கடாய் காளான்

தேதி: April 10, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (5 votes)

 

காளான் - 250 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
எண்ணெய் - 2மேசைக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கறித்தூள் - ஒரு மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - அரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 நெட்டு
உப்பு - 2 தேக்கரண்டி


 

கடாய் காளான் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
காளானை, கொதிநீர் விட்டுப் பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
காளானை நான்காக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு வதக்கவும்.
அதில் 25 மி.லி தண்ணீர் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு மூடி வைத்து வேக விடவும்.
எல்லாம் சேர்ந்து நன்றாக வெந்ததும் திறந்து ஒரு முறை கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.
சுவையான கடாய் காளான் கறி ரெடி. இந்த கடாய் காளான் கறியை திருமதி. ஆசியா உமர் அவர்களின் குறிப்பினை பார்த்து இலங்கை தமிழரான <b> திருமதி. அதிரா </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியுள்ளார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனக்கம் அதிரா மெடம்
உன்கழுடய பிரசஹன்டெசன் நல்ல இருக்கு.
அசியா மெடம் ஏன் கொதிதன்னிரில் 10நிமிடம் முடி வைக்கனும் என்று சொல்லமுடியுமா? நன்றி

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

மிக்க நன்றி சுகா,
இம்முறையில், காளானை அடுப்பில் நீண்ட நேரம் சமைப்பதில்லை, அதனால் காளான் அவிவதற்காகவே சுடுநீரில் போடும்படி ஆசியா சொல்லியிருப்பார். என நினைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மிக்க மகிழ்ச்சி.இன்று மிகப்பிஸி.இப்பதான் பார்த்தேன்.ரொம்ப அழகாக செய்து அசத்திருக்கீங்க.பார்க்கவே அழகான கலரில் இருக்கு.பாராட்ட வார்த்தைகளில்லை.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.அதிரா சொல்வதும் சரிதான்.கொதிநீரில் போடுவதால எதுவும் கிருமி இருந்தாலும் அவை நீங்கிவிடும் அல்லவா?ஏனோ காளானை வெந்நீரில் அலசினால் தான் சுத்தமாக தெரிகிறது.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

நன்றி அதிரா மெடம்.நன்றி ஆசியா உமர் மெடம் நான் காழான் நிரில் நிறைய முறை கழுவென் இது சுலபமன முறை நன்றி
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

நன்றி அதிரா மெடம். நன்றி ஆசியா மெடம்
நான் காழான் நிரில் நிறைய முறை கழுவென் இது சுலபமன முறை நன்றி
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

ரொம்ப நன்றிங்க இரண்டு பேருக்கும்...இப்போதான் கடாய் காளான் செய்து டேஸ்ட் பண்ணிட்டு வரேன்..ரொம்ப நல்லா இருக்கு..நான் செய்த மாதிரியே இல்ல:-)

கொஞ்சம் தண்ணி அதிகமா சேர்த்துட்டேனு நினைக்கிறேன்(அடுத்த முறை இன்னும் சரியா செய்து பழகிக்கிறேன்)..அதனால கிரேவியாக ரொம்ப நேரம் ஆச்சு..ஆனால் டேஸ்ட் ரொம்ப நல்லா இருக்கு..

செய்து பின்னூட்டம் அனுப்பியது மகிழ்ச்சி.நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ஆஸியா கறித்தூள் என்றால் என்ன? மிளகாய்தூளா?

ஆசியா, சந்தோ மிக்க நன்றி.

மாலி கறித்தூள் என்பது, மிளகாய், மல்லி, சீரகம், மிளகு, மஞ்சள், வாசனைத் திரவியங்கள் இவ்வளவும் சேர்த்து, வறுத்து அரைத்த தூள். இலங்கையர்கள் எல்லோரும் இப்படித்தான் பெரும்பாலும் பாவிப்போம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி அதிரா, இன்று கடாய் காளான் செய்து சாப்பிட்டு உங்களுக்கு பதிவு போடமல் இருக்க முடியவில்லை. முதல் முறை ரொம்ப நன்றாக இருந்தது.....1 வருடமாக அவப்பொது பார்வையாளராக மட்டுமே இருந்தேன். இன்று இதன் சுவைக்காவே இந்த பதிவு.மிக்க மகிழ்ச்சி ....

அன்புடன்,
ரமணி-ka