அரட்டை அரட்டை அரட்டை - 73

ஹாய் தோழிகளே.... உங்க அரட்டையை இங்க தொடருங்க.

ஹலோ, ஹாய், ஹாய்.

என்ன, அரட்டைப் பகுதி வர வர ரொம்ப தூங்கி வழியுது? எப்பவும் தனியா புலம்பும் கவி கூட இப்ப வரதில்லை!! வனிதா, பாத்தீங்களா, நீங்களும் நானும் இல்லாம அரட்டை ஏரியாவே களையிழந்து போயிடுச்சு.

இந்த எலி மாதிரி அங்கே இங்கே துள்ளித் திரியும் சோனியா,
வழக்கமா காலை வணக்கம் சொல்லும் பிரபா தாமு,
ரொம்ப பிஸி, நேரமில்லைன்னு சொல்லிகிட்டே பெரிய பதிவு போடும் சாய்கீதா,
ஓட்டுவதையே சுவாசமாகக் கொண்ட‌ சந்தனா,
பூனை மூளை அதிரா,
அட்வைஸ் மாமிகள் ஜலீலா, தளிகா,
படபடக்கும் தனிஷா,
கடி கவிதாயிணி சுப்ஸ்,
சவுதி ரோசாப்பூ செல்வி,
மற்றும் அக்கா, தங்கை, மாமி, அண்ணி, பாட்டிகளெல்லாம் எங்கேப்பா போனீங்க?

அரட்டையே இப்போ காணாதவர் லிஸ்ட்ல சேந்துடுச்சு போல!! யாரு கண்ணு பட்டுதோ தெரியலையே?? இல்ல எல்லாருக்கும் நாம கொஞ்ச நாள் காணாமப் போனா நம்மளை யாரு தேடுறாங்கன்னு பாக்கறதுக்காக ஒளிஞ்சிருந்து பாக்குறீங்களா, செல்வியக்கா போல?

ஹாய் மிஸஸ்.ஹூசைன்!
நல்லாயிருக்கீங்களா? அங்க க்ளைமேட் எப்பிடி இருக்கு?

பசங்களுக்கு ஸ்கூல் இன்னைக்கும் லீவ். அதான் இந்தப்பக்கமே வரமுடியலை க்ளைமேட்டும் இங்கு சரியில்லை. மேகமூட்டமாய் இருக்கு. அதனால் பசங்களை கவனமா பாத்துக்க வேண்டியதாய் இருக்கு.
கொஞ்சம் ஏமாந்தா ஃப்ரிட்ஜில் இருந்து எதையாவது எடுத்து சாப்பிட்டு சளியை வரவழைச்சுக்கிறாங்க.
பதிவு போடலையே தவிர எல்லாரும் அப்பப்ப வந்து எட்டிப்பாத்திட்டு போய்ட்டுதான் இருப்பாங்க என்னைபோல!

ஹாய் தோழிகளே எல்லோருக்கும் வணக்கம்.தயவு செய்து எனக்கு பதில் சொல்லுங்கள்.ரொம்ப ரென்சனா இருக்கேன்.
நான் 8 மாதம் கர்பம இருக்கேன் என் குழந்தயிடம் அசைவு மட்டுமே தான் இருக்கு அதுவும் குரைவாக தான் இருக்கு .எல்லோரும் குழ்ந்தை உதைக்கும் போது ரொம்ப வலி என்ரு சொல்கிரார்கல் இதுவரைக்கும் எனக்கு அப்படி ஒன்னும் இல்லை.ஆனால் ஒவ்வொரு நாளும் அசைவு இருக்கும்.உங்கள் யாருக்கும் இப்படி இருந்ததா.ஏன் இப்படி உள்ளது.நான் என்ன செய்ய வேன்டும்?இப்போது தான் என் தோழி சொன்ன தன்னுடய குழந்தை உதைகும் போது தனக்கு ரொம்ப வலி இருந்தது என்ரு.

உடன் பதில் எதிர் பார்கிரேன் தோழிகலே

அன்புடன்

சமலினி

ஹாய் சாய்கீதா,

இங்கயும் ஒரே மப்பும், மந்தாரமுமாத்தான் இருக்குது. இன்னைக்கு இப்போ திடீர்னு மணல் காத்து வீசுது. என் பசங்க ரெண்டு பேரும் ஒரு ரவுண்ட் ஆன்டிபயாட்டிக் முடிச்சுட்டுதான் இருக்காங்க. சொன்னமாதிரி கொஞ்சம் அசந்தா எதாவது செஞ்சு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாயிடுவாங்களோன்னு திக் திக்குன்னு இருக்கு. அவங்களுக்கென்ன, நாமதான் பயப்பட வேண்டியிருக்கு.

இங்கயும் சில ஸ்கூல்களுக்கு மட்டும் ஈஸ்டர் லீவு.

மாமா, அத்தை நலமா? நீங்க வச்சுகிட்டு இருக்க ஐஸ் மழையில நனைஞ்சு அவங்களுக்கு ஜலதோஷம் பிடிக்காமப் பாத்துகோங்க. ஹி ஹி ஹி.. ஜோக்.

சமலினி,

நீங்க ஏற்கனவே இதுபத்தி இந்த லிங்கில் கேட்டிருக்கிங்க; பதிலும் கொடுத்திருக்காங்க நிறைய பேர்.

http://www.arusuvai.com/tamil/forum/no/12128

குழந்தை உதைத்தா வலிக்கவெல்லாம் செய்யாது. அசைவு இருப்பதே போதும். எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது. இன்னும் சந்தேகம் இருந்தா டாக்டரிடம் போய் ஸ்கேன் செய்யுங்க.

ஹாய் mrs.hussain and தோழிகளுக்கு ரொம்ப நன்றி பதில் போட்டதற்க்கு
எல்லோருக்கும் சாரிப்பா நான் ஏற்கனவே இது பத்தி கேட்டது மறந்தே போச்சு சாரி.
என் தோழி வந்து குழப்பினதும் பயதில பழயத மறந்திட்டன்
எனக்கு 5 வருஷத்திற்க்கு அப்புறம் இது முதல் குழ்ந்தை அது தான் எதற்கும் உடனே பயம் வந்திடுது
நல்லதே நினை நல்லதே நடக்கும்
அன்புடன்
சமலினி

யாழினிக்கு உடல் நலம் இப்ப பரவாயில்லையா?குழந்தையை கவனித்து விட்டு பதிவுகள் போடுங்க.சீசன் மாறும் போது குழந்தைகளை கவனமாக பார்த்துகொள்ளனும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

இமா,

வந்துட்டீங்களா? தேடிக் களைச்சுட்டோம். எப்படி இருக்கீங்க?

மிஸஸ்.ஹூசைன்!
நீங்க சொன்னமாதிரி இங்க எல்லா பசங்களும் ஆன்ட்டி பயாடிக் ஒரு ரவுண்ட் முடிச்சிட்டுதான் இருக்காங்க.
அத்தைக்கு நீங்க சொன்னமாதிரியே சளி, இருமல்,தும்மல். காரணம் நான் வைக்கும் ஐஸ் மழை இல்லை. தினமும் க்ளைமேட் சரியில்லாத நேரத்திலும் பீச் பக்கம் போய் மணிக்கணக்காய் உட்கார்ந்திட்டு வந்தது சேரலை.
ஆனா, என் அத்தை ரொம்ப ரொம்ப உஷார், ஐஸ் போட்டு ஜூஸ் வேணுன்னா கொடுக்கலாம். ஆனா தலையில் ஐஸ் வெக்கிற வேலையெல்லாம் அவங்ககிட்ட முடியாது.
முகத்தை வெச்சே மனசில் நினைக்கிறதை சொல்ற அளவிற்கு அதிபயங்கர புத்திசாலி அவங்க. (சந்திரமுகி சரவணன் சார் மாதிரி)
நான்வேணுன்னா சரியான ஈவாய். யாராவது அன்பா ஒருவார்த்தை பேசினாலும் உருகிடுவேன்.
அதனால ஐஸ் வெக்கிறது, ஓவர் ஆக்டிங் எல்லாம் வேலைக்காகாதுன்னு அவங்க கிட்ட பழகினவங்க எல்லாருக்கும் தெரியும்.
என்னோட இயல்பான குணம் எதுன்னு அவங்களுக்கு தெரியும். அதனால் அதுவே போதும்.
அதனால் அவங்களை என்ன பண்ணி உருக வெக்கலான்னு யோசிக்கிற வேலையும் மிச்சம்னு சந்தோஷப்பட்டுக்குவேன்.
நீங்களும் பசங்களை கவனமா பாத்துக்குங்க. ஆன்ட்டி பயாடிக் அடிக்கடி கொடுக்க கூடாதுன்னு சொல்வாங்க,
அதனால்தான், அபி எதையாவது தெரியாம எடுத்து சாப்பிட்டுடமோனு பின்னாடியே சுத்திட்டு இருக்கேன்!

சாய் கீதா, மிசஸ் ஹுசைன், மிசஸ் சேகர், சீதாலக்ஷ்மி, கவி, உத்ரா (ஏன் எங்கும் காணவில்லை???), இலா (இன்னும் வரலயா??), இமா( வந்துட்டீங்களான்னு ஹுசைன் பதிவு போட்டிருக்காங்க, ஆனா ஆளை காணமே), சுகன்யா, தளிகா, சவுதி செல்வி, செந்தமிழ் செல்வி (கேட்டுட்டேன் மறக்காம.... கவனிங்க), ஸாதிகா, ஜலீலா, தனிஷா, தனு, மேனகா, சந்தோ அம்மா, உமாராஜ், அதிரா, ரேணுகா, அரசி, சோனியா, சுப்ஸ், மகேஷ்வரி, மஹா, அர்ச்சனா, லக்ஷ்மி, ஜெயா (இன்னும் 2 நாள் இருக்கா நீங்க வர...), வின்னி, சுரேஜினி, மாலி, விஜி, ஹரி காயதிரி, மற்ற தோழிகள் எல்லாரும் நலமா?? நானும் குழந்தையும் நலம். வர்றேன் சீக்கிரமே.... இப்போதைக்கு நேரம் கிடைக்க மாட்டங்குது. நாளையில் இருந்து சமையலுக்கு தனியா ஆள் வர சொல்லி இருக்கேன்.... கொஞ்சம் நேரம் கிடைக்கும்'னு நினைக்கிறேன்... பார்ப்போம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்