அன்பு தோழிகளுக்கு நன்றி, உதவுகள்,

நான் லலிதா இப்பொழுது 5 மாதம் ப்ரெக்நெஂட் , என்ன சாப்பிட வேண்டும். நான் அமெரிக்கவில் தான் இருக்கிறேன்.
ஆண் குழந்தை என்று டாக்டர் சொன்னார்கள். நான் அடுத்த மாதம் இந்திய போகிறேன். எந்த மாததில் இருந்து சேர்து இருக்கலாம் .குழந்தை கலர்ரா பிறக்க என்ன சாப்பிடவேண்டும் .எனது கணவர் கொஞ்சம் கலர் கம்மி. நான் கொஞ்சம் கலர்.என்ன செய்தால் குழந்தை கலர்ரா பிறக்கும் .என்ன ஃப்ரூட் சாப்பிட வேண்டும். ஸ்திரெட்ச்மர்க் தடுக்க என்னவளிமுறைகள்

http://www.arusuvai.com/tamil/forum/no/9789.ஹாய் லலிதா இந்த லிங்கில் பருங்கள் உங்களுக்கு உபயேகமாக இருக்கும்.நானும் 3 மாதம் ப்ரெக்நென்ட்.கர்ப்பிணி பெண்கள் பகுதியில் நிறைய குறிப்புக்கள்,இருக்கு உங்களுக்கு உபயேகமாக இருக்கும்.நம் தோழிகள் உங்கலுக்கு பதில் தருவார்கள்.

ஹாய் லலிதா வாழ்த்துக்கள்.என்னென்ன விருப்பமா இருக்கோ எல்லாம் சாப்பிடுங்கள்..எண்ணை,வறுவல்,கொழுப்பு நிறைந்த உணவுகள் கொஞ்சம் கம்மி பன்னி காய்கறி பழவகைகள் நன்றாக சாப்பிடுங்கள்..தினமும் பால் குடிங்க
சேர்ந்து இருக்கலாம் என்றால்?நான் நினைப்பது சரியென்றால் இப்பவெல்லாம் பெரிய ப்ராப்ளம் இல்லை வயிற்றில் அழுத்தம் தராமல் பார்த்துக் கொள்ளலாம் கடைசி 3 மாதங்கள் தவிர்க்கவும்...ஆனால் உங்கள் மருத்துவரிடமும் கேட்க வேண்டும்
குழந்தை கலரா பிறக்க ஆண்டவனை வேண்டுவதை தவிற வேறு வழியில்லை..குங்குமப்பூ கேரட் ஜூஸ் இதெல்லாம் குடித்தால் கலர் வருமென்பார்கள் எல்லாம் வெறும் பொய்...கணவரின் நிறம் என்று எழுதிவைத்திருந்தால் அது அமைந்தே தீரும் சில சமயம் உங்களை விட நிறமாக கூட இருக்கலாம் உங்கள் கைய்யில் எதுவும் இல்லை.
நல்ல ஆரோகியமான குழந்தையை பற்றி மட்டும் யோசியுங்கள்.ஆசைபட்டபடி நல்ல நிறமான அழகாக ஆரோகியமான குழந்தை பிறக்க வாழ்த்துக்கள்

கவிசாரா எப்பிடி சுகம் அறுசுவையில் காணவே காணோமே.
கவி நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலை என்னெண்டால் யோசித்து சந்தேகம் வரப்பண்ணி அறுசுவைல வந்து கேளுங்கோ.3மாதமா எந்த சந்தேகமும் வரேலையோ?
தளி நலமா? உங்களுக்கு எங்கேயோ பதில் குடுத்தேன் எங்கே என்று நானே மறந்துட்டன்.இப்பெல்லாம் 4மணிக்கு நித்திரை குழம்பீடும் .பிறகு அரைத்தூக்கத்தில வந்து அறுசுவையபாத்துட்டு காலைல என்ன பாத்தனான் எண்டே மறந்துடுறன்.
ஆராவது பதில் போடாட்டி கோவிக்காதேங்கோ.

பிரியா வாழ்த்துக்கள்.எனக்குத்தெரிந்து நிறையத்த்ம்பதிகள் இருவருமே கலர் குறைவா இருக்கிற ஆக்களுக்கு நல்ல சிகப்பு குழந்தை பிறந்திருக்குது.ஆனால் இந்த நாடுகளில் கலர் குறைவாகப்பிறந்தாலும் கொஞ்சம் வளர வளர கலரும் கூடி முகத்துக்கு லைட் போட்ட மாதிரி அழகா வரீனம் இங்க வளர்ற பிள்ளைகளெல்லாம்.

குணம் நிறம் என்பன தாய் தந்தை இருவரினதும் மரபணுக்களீல் இருந்தே வருகிறது என்கிறார்கள்.

வீட்ல நல்ல சிகப்புச்சிகப்பு குழந்தைகளின் படங்களை மாட்டி வச்சிருந்து அடிக்கடி பாருங்கோ.ஒரேஞ் யூஸ் குடியுங்கோ.வேற ஏதாச்சும் தெரிஞ்சா வந்து சொல்லுறன்.

சேர்ந்திருப்பது பற்றி எனக்குத்தெரிந்தது முதல் மூன்று மாதத்துக்கு நல்லதல்ல.அதன்பின் எனக்கு சொல்லவே சங்கடமா இருக்கு சொல்லீட்டு 3நாள் லீவு விடுறன் அறுசுவைக்கு.அதாவ்து வயிற்றுப்பகுதிக்கு அதிக அசைவும் அமுக்கமும் கொடுக்கும் நிலைகளை உபயோகிக்க கூடாது.

சுரேஜினி

ஹாய் சுரேஜினி நலமா?என்னால் இப்பொலுது கணினியில்அதிக நேரம் செலவிட முடிவதில்லை,என்னால் முடியும் போது நான் அறுசுவை பார்வையி தவறியதில்லை,கர்ப்பிணி பெண்கள் பகுதி கண்டிப்பாக பார்பேன்,இப்பொலுதுதான் கொஞ்சம் பரவாயில்லை,இன்னும் சப்பிடமுடியாமல்தான் உள்ளது.தினமும் ஆரஞ் ஜுஸ் மட்டும்தான் குடிக்கிறேன்,அதை குடிப்பதற்க்குல் போதும்,போதும் என்றாகிவிடும்.ஓரே குமுட்டல்தான்,சமையல் எல்லாம் என்னவர்தான் , பார்க்கவே பாவமதான் இருக்கு,நான் என்ன இன்னும் சத்தாக சப்பிடவேண்டும்,(இதுவரை அப்படி எதுவும் சப்பிடுவது இல்லை).ஒரே கவலையாக இருக்கு, சப்பிடு என்று சொன்னாலே ,குமட்டல்தான்,ஆனால் குழந்தைகாக நினைக்கையில் வருத்தம் தான்,எப்படியவது சப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன்,

ஒரு நாளைக்கு 1 மாதுளை ஜுஸ்(11am), அப்பிள்(5:30pm),இரவில் பேரீச்சப்பழம் சாப்பிடுங்கள்.

ஸ்ட்ரொச் மார்க் வாராமல் இருக்க 4 மாதத்திலிருந்து மஞ்சள் பொடியுடன் நல்லணெய் சேர்த்து மார்பு, வயிறு,அடிவயிறு, தொடை, கால் முட்டி பின் பகுதியில் தேய்த்து 1/2 மணி நேரம் கழித்து குளித்து வரவும்.

எனக்கும் இப்பொழுது ஐந்து மாதம் தான்

மேலும் சில பதிவுகள்