அரட்டை அரட்டை அரட்டை - 73

ஹாய் தோழிகளே.... உங்க அரட்டையை இங்க தொடருங்க.

ஹாய்.... குழந்தைக்கு இரண்டு நாளா சளி அதிகமா இருக்கு. தொடர்ந்து தும்மல். மூக்கில் நீர். மூச்சு விட்டா சத்தம்... இரவில் தூக்கம் இல்லாம ரொம்ப கஷ்டப்பட்றா... என்ன செய்ய?? இதுவரைக்கும் அவளுக்கு இவ்வளவு சளி பிடிச்சதே இல்லை, எனக்கு பார்க்கவே கஷ்டமா இருக்கு. வழி சொல்லுங்க. டாக்டர் சொன்ன மருந்தை நேற்று இரவில் இருந்து குடுக்கறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

குழந்தைக்கு சளி அதிகமாக இருக்கா.கேட்கவே கஸ்டமாக இருக்கு.நீங்கள் சில்லுனு ஏதாவது சாப்பிட்டா குழந்தைக்கு சளி பிடிக்கும்.ஏனென்றால் தாய்ப்பால் குடுப்பதால்.அதனால் முதலில் நீங்கள் வாமாக சாப்பிடுங்கள்.தயிர்,மோர் சேர்க்கவேண்டாம்.டாக்டர் குடுத்த மருந்தை குடுங்கள்.குழந்தை வாமிட் செய்தால் சளி வெளியில் வந்துவிடும்.குளிக்கவைக்கவேண்டாம்.வாம் வாட்டரில் டவல் நனைத்து துடைத்துவிடுங்கள்.சரியாகிவிடும். தாஇப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு சீக்கிரம் சளி சரியாகிவிடும்.இது என் பாட்டியின் வைத்தியம்.
அன்புடன்
செல்வி

சவுதி செல்வி

மிக்க நன்றி செல்வி. முக்கியமா இரவிலும், விடியலிலும் ரொம்ப மூச்சு விட கஷ்டபடுறா. இங்க ஒருத்தர் இஞ்சியை சாரெடுத்து (2 சொட்டு), ஒரு துளி தேன் கலந்து குழந்தைக்கு 3 முறை குடுக்க சொன்னார்... அது சரியா?? குழந்தைக்கு அப்படி குடுக்கலாமா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இஞ்சி சாரும் தேனும் கொடுக்கலாம்.என்னுடைய அண்ணன் பையனுக்கு இப்படித்தான் அடிக்கடி சளி பிடிக்கும்.அப்பொழுது ஒருவர் தேன் குடுக்க சொன்னார்.சளி சரியாகிவிட்டாலும் தினமும் சிறிது தேன் குடுத்தால் சளிபிடிக்காது என்று கூறினார். இப்பொழுது அண்ணன் பையனுக்கு சளி அவ்வளவாக இல்லை.

சவுதி செல்வி

ரொம்ப நன்றி செல்வி.. நான் நீங்க சொன்ன உடனே ஆள் அனுப்பிட்டேன் இஞ்சி வாங்க. யாரையாது கேட்டுட்டு தான் குடுக்கனும்'னு காத்திருந்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இஞ்சி+தேன் சளிக்கு மிக நல்ல மருந்து. இஞ்சி கொடுக்கும்போது கவனமாகப் புரையேறாமல் கொடுக்க வேண்டும். ஒரு வயது கீழே உள்ள குழந்தைக்கு ஜீரண சக்தி குறைவு என்பதால் தேன் அதிகம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

வனிதா இஞ்சி சாறு சூடு என்பதால் அதிகமாக குடுத்துவிடாதீர்கள். 2சொட்டு ஓகே.உங்கள் ஐடி கிடைக்கவில்லை.என்னுடைய ஐடி ஈஸ்வரன்.செல்விஅட் யாஹு.காம்.மெயில் அனுப்புங்கோ முடிந்தால்.

சவுதி செல்வி

ஆமாம் மிசஸ் ஹுசைன்... பயமா தான் இருக்கு. அதான் அப்பாவை ஒரு சித்தா டாக்டரிடம் கேக்க சொல்லி இருக்கேன்.

செல்வி மெயில் வந்துச்சா??

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா
யாழினிக்குட்டிக்கு சளியா? சவூதிசெல்வி மிஸஸ்.ஹூசைன் சொன்னமாதிரி இஞ்சி தேன் கொடுங்க. ஆனா பாப்பா ரொம்ப குட்டியா இருக்கிறதால வயிறு தாங்குமா தெரியலை.
நீங்க தாய்ப்பால் கொடுப்பதால் நீங்க பால் கொடுக்கும்முன்பு மிளகு கஷாயம் குடிங்க.
நீங்க இஞ்சி,பூண்டு ,மிளகு நிறைய சேர்த்துக்குங்க. அதோட பலன் கண்டிப்பா தெரியும்.
வெற்றிலையில் விக்ஸ் தடவி மெழுகுவர்த்தியில் லேசா சூடு பண்ணி நெஞ்சில்வைங்க.அப்பப்ப சுடுதண்ணீர் வார்மா வெச்சு நெஞ்சில் ஒத்தடம் கொடுங்க.
நீங்களும் சுடுதண்ணீர் கொஞ்சம் சூடாவே குடிங்க. மனசுக்கு கக்ஷ்டமாய் இருக்கு.
பாப்பாவை கவனிங்க . மெதுவா வந்து பதிவுகள் போடலாம்.
கவலைப்படாதீங்க. சரியாகிடும்!

மெயில் செக் பண்ணுங்க. பாப்பா எப்படி இருக்கு.2சொட்டு இஞ்சியும் தேனும் குடுக்கும்பொழுது ஒன்றும் ஆகாது.பயப்படாதீர்கள்.அண்ணன் பையனுக்கு 8மாதம் இருக்கும்பொழுது குடுத்தார்கள்.தாய்பால் நிறைய குடுக்கவேண்டும்.சளிபிடித்திருக்கும்பொழுது வேறு எதுவும் சாப்பிடமாட்டார்கள்.கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். சீக்கிரம் சரியாகிவிடும்.

சவுதி செல்வி

மேலும் சில பதிவுகள்