அரட்டை அரட்டை அரட்டை - 73

ஹாய் தோழிகளே.... உங்க அரட்டையை இங்க தொடருங்க.

யாழினிக்குட்டிக்கு சளியா. அப்ராவுக்கு இப்போ இப்படித்தான் இருந்தது ரொம்ப கஷ்டப்பட்டேன். மூக்கு அடைச்சிட்டு மூச்சு விட கஷ்டப்படுறாளா. நாசில் ட்ராப்ஸ் விடுங்க. கொஞ்சம் ப்ரியாயிடுவா. தூங்கும் போது குரட்டை சத்தம் மாதிரி கேக்கும் கர் கர்னு... பயப்படாதீங்க.. டாக்டரிடன் காட்டி சளி மருந்து கொடுங்க.

ஒரு பிடி அளவு காய்ந்த திராட்சையை (கிஸ்மிஸ்) இரவே வெதுவெதுப்பான நீரில் ஊறபோட்டு மறுநாள் காலையில் நல்ல பிசைந்து அதை குடிக்க கொடுங்க வனி.. நல்ல கேக்கும்.

அப்புறம் இஞ்சி இதற்கு முன் யாழினிக்கு கொடுத்திருந்தா ட்ரை பண்ணுங்க. இஞ்சி கொடுத்து உங்களுக்கு பழக்கம் இருக்கா. ஏனெனில் 9 மாதக் குழந்தை ரொம்ப கவனமா கொடுக்கனும். எங்க அம்மா இவளுக்கு ஒரு வயதில் கொடுத்தாங்க நாட்டு மருந்து அப்பவே கொஞ்ச நேரம் அழாமல் ஒரு மாதிரி ஆயிட்டா. ரொம்ப பயந்துட்டோம். உங்களுக்கு பழக்கம் இருந்தா ஓக்கே. பிள்ளைய டாக்டரிடமும் ஒரு தடவை காட்டிடுங்க வனி.

ரொம்ப பிஸி நான் குழந்தைக்கு என்றதும் பதில் போட தோணிட்டு அப்புறம் வரேன்.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

வனிதா யாழினி உடம்பு முடியலையா நான் அன்னைக்கே சொன்னேன்ல அதான் பெரியவங்க சொன்னா கேட்கனும்னு சொல்றது.(எல்லாம் இந்த கசாடாவால வந்தது) இப்ப பாருங்க யாழினி தான் கஷ்டபடுறா. டாக்டர்கிட்ட போனிங்களா இல்லையா? இஞ்சி கொடுக்கறது கொஞ்சம் யோசித்து செய்யவும் குழந்தைகளுக்கு உடனே ஏத்துக்காது. யாரிடமாவது கேட்டுட்டு கொடுங்க வனி. முதல்ல டாக்டர்கிட்ட போங்க. சீக்கிரம் சரியாகிடும் கவலைபடாதீங்க.

அனைவரும் நலமா.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

வனிதா அக்கா உங்க குழந்தைக்கு சிகிரம் சரியாக நான் இறைவை வேண்டுகிறேன். ஒழுங்க மருந்து கொடுங்க, பத்ரமா பாதுகுங்க.ஓகே வா, வருத்த படாதிங்க, சீக்கிரம் சரியாகி விடும்.

சோனியா

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

இப்ப யாழினிக்கு எப்படி இருக்கு?ஒரு குழிகரண்டில தேங்காய் எண்ணெயில் கற்பூரம் போட்டு விளக்கில் சூடு செய்து மார்பு,பின்முதுகெ தடவினால் சரியாகும்னு ஜெ மாமி ஏதோ ஒரு த்ரெட்ல சொன்னதாக ஞாபகம்.செய்துபாருங்க சரியாகிடும்.

அனைவரும் எங்க போய்ட்டீங்க.அருசுவை அரட்டைபாகம் தூங்குது.யாராவது வாங்க..

வனிதா எனக்கு கை வைத்தியம் தெரியாது, உங்க கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை. மூச்சு விட சிரமப்படரான்னா டாக்டர் கிட்ட சொல்லுங்க, அவர் அதுக்கு தகுந்தா மாதிரி மருந்து கொடுப்பார்ன்னு தோனுது, மூச்சு குழாய் விரிவாகர மாதிரி....

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

வனிதா,

யாழினிக்கு இப்போ எப்படி இருக்கு? பரவாயில்லையா? கொஞ்சம் பக்கத்திலயே இருந்து பாத்துக்கோங்க. நேசல் டிராப்ஸ் போடுறது உதவும். கை வைத்தியங்கள் செய்வதோடு மறக்காமல் டாக்டர் மருந்துகளையும் கொடுங்க.

வனிதா, டாக்டரிடம் சென்றீர்களா? டாக்டரின் ஆலோசனைப் படி செய்யவும். சிரியா தொடருக்கெல்லாம் இப்ப ஒரு அவசரமுமில்லை. குழந்தையை பாத்துக்கோங்க.

சாய் கீதா, சவுதி செல்வி, தனிஷா, ஹரிகாயதிரி, சோனியா, மேனகா, மிசஸ் சேகர், மிசஸ் ஹுசைன், வின்னி, திரு ஹைஷ், அர்ச்சனா... எல்லாருக்கும் ரொம்ப நன்றி. இன்னைக்கு மூனு முறை டாக்டர் குடுத்த மருந்து குடுத்து கொஞ்சம் கன்ட்ரோல்'கு வந்திருக்கு. ஆனா இன்னுமே கர் கர்ன்னு சத்தம் இருக்கு.. அப்பப்ப தும்மலும் இருக்கு. இன்னும் ஒரு நாள் மருந்து தொடர்ந்தா சரியாகும்'னு நினைக்கிறேன். இஞ்சி குடுக்கலாம்'னு சித்தா டாக்டர் சொல்றார். பக்கத்துல இஞ்சி கிடைக்கல, நாளை தான் வாங்கி குடுக்கனும். சாய் கீதா சொன்ன மாதிரி நானும் சுக்கு, மிளகு சேர்த்துக்கறேன். சீக்கிரம் சரி ஆகனும்'னு வேண்டிக்கங்க ப்ளீஸ். நாளை வருகிறேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுக்கு மிளகு பாலில் காய்ச்சி கொடுக்கலாம்.
சாப்ரான் (குங்கும பூ )_ பாலில் போட்டு காய்ச்சி கொடுங்கள்.
கர் கர் சளி சத்ததுக்கு , பின் முதுகில் தைலம் உங்கள் கைஅயில் குழைந்த்து நல்ல மெதுவா தேய்த்து விடுங்கள்.
இரண்டு காது பக்கம், பிந்தொண்டையிலும் தேய்க்கவும்.
இஞ்சி கிடைத்தால் இஞ்சி சாறு உப்பு சர்கக்ரை கலந்து இரண்டு இரண்டு ஸ்பூன் தொடர்ந்து இரண்டு நாலைக்கு கொடுங்கள்.

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்