சமைத்து அசத்தலாம் - 12, எல்லோரும் வாங்கோ பிளீஸ்!!

அன்புச் சகோதர, சகோதரிகளே....

சமைத்து அசத்தலாம் பகுதி 11, இனிதே நிறைவேறிவிட்டது. அதேபோல், இது பகுதி-12 உம் இனிதே நிறைவேற, எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இங்கே நகைச்சுவை, பாட்டு, பட்டிமன்றம், கவிதைகள், இன்னும் எத்தனையோ எத்தனையோ எல்லாம் கதைக்கிறோம், அதேபோல், இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால், இங்கே கூட்டாஞ்சோறில், அதிகம் குறிப்புக்களில் ஆரம்பித்து, அப்படியே இறங்குவரிசையில் ஒவ்வொருவரின்
குறிப்புக்களிலும், ஏதோ எம்மால் முடிந்ததை வாரா வாரம் செய்து இங்கே போடுவோம்.

பின்னூட்டங்களை குறிப்புக்களின் கீழ் அனுப்பவேண்டும், ஆனால் என்ன என்ன செய்தீர்கள் என்பதை இங்கே தெரிவிக்க வேண்டும். உடனுக்குடன் தெரிவித்துவிடுங்கள், அப்போதான் கணக்கெடுக்கும்போது தவறாமல் இருக்கும். நாள் போனால் என்ன செய்தோம் என மறந்துவிடலாம், பின்னர் லிஸ்ட் வந்ததும்தான் நினைவுவரும். எனவே தயவு செய்து, செய்யச் செய்ய இங்கே தெரிவியுங்கள்.

குறைந்தது இரு குறிப்புக்களாவது செய்ய வேண்டும், நாளை திங்கட் கிழமை துஷியந்தி(156), மாலதி அக்கா(46) இருவருடையதையும் சேர்த்துச் செய்யப்போகிறோம்.

(இதற்கான விளக்கம் தேவையெனில், தயவுசெய்து பகுதி-5
(arusuvai.com/tamil/forum/no/10530?from=90&comments_per_page=30) இன் பதிவுகளைப் பாருங்கள், முடிந்தவரை இருவரது குறிப்புக்களிலிருந்தும் தெரிவு செய்து,
செய்யுங்கள். வரும் செவ்வாய்க்கிழமை (21/04) முடிவடையும். புதன்கிழமை(22/04), செய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, அசத்தல் ராணி யார் என்பதும் தெரியவரும்.. இப்படிச் செய்வதால் எல்லோரது குறிப்பையும் செய்து பார்த்து அவர்களை ஊக்குவிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என நினைக்கிறேன்.

எல்லோரும் வாங்கோ, யார் யாரெல்லாம் இணைகிறீங்கள் என்பதை வந்து சொல்லுங்கள். இனி ஏதாவது சந்தேகங்கள் குறைபாடுகள் இருப்பின் கேளுங்கள்.. அப்பப்ப வருவேன்.

"ஒரு கை தட்டினால் சத்தம் வராது, பல கைகள் இணைந்தால், எதையும் சாதிக்கலாம்".

எம்மோடு இணைந்து குறிப்புக்கள் செய்பவர்களுக்கும், எம்மை ஊக்குவித்து வாழ்த்துபவர்களுக்கும் மிக்க நன்றி.

நேரத்திற்கு கணக்கெடுத்து, சரியான நேரத்துக்கு பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் அசத்தும் ரேணுகாவிற்கும் மிக்க நன்றி.

ஆசியா, கீதா, கவி, சந்தனா, வத்சலா, ஸாதிகாஅக்கா, செல்வி அக்கா, இந்திரா, ஜலீலாக்கா, சுகன்யா, ஜுபைதா, ESMSசெல்வி, மைதிலி, விஜி, ரேணுகா, வனிதா,சுஸ்ரீ, வின்னி, மேனகா, சீதாக்கா, சுரேஜினி, தனிஷா, அரசி, திருமதி. ஹுசைன், ஹைஷ் அண்ணன், ஜுலைஹா, ஜாஸ்மின், அதி, மாலி, அனைவருக்கும் மற்றும் மனோஅக்கா, ஜூபைதா அனைவருக்கும் மிக்க நன்றி. கலந்துகொள்ள முடியாமல் போனவர்கள், இம்முறை கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மற்றும் , முடியுமானவர்கள் ஸ்டெப் பை ஸ்டெப் ஆகவோ அல்லது முடிவிலோ படமெடுத்து அட்மினுக்கு அனுப்பி வையுங்கள். ஸ்டெப் பை ஸ்டெப்பாக படமெடுக்க நினைப்பவர்கள், முன்கூட்டியே தெரிவித்துவிடுங்கள் எந்தக் குறிப்பிற்கு எடுக்கப் போகிறீங்கள் என்று.

நாளை திங்கட்கிழமை(13/04) சமைக்கத் தொடங்குவோம், புது வருடத்தில் நிறைய சமைத்து அறுசுவையில் ஒரு புதுப் புரட்சியைக் கொண்டுவருவோம்..... எல்லோரும் வாங்கோ......

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா இன்னைக்கு நாந்தான் முதலில் வந்தேன்,முதல்ல வந்ததுக்கு ஏதாவது ஸ்பெசல் கிஃப்ட் இருக்கா?:)
துஷ்யந்தினியோட மசாலா தோசையுடன் இன்னைக்கு ஆரம்பித்திருக்கிறேன்.

ரேணுகா பையன் இப்ப எப்படி இருக்கார்.

எனது சமையல் வாரத்தில் மிகவிரைவாகவும் முதலா வதாகவும் மசாலாதோசையை செய்து பார்த்து அதன் சுவையை அறிந்து அதன் பின்னூட்டத்தை அளித்ததி ற்க்காக உங்களுக்கு வைரகிரீடத்தை அணிவித்து அதனுடன் அழகிய பலநிறங்களுடைய பெரிய ரோஜா பூக்கள் உள்ள பெரியமாலையையும் அணிவித்து உங்கள் கையிற்கு ரோஜப்பூ பொக்கேயினையும் நான் பரிசளிக்கின்றேன்,அத்துடன் எனது சமையலை செய்து பார்த்ததிற்கு எனதுநன்றியை தெரிவிக்கிறேன், தொடர்ந்தும் எனது சமையலையும் மாலதிஅக்காவின் சமையலையும் செய்து பார்த்து அவற்றை பற்றி எழுத அட்வான்ஸ் வாழ்த்துகள்

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஆஹா நான் முதலில் வரலாம் என்று இருந்தேன்,ஆனால் அறுசுவை வரலை,இப்ப தான் வருது,கவி.பையன் இப்ப நல்லா இருக்கார்,நேற்றும் இன்றும் ஸ்கூலுக்கு போகிறார்,
முதலாவதாக வந்துட்டீங்க,அதனால் அதிரா உங்களுக்கு டிரைவர் சீட் தருவார்,

அதிரா என் சமையல் மாலதி அக்கா - மசாலா சட்னி,முருங்ககீரை சாறு,துஷ்யந்தி - காய்கறி ரொட்டி

இப்ப தான் சமையல் எல்லாம் முடிந்தது,வேலை இருக்கு அப்பறம் வரேன்

என்றும் அன்புடன்
ரேணுகா
Sacrifice anything for Love,But don't sacrifice Love for anything...

(\___/)அன்புடன்
(=' . '=) ரேணுகா

துஷ்யந்தி பீட்ரூட் வறை,மோர் சேர்த்து கொள்ளவும்.ஏதோ முடிந்ததை செய்வேன்பா.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

ரேணுகா நீங்கள் எனது சமையல் வாரத்தில் மிக விரைவாகவும் இரண்டாவதாகவும் காய்கறிரொட்டியை செய்து பார்த்து அதன் சுவையை அறிந்து அதன் பின்னூட்டத்தை அளித்ததிற்க்காக உங்களுக்கு அழகிய பலநிறங்களுடைய பெரிய ரோஜா பூக்கள் உள்ள பெரிய மாலையையும் அணிவித்து உங்கள் கையிற்கு ரோஜப்பூ பொக்கேயினையும் நான் பரிசளிக்கின்றேன் அத்துடன் எனது சமையலை செய்து பார்த்ததிற்கு எனதுநன்றியை தெரிவிக்கிறேன்,தொடர்ந்தும் எனது சமையலையும் மாலதிஅக்காவின் சமையலையும் செய்து பார்த்து அவற்றை பற்றி எழுத அட்வான்ஸ் வாழ்த்துகள்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஆசியாஉமர் நீங்கள் எனது சமையல் வாரத்தில் மிக விரைவாகவும் மூன்றாவதாகவும் மோர்,பீட்ரூட்வறை அகிய இரண்டையும் செய்து பார்த்து அதன் சுவையை அறிந்து அதன் பின்னூட்டத்தை அளித்ததிற்க்காக உங்களுக்கு அழகிய மஞ்சள்,சிகப்பு ஆகிய இரண்டு நிறங்களுடைய பெரிய ரோஜா பூக்கள் உள்ள பெரிய மாலையையும் அணிவித்து உங்கள் கையிற்கு ரோஜப்பூபொக்கேயினையும் நான் பரிசளிக்கின்றேன் அத்துடன் எனது சமையலை செய்து பார்த்ததிற்கு எனதுநன்றியை தெரிவிக்கிறேன்,தொடர்ந்தும் எனது சமையலையும் மாலதிஅக்காவின் சமையலையும் செய்து பார்த்து அவற்றை பற்றி எழுத அட்வான்ஸ் வாழ்த்துகள்.

அன்புடன்
துஷ்யந்தி கலைவேந்தன்.

"முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்"

ஆகா ஆரம்பித்தாச்சா....
எல்லோரும் அட்டகாசமாக ஆரம்பித்து விட்டீங்கள். கவிஎஸ் ... இதோ றைவர் சீட் உங்களுக்குத்தான், ஆனால் அப்படியே இருக்கக்கூடாது:), சமைக்க வேண்டும் மிக்க நன்றி.

ரேணுகா, இம்முறை வேளைக்கே ஆரம்பமா?...மிக்க நன்றி, றைவர் சீற் கிடைக்கவில்லையே என கவியை முறைக்க வேண்டாம்:). எனக்குக் கொஞ்சம் பயமாக இருக்கு, இருந்தாலும் விடமாட்டேன்... நானும் விரைவில் வருகிறேன்.. ஈஸ்ரர் ஹொலிடே அடுத்தவாரம்தான் முடியும், அதனால் வீட்டில் நிற்பது, சமைப்பதும் குறைவாகவே இருக்கு.

ஆசியா மிக்க நன்றி. யார் வரத் தாமதமானாலும் நீங்கள் நேரத்திற்கு வந்துவிடுவீங்கள் என்ற நம்பிக்கை எப்பவும் உண்டு.

துஷியந்து, ஆரம்பமே எம்மோடு இணைந்தமைக்கு மிக்க நன்றி. ஆனால் ஒவ்வொருவருக்கும் உடனேயே பரிசெல்லாம் கொடுத்து இப்பவே வாழ்த்த வேண்டாம்:), கதிரையில் இருந்து, கேட்கும் சந்தேகங்களுக்கு விடையளித்தாலே போதும், முடிவில் மொத்தமாக வாழ்த்துங்கள். இப்போ ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பதிவு போட்டீங்களென்றால், இத் தலைப்பு எங்கேயோ போய்விடும் , பின்னர் எமக்கு திண்டாட்டமாகிவிடும், எனவே முடிவில் பரிசு கொடுங்கள் மொத்தமாக.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி அதிரா. நான் சற்று உடல் நலம் சரி இல்லாமல் இருக்கிறேன். சமையலுக்கு வேலைக்கு ஆள் தான்.... என்னால் முடியும்போது சுலபான எதாவது செய்து நிச்சயம் சொல்கிறேன். இன்னும் 1 (அ) 2 வாரம் போகட்டும் உடல் நலம் சற்று தேரட்டும், நிச்சயம் பழைய மாதிரி வந்துடறேன். மன்னியுங்கள் அதிரா. (கோச்சிக்க மாட்டீங்க தானே....)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அதிரா,ரேணுகா நோட் பண்ணிக்கொள்ளுங்கள்.துஷ்யந்தியின் சமையல் குடைமிளகாய் சாலட்,ஜில் ஜில் ஜஸ் அப்பிள் இளநீர்.பின்னூட்டமும் அனுப்பி விட்டேன்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்