கீரை பிரெட் டோஸ்ட்

தேதி: April 12, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ப்ரெட் ஸ்லைஸ் - 4
எண்ணெய் அல்லது பட்டர்
அரைக்க:
கீரை - 1/2 கப்
பூண்டு 2 பல்
மிளகு தூள் - 1/4 ஸ்பூனுக்கு குறைவாக
உப்பு - சிறிது


 

அரைக்க வேண்டியவைகளை லேசாக தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்தவற்றை ப்ரெட்டில் இருபுறமும் தடவி எண்ணெய் அல்லது பட்டர் சிறிது சேர்த்து தோசை கல்லில் போட்டு டோஸ்ட் செய்யவும்,
அடுப்பை மிகவும் குறைவாக வைத்து வேகவைக்கவும். அப்பொழுதுதான் கருகாமல் அழகாக வரும்.


இது குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு என்றால், 1 பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பு ரேணுகா,
கீரை டோஸ்ட் பிடித்திருக்கிறது. சான்விச் டோஸ்ட்டரில் போட்டு எடுத்தேன். நன்றாக வந்தது.
இமா

‍- இமா க்றிஸ்

இமா பிள்ளைகளுக்கு சத்தானது,கொடுக்க எளிமையானது,என் பையனுக்காக முயற்சி செய்தேன்,இப்ப அவன் கிரின் பிரெட் போட்டு தா என்று கேட்கிறான்,உங்க பதிவுக்கு மிக்க நன்றி இமா

அன்புடன்
ரேணுகா

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

கீரையை கொஞ்சம் வணக்கி அரைத்தேன்;) டோஸ்ட் டேஸ்ட் புது விதமா நல்லா இருந்தது;-)

Don't Worry Be Happy.