தமிழ் புத்தாண்டு பற்றி

ஹாய், எல்லோரும் எப்படி இருக்கீங்க. என் சொந்த ஊர் மதுரை பக்கம் விருதுநகர். மதுரை பக்கம் இருந்து யாராவது இருக்கீங்களா.
அப்புறம் ஒரு கேள்வி. தமிழ் புத்தாண்டு இனி தை 1 என்று கலைஞர் சொல்லி இருக்கிரார். அது சரியா?. சித்திரை 1 தானே சரி. காலம் காலமாக அப்படி தானே கொண்டாடுகிறோம். உங்கள் கருத்துக்களை கூறவும்.

நளினி1983 இது சம்மந்தமாக நிறைய கருத்துக்களை நான் அறுசுவையில் பாத்திருக்கிறேன்.
இங்கு என்னைப்போல் பலருக்கு தமிழ் கொண்டாட்டங்களே மறந்துபோகிறது காரணம் விடுமுறை கிடையாது.அதனால் எனக்கு இதில் கருத்து தோன்றவில்லை தோன்றினால் வந்து சொல்கிறேன்.

சுரேஜினி

தமிழ் புத்தாண்டு தை 1 ஏற்று கொள்ள கூடியது இல்லை. காலம் காலமாய் நினைவில் நிற்பது சித்திரை 1 தான்
விவசாயியை பெருமை படுத்துகிறேன் என்று தமிழ் வருடபிறப்பையே மாற்றுவது என்னை பொறுத்தவரை சரி என்று தோன்ற வில்லை

ஒவ்வொன்றாக மாற்றுவது என்றால் உழைப்பாளியை பெருமை படுத்த மே 1 ஐ ஆங்கில புத்தாண்டாக மாற்றபட்டளும் படலாம்

மேலும் சில பதிவுகள்