கஜு சிக்கன்

தேதி: April 11, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
ஜிஞ்சர்கார்லிக் பேஸ்ட் - சிறிது
முந்திரி - 50 கிராம்
புதினா, மல்லி - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி


 

சிக்கனில், உப்பு, மிளகாய், ஜிஞ்சர்கார்லிக்பேஸ்ட் ஆகியவற்றை கலந்து, பொடியாக நறுக்கிய மல்லி புதினாவையும் சேர்த்து பிசறவும். 1மணி நேரம் ஊற வேண்டும்.
முந்திரியை பொடியாக நறுக்கவும். அல்லது மிக்ஸியில் 1 செகண்ட் மட்டுமே அடித்தால் கொரகொரப்பாக பொடிக்கும்.
தக்காளி, வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை எண்ணெய் பிரியும் வரை வதக்கி பிசறிய சிக்கனை சேர்த்துக்கிளறி, மிதமான தீயில் மூடி போட்டு வேகச் செய்யவும். அவ்வப்பொழுது கிளறி விடவும்.
1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து வேகச்செய்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி, கடைசியில் பொடித்த முந்திரியை கலந்து இறக்கவும்.
சிறிது எண்ணெயில் கறிவேப்பிலையை மொறுகலாக பொரித்து தூவி பரிமாறவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

இதே வெங்காயம் தக்காளி தான், நான் எப்போதும் நறுக்கி போட்டு செய்வேன்... ஆனால் அரைத்து செய்தது வித்தியாசமாக இருந்தது... அருமையான சுவை... உங்கள் வெஜ் பிரியாணிக்கு சூப்பர் காம்பினேசன் ஆக அமைந்திருந்தது...

எனக்கு ஒரு சந்தேகம் - இதன் பதம் gravy போலவும் இல்லாமல் வறுவல் போலவும் இல்லாமல் இடைப்பட்டதாக செய்தேன்... இது சரிதானே? அப்புறம், இந்த முந்திரிபருப்பு பொடித்து தூவி விட்டேன் (பொரியலுக்கு தேங்காய் பூ போடுவது போல). நான் கொஞ்சமாக கிளறி விட்டு இறக்கி விட்டேன் - முந்திரி போட்ட பின் எவ்வளவு நேரம் வேக வைக்க வேண்டும்?

இப்படிக்கு,
சந்தனா

இப்படிக்கு,
சந்தனா

பின்னூட்டத்திற்கு நன்றி.இது கிரேவிக்கும்,பொரியலுக்கும் இடைப்பட்டதாக இருக்கும்.சிக்கன் வெந்தால் போதும்.முந்திரிபருப்பு வேகத்தேவை இல்லை.
ஸாதிகா

arusuvai is a wonderful website

என்ன ஆச்சு எங்கே இருக்கீங்க?சென்னையா வேறு எங்குமா?ஒரு சவுண்ட் கூட காணோம் போன் செய்தாலும் நோ யூஸ் நலம்தானே?

உங்க இந்த ரெஸ்பி செய்தேன் செம சூப்பர் இதும் கூட சிக்கிய முட்டை செய்து வைத்து இருந்டேன் சப்பாத்திக்கு விருந்தினர் திடீர் வரவு கொடுத்ததும் ஆஹா ஓஹ்ஹோதான் தேங்ஸ்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆஹா..மர்ழியுடன் இருந்து பாராட்டா?ரொம்ப நன்றி.விருந்தினரிடம் பாராட்டை பெற்று விட்டீர்களா?இங்கு பாதியை கொடுத்து விடுங்கள்.ஒகேவா?
ஸாதிகா

arusuvai is a wonderful website