்சாரம் சூரிய ஒளியிலிருந்து கிடைக்குமா..தயவு செய்து இது பற்றி தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்
தற்பொழுது வாடெர் ஹீடர் மட்டுமே சோலார் நடைமுறையில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

2)இரண்டாம் கேள்வி - நம் ஊரில் வெயில் காலத்தில் வீட்டில் அதிகப்படியான வெப்பத்தை தவிர்க்க வீட்டை எந்த மாதிரி கட்ட வேண்டும்..எதாவது ஸ்பெஷல் மெடீரியல் கட்டுமானத்தின்போது உபயோகித்தால் வெப்பம் கம்மியாகுமா?ஏ சீ ஃபேன் இல்லாத பட்சத்தில் காற்று கிடைக்க என்ன வழி?

இன்று நம் ஊரில் காணப்படும் அதிகப்படியான மின்சார துண்டிப்பு தான் இதனை யோசிக்க வைக்கிறது..த்ரீ ஃபேஸ் லைன், இன்வேர்டர் இருந்தும் அதுவும் பலனில்லாத பட்சத்தில் என்ன செய்வது
குறிப்பாக வெளிநாட்டில் இருந்து விட்டு நாம் ஊருக்கு போகும்பொழுது இதனை பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டியதாக உள்ளது நாம் அதையெல்லாம் பழகிவிட்டாலும் நம் பிள்ளைகள் மிகவும் சிரமப்படுகிறது.வெப்பமும் கொசுக்கடியில் தாங்க முடியவில்லை..அதனால் தான் இந்த கேள்விகள்

solar electricity

தளிகா, இதைப் பற்றி நானும் நிறைய யோசிப்பேன். இங்கு(US) வசதி உள்ளவர்கள் solar panel ஐ கூரையில் வைத்து வீடு கட்டுவார்கள். அதில் சூரிய ஒளியை சேமித்து வைத்து, வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை எடுக்கலாம். நிறைய பணம் வேண்டும். இந்தியாவில் தனி வீடுகளில் அது சாத்தியமா என்று தெரியவில்லை. அரசாங்கம் அப்படி செய்பவர்களுக்கு வரிச்சலுகை என்று திட்டம் கொண்டு வந்தால் ஓரளவுக்கு வசதி படைத்தவர்களுக்கு செய்ய முடியும் என்று நம்புகின்றேன்.
vaany

ஆமாம் வானி
ஒரே முறை ஒரு பெரிய தொகை செலவு செய்வது என்றால் யோசிக்கலாம்...அதிகம் என்று தான் கேள்விபட்டேன் ஆனால் எவ்வளவு என்று தெரியாது.
எனக்கு இதனைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்..வீட்டில் அறைகளை வசதிகளை செலவில் குறைத்தாவது இதனை செய்ய முடியுமா நம்மால் என்று யோசிக்க வேண்டும்..ப்லீஸ் யாராவது உதவுங்கள்

சூரிய ஒளி உபயோகப் படுத்தினால் இந்தியாவில் மானியம் கிடைக்கும். (அது கிடைப்பதற்கு என்ன பாடு படவேண்டும் என்று தெரியும்) அதையும் தாண்டி நாம் கையில் இருந்து செலவழிக்க வேண்டிய தொகை அதிகம். அதனாலேயே ஆர்வம் இருந்தாலும் நிறைய பேர் (என்னைப் போல) அதை செய்வதில்லை. அதோடு மெயின்டனன்ஸ் செலவும் அதிகம்.

முடிந்தால் ஒரு காலனியில் அல்லது அபார்ட்மென்ட்டில் வசிக்கும் எல்லாரும் கூட்டுச் சேர்ந்து செய்யலாம். முதலீடுதான் அதிகமே தவிர, பயன்பாடு நன்றாக இருக்கும். ஆனால் இன்னும் நம் நாட்டில் இந்த தொழில்நுட்பம் அதிக வளர்ச்சி அடையவில்லை என்பதால் இதில் ஈடுபட மிகுந்த தயக்கம் இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் பஞ்சாயத்துப் பிரசிடெண்ட்டின் முயற்சியால் முழுவதும் சூரிய ஒளியில் இயங்கும் தெரு விளக்குகள் வைத்திருப்பதாகப் படித்தேன். இந்தியாவிலும் ஒரு வடமாநிலத்தில் ஒரு ஊரில் முறையாக சூரிய ஒளி உபயோகப் படுத்துகிறார்கள் என்று படித்தேன்.

அந்த கால முறைப்படி, சுண்ணாம்பு, கருப்பட்டி, இன்னும் வேறு எதெல்லாமோ சேர்த்துக் கட்டிய வீடுகளில் வெயில் காலத்திலும் குளிர்ச்சி இருக்கும். இப்போ உபயோகப்படுத்தும் சிமெண்ட், சிலவகை கெமிக்கல்கள், பெயிண்ட் எல்லாம் கூடுதல் வெப்பத்தையே தருகின்றன. நேற்று குங்குமத்தில் படித்தேன், மொட்டை மாடி தளம் போடும்போது சுண்ணாம்பு, செங்கல், ஜல்லி குறிப்பிட்ட விகிததில் சேர்த்து கான்கிரீட் போட்டு, கடுக்காய், கருப்பட்டி கரைசல் சேர்த்து 15 நாட்கள் அடிக்க வேண்டுமாம். இது வெப்பத்தடுப்புக்கு செய்யும் முறையாம். இப்பவும் இப்படித்தான் செய்கிறார்களா என்று தெரியவில்லை.

மொட்டைமாடியில் நாட்டுத் தரை ஓடுகள் போடுவதும் நல்லது. தரையில் தேங்காய் சிரட்டைகள், நார்கள் போன்றவற்றை இட‌ம்விடாமல் பரப்பி வைத்து, மாலையில் தண்ணீர் தெளித்து வந்தால் வெப்பம் கீழிறங்காது. ஆனால் இதில் பூச்சி, பொட்டு அடையும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

முடிந்தால் மொட்டைமாடித் தோட்டம் உருவாக்குங்கள்.

வேறு முறைகள் தெரிந்தால் எழுதுங்கள்.

நன்றி திருமதி ஹுசேன் இதில் இவ்வளவு கஷ்டமிருக்கா
கடந்த சில வாரங்களாக அம்மா புலம்பிக்கொண்டே இருக்கிறார் பவர் கட்டே தான் எப்ப பார்த்தாலும் என்று.
வீட்டில் சூட்டை தணிக்கும் டிப்ஸ்கள் அருமை..கருப்பட்டி என்றால் நம்ப இனிப்பா இருக்கும் கறுப்பட்டியா?முன்பெல்லாம் இரவில் மொட்டை மாடியில் சென்று ஐஸ் கட்டையோடு தண்ணீர் கலந்து பக்கெட் பக்கெட்டாக ஊற்றி விட்டு கீழே வந்து படுப்போம் கொஞ்சம் சூடு தனியும்.
சரியான வெப்பமாக இருக்கிறதாமே நம்மூரில்.சுமார் எத்தனை செலவாகௌம் ஹுசேன் இந்த சோலார் பவருக்கு..அப்படி ஒரு கூட்டாக சேர்ந்து செய்யக் கூடியதா இத்

எமது பிரதேசத்தில் அடிக்கடி மின்சாரம் தடைப்படுகிறது எனவே நான் சோலர் பூட்டலாம் என நினைக்கிறேன் நல்ல சோலர் கம்பனியின் பெயர் என்ன ? என கூறவும் நன்றி.

//நம் ஊரில் வெயில் காலத்தில் வீட்டில் அதிகப்படியான வெப்பத்தை தவிர்க்க வீட்டை எந்த மாதிரி கட்ட வேண்டும்.//தளிகா இந்த கேள்விக்கு தமிழ் புத்தாண்டு (13.4.2012) கலைஞர் நியூஸ் தொலைக்காட்சியில் 7.30 மணிக்கு கனவு இல்லம் என்ற தலைப்பில் ஒரு ஃப்ரோகிராம் நல்லா இருந்துச்சு. புதுசாவீட்டு கட்ட போறவங்களுக்கு பயனுள்ளதா இருக்கும். உங்க ஞாபகம் வந்ததது. பதிவு போட மறந்துட்டேன். நெட்ல தேடிப்பாருங்க தளிகா.

//எதாவது ஸ்பெஷல் மெடீரியல் கட்டுமானத்தின்போது உபயோகித்தால் வெப்பம் கம்மியாகுமா?// டிவியில் பார்த்து கேட்டதுதான் ஹூசைன் சொன்னமாதிரிதான் இயற்கை பொருட்களை வைத்து கட்டிய காரைக்குடி வீடுகள் மழைக்காலத்தில் சூட்டுடனும், வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும் என்று சொன்னார்கள். மார்ச், ஏப்ரல் குங்குமம் தோழி புக் பாருங்க தளிகா சோலார் எலெக்ட்ரிக்சிடி, இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் பத்தி சொல்லி இருக்காங்க.

மேலும் சில பதிவுகள்