பால் அப்பம்

தேதி: April 10, 2009

பரிமாறும் அளவு: 4-5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

பச்ச அரிசி - 2 கப்
மைதாமா அவித்தது - 2 கப்
மைதாமா அவிக்காதது - 2 கப்
ஈஸ்ட் - சிறிதளவு
தேங்காய் - பாதி மூடி
சீனி - 3-4 மேசைக்கரண்டி


 

அரிசியை 3 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அதை வடித்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும்.
மாவை சலித்து எடுத்து மீண்டும் ஒரு முறை அரைக்கவும்.
மாவை சலித்து எடுக்கவும். அதில் வரும் சின்ன குருணலை எடுத்து வைத்துவிட்டு பெரிய குருணலை மீண்டும் அரைக்கவும்.
மீண்டும் சலித்து சின்னக் குருணைலை எடுக்கவும். சின்னக் குருணல் 1/2 கப் இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்து குருணலைப் போட்டு புக்கை பருவத்தில் காய்ச்சி எடுக்க வேண்டும்.
நன்கு ஆறிய பின்பு அதனுடன் மைதாமா வகை இரண்டையும் ஈஸ்டையும் சேர்த்து குழைத்து 5-6 மணிநேரம் புளிக்க வைக்க வேண்டும்.
அப்பம் சுடுவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன்பு தேங்காயை துருவி பாலைப் பிழிந்து 1ம் பாலை ஒரு பாத்திரத்திலும், 2ம், 3ம் பாலை வேறு ஒரு பாத்திரத்திலும் எடுத்து வைக்கவும்.
மாக்கலவைக்கு சிறிதளவு உப்பு சேர்த்து 2, 3ம் பாலை விட்டு அப்பத்திற்கு ஏற்ற பதத்தில் கரைக்க வேண்டும்.
1ம் பாலில் சீனியைப் போட்டு கரைத்து வைக்கவும். அப்பச் சட்டியை அடுப்பில் வைத்து மாவை எடுத்து வார்த்து 1ம் பாலில் ஒரு மேசைக்கரண்டி விட்டு மூடி வேகவிடவும்.
பால் சுண்டியதும் அப்பத்தை எடுக்கவும். அப்படியே முழுவதையும் செய்யவும்.
சுடச் சுட பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அப்பம் அப்பம் அப்பம் சுரேஜினி சுட்ட அப்பம்.
வத்ஸ் அப்பம் நல்லா வந்தது.இதுல சலிக்கிறது எண்டு நீங்கள் சொல்லியிருக்கிறது அரிக்கிறதை தானே .ஆனாலும் எனக்கு இந்த 1ஆம் பால் 2ஆம் 3ஆம் எண்டெல்லாம் ஏன் பிரிக்கவேணூம் எண்டு விளங்கேல .கணக்கில வீக்கா இருக்கமோ?
நல்ல சுவையா இருந்தது மிக்க நன்றீ உங்கட குறிப்புக்கு.

சுரேஜினி

சுரேஜினி, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.மா அரிப்பதைத்தான் சலிப்பது என்று கொடுத்திருந்தேன்.//ஆனாலும் எனக்கு இந்த 1ஆம் பால் 2ஆம் 3ஆம் எண்டெல்லாம் ஏன் பிரிக்கவேணூம் எண்டு விளங்கேல .கணக்கில வீக்கா இருக்கமோ?//
அப்படி இல்லை முதலாவது அதிக தடிப்பாக இருக்கும். 2வது கொஞ்சம் தடிப்பு குறைவாக இருக்கும். 3வது இன்னும் குறைவு அதனால் தான்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"