சாஃப்ட் அண்ட் க்ரிஸ்பி கிட்ஸ் லாலி பாப்

தேதி: April 13, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.6 (8 votes)

 

லெக் பீஸ் - 900 கிராம் (ஒரு பாக்கெட்)
வினிக‌ர் - ஒரு மேசைக்க‌ர‌ண்டி
காஷ்மீரி சில்லி ப‌வுட‌ர் - ஒரு மேசைக்க‌ர‌ண்டி
ரெட் க‌ல‌ர் பொடி - கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு தூள் - 1 1/2 தேக்க‌ர‌ண்டி
மிள‌கு தூள் -‍ ஒரு தேக்க‌ர‌ண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்க‌ர‌ண்டி
எலுமிச்சை - ஒன்று (சிறிய‌து)
த‌யிர் ‍- ஒரு மேசைக்க‌ர‌ண்டி
முட்டை - ஒன்று
மைதா - ஒரு குழிக்க‌ரண்டி
எண்ணெய் - பொரிக்க‌ தேவையான‌ அளவு
அல‌ங்க‌ரிக்க‌:
***************
கேர‌ட்
வெள்ள‌ரி
த‌க்காளி
எலுமிச்சை
கொத்தம‌ல்லி த‌ழை


 

சிக்க‌ன் லெக் பீஸை தோலெடுத்து வினிக‌ர் சேர்த்து ஊற‌ வைத்து 5, 6 முறை நன்கு க‌ழுவிக் கொள்ளவும். லெக் பீஸ் அனைத்தையும் குறுக்காக‌ ஆழ‌மாக‌ கீறி விட்டு த‌ண்ணீரை வ‌டித்து வைக்க‌வும்.
சிக்கன் லாலி பாப் செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த லெக் பீஸை போட்டு அதனுடன் முட்டை, மைதா மாவு தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சேர்க்கவும்.
எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.
சிக்கன் துண்டுகள் ஊறியதும் அதனுடன் முட்டை மற்றும் மைதா மாவை சேர்த்து பிசையவும்.
முட்டை, மைதா மாவு சேர்த்த சிக்கன் கலவையை ப்ரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து ஊற விடவும்.
சிக்கன் ஊறியதும் எடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நான்கு நான்கு துண்டுகளாக போட்டு பொரிக்கவும்.
அடுப்பின் தீயின் அளவை மிதமாக வைத்து மூடி போட்டு வேக விடவும்.
சிக்கன் வெந்ததும் தீயின் அளவை அதிகப்படுத்தி நன்கு பொரிந்ததும் எடுத்து எண்ணெயை வடித்து வைக்கவும்.
சுவையான‌ சாஃப்ட் அன்ட் கிரிஸ்பி கிட்ஸ் லாலி பாப் ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

ஜலீலா அவர்கள் செய்யும் ப‌ல‌ வகையான‌ சிக்க‌ன் ப்ரையில் இதுவும் ஒன்று. சில‌ வ‌கை சிக்க‌ன் பொரிக்கும் போது எண்ணெயில் ம‌சாலா அனைத்தும் ச‌ட்டியின் அடியில் போய் ஒட்டி கொள்ளும். இதைப் போல் பொரிப்ப‌தால் எண்ணெய் க்ளிய‌ராக‌ இருக்கும். குழ‌ந்தைக‌ளுக்கு சிக்க‌ன் தான் ரொம்ப‌ பிடிக்கும். இதில் முட்டை மைதா சேர்த்து ஊற‌ வைப்ப‌தால் உள்ளே ந‌ல்ல‌ சாஃப்டாக‌வும் வெளியில் க்ரிஸ்பியாக‌வும் இருக்கும். எல்லா குழந்தைகளுக்கும் பிடித்தது லாலி பாப்பும், சிக்க‌ன் விங்க்ஸும் தான். அதனால் ந‌ல்ல அல‌ங்க‌ரித்து கொடுக்க‌வும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

எத்தனை பேர் இதைக் கண்டு நாவுற போறாங்களோ...பேசாம எல்லாருக்கும் ஒவ்வொரு பார்சல் போட்டுடுங்க..சூப்பர் குறிப்பு ஜலீலக்கா

ஹாய் ஜலீலா
பார்க்கவே சூப்பரா இருக்கு. நாளை செய்து பார்த்திட்றேன். எனக்குகூட சில சமயங்களில் வாணலியில் அடியில் போய் ஒட்டிக்கொள்ளும் மசாலா.
என்ன பண்றதுன்னு கேட்கணும்னு யோசிச்சிட்டே இருந்தேன்.
என் பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இந்த ஃப்ரை!
நன்றி!

எத்தனையோ சிக்கன் பிரை தெரிந்திருந்தாலும் இந்த முறையில் தான் முதல் முதல் (1993) யில் நான் பொரித்த்து.

சிறிது கிரெம்ஸ் பவுடரும் சேர்த்து கொள்ளலாம் இன்னும் கிரிஸ்பியாக இருக்கும்.

தளிகா இது செய்வது ரொம்ப ஈசி.
வீட்டில் சிக்கன் பிரை என்றால் உடனே வாவ் லாலி பாப்பா லாலிபாப்பா?
என்பார்கள். இல்லை என்றால் புச்சு புச்சு புச்சு தான்

ஜலீலா

Jaleelakamal

ஹாய் சாய் கீதா இந்த முறையில் பொரித்தால் அடியில் ஒட்ட சான்ஸே இல்லை அபப்டியே தெளிந்து நிற்கும், மறுநாள் அப்பளம், மீன் குழம்பு எல்லாம் அதில் தான் வைத்தேன்.
ஜலீலா

Jaleelakamal

indira

indira

ஜலீலாக்கா, லொலி பொப்

இதுதான் லொலிபொப்போ? மிக அழகாக செய்திருக்கிறீங்கள்?. அட்மின் சொன்னார் ஷாதிகா அக்கா வீட்டில் லொலி பொப் படம் என்று போட்டார், நான் அதைப் பற்றி யோசித்தேன் என்னவாக இருக்குமென்று. ஒவ்வொரு விதத்துக்கும் ஒவ்வொரு பெயர் சொல்கிறார்கள். நான் எப்படிப் பொரித்தாலும் அது சிக்கின் பொரியல் என்றே சொல்லிக்கொள்வேன். அதுசரி ஏன், கொஞ்சம் எண்ணெயில் பொரிக்க வேண்டும். நிறைய எண்ணெய் விட்டுப் பொரிக்கலாம்தானே? பாத்திரத்திலும் ஒட்டும் என்ற பிரச்சனையும் வராதே.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நிறைய எண்ணை வேஸ்ட் ஆகும், சிக்கன் பொரித்த எண்ணை இரண்டு முன்று நாட்களுக்கு மேல் வைக்க்க கூடாது.இது கூட கொஞ்சம் கிரம்ஸ் சேர்த்தால் இன்னும் கிரிஸ்பி கிடைக்கும்.

ஜலீலா

Jaleelakamal

ஜலீலா சூப்பர்.நிச்சயம் இந்த காம்பினேஷனில் செய்து பார்க்கிறேன்.மிளகுதூள் சேர்த்து இதுவரை பொரித்ததில்லை.பார்க்கவே அழகோ அழகு.ஹேட்ஸ் ஆஃப்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வாவ்..ஜலீலா..சிக்கன் ரெசிப்பியாக போட்டு அசத்துகின்றீர்கள்..பிரஷண்டேஷனும் அருமை.உடனே செய்து சாப்பிட வேண்டும் போல் இருக்கின்றது.தனிஷா,உஷார். :-)
ஸாதிகா

arusuvai is a wonderful website

ஜலீலக்கா சிலர் சிக்கன் காலை லாலிபாப் என்றும் சிக்கன் விங்சை லாலிபாப் என்றும் சொல்வார்கள்..உண்மையில் சிக்கன் விங்சை ஒரு ப்ரத்யேகமாக லாலிபாப் வடிவத்தில் சுத்தம் செய்து வறுப்பது தன் சிக்கன் லாலிபாப்.இது சும்மா ஒரு தகவலுக்கு மத்தபடி நமக்கு இதான் லாலிபாப்

http://www.youtube.com/watch?v=fAwUCvm5egg

இதனை நாம் சிக்கன் ட்ரம்ஸ்டிக் என்று தான் சொல்வோம்.சிக்கன் விங்ஸ் உள்ள சதைப்பகுதியை சைடில் ஒரு குச்சி போன்ற எலும்பில் இணைத்து கட் செய்து இருக்கும்.(லாலி பாப்)அராப் உடுப்பி போனால் லாலி பாப் சாப்பிடாமல் வருவதில்லை.16 திர்கம் ஒரு ப்லேட்.தனிஷா சாப்பிட்டு பாருங்க,யம்மி.ஜலிலா நானும் சொல்ல நினைத்தேன்.தகவலுக்கு தான் பகிர்ந்து கொண்டேன்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

டியர் ஆசியா, ஸாதிகா அக்கா உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

ஆசியா மிளகு தூள் சேர்த்தால் நல்ல இருக்கும்.எப்ப டைம் கிடைக்குதோ அப்ப செய்து பாருங்கள்.

ஸாதிகா அக்கா உங்கள் செல்ல பேரன் அமீருக்கு செய்து கொடுங்கள்.

சிக்கன் வாங்கினால் முதலில் அதிலுல்ல இரண்டு பெரிய லாலி பாப்(ட்ரம்ஸ் ஸ்டிக்), மற்றும் விங்ஸ் சை தனியாக எடுத்து விடுவேன்,
மீதியை சிகக்ன் பிரியாணி,குழம்பு, மிளகு சிக்கன் போன்றவைக்கு.

ஆனால் பெரிய லாலி பாப்பிற்கு தான் மவுஸ் அதிகம்.

தளிகா இங்கு உள்ள பெரிய ரெஸ்டாரண்டுகளில், ஆச்சி செட்டி நாடில் எல்லாம் பெரிய லாலி பாப் தான் பேமஸ், ஆனால் என்ன தான் ஹோட்டலில் நலல் இருந்தாலும் எனக்கு நான் செய்வது தான் பிடிக்கும்.

ஜலீலா

Jaleelakamal

லெமன் லாலி பாப் பை நீங்க செய்யலையேனு பார்த்தேன், அப்பாடா செஞ்சுடீங்க.இந்த வாரம் செய்து பார்க்கிறேன்

பிரபாபிரபாகரன்

டியர் பிரபா லெமென் லாலி பாப் ரெஸிபி இன்னும் கொடுக்கவே இல்லையே, அது சிக்கன் கழுவு வதும் லெமென் பிழிந்து கழுவனும்.
ஜலீலா

Jaleelakamal

சூப்பரா இருக்கு. நானும் இந்த முறையில்தான் செய்வேன். ஆனால் வினிகர் சேர்த்ததில்லை. இந்த சேர்த்து செய்து பார்க்கிறேன். உங்க ப்ரெசண்டேஷன் நல்லாயிருக்கு.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

மைதா என்றால் கோதுமையா?

Maida - Plain flour
koothumai - atta

Jaleelakamal

மிக்க நன்றிங்க ஜலிலா அக்கா..நான் திருமணதிற்குப் பிறகுதான் சமைக்க கற்று கொண்டிருக்கிறேன்.ஆதலால் எனக்கு இந்த அருசுவை அங்கம் எனக்கு பேருதவியாய் இருக்கிறது..உங்கள் சமையல் குறிப்புகளும் மிகவும் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது...

வாங்க பிரிமிதா புது வரவா?
அன்று அவசரத்தில் பதிவு போட்டதால் பெயரை பார்க்கல.
வாங்க அருசுவைக்கு வந்துட்டீங்கல, இன்னும் ஆறே மாதத்தில் நீங்களும் ஒரு கிரேட் குக்காகிவிடுவீர்கள்.

வாரா வாரம் சமைத்து அசத்தலாம் நடக்குது அதிலும் கலந்து கொள்ளுங்கள்.
என் குறிப்புகல் எஆன் தினம் செய்வது அப்படியே கொடுத்து உள்ளேன்.
பார்த்து செய்யுஙக்ள் எல்லாம் ஈசியாக இருக்கும், ஏதும் சந்தேகம் இருந்தாலும் அந்த குறிப்பின் கீழ் கேளுங்கள், வந்து உடனே பதில் போடுவேன்.

Jaleelakamal

டியர் தனிஷா நீங்களும் இப்படி தான் செய்வீர்களா?
வினிகர் சேர்த்து கழுவுவது சிக்கன் ஸ்மெல் வராமல் இருக்க.

Jaleelakamal

மிக்க நன்றிங்க அக்கா...நான் இந்த அங்கத்திற்கு புது வரவுதான்.. கண்டிப்பாக கலந்து கொள்கிறேன் அக்கா..
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்டு தெரிந்து கொள்கிறேன். உடனே எனக்கு பதில் அனுப்பினதுற்கு மிக்க நன்றிங்க அக்கா..மகிழ்ச்சியும் கூட..

அன்புடன்,
பிரேமித்தா..

ஹாய் ஜலீலா
போன வாரமே இந்த குறிப்பினை செய்தேன். ரொம்ப சூப்பரா இருந்தது. உடனே சொல்ல முடியலியே என்று வருத்தமாவே இருந்தது. மசாலா எதுவும் எண்ணெயில் கலக்காமல் ரொம்ப நல்லா வந்தது. என் குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிட்டாங்க ரொம்ப நன்றிப்பா!

டியர் சாய் கீதா லாலிபாப் செய்து பார்த்து மறக்காமல் பின்னூட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.குழந்தைகளுக்கு பிடித்து இருந்தது ரொமப் சந்தோஷம்.

அருசுவை சரியா ஓப்பன் ஆகல அதான் என்னால் உடனே பதிவு போடமுடியல.
ஜலீலா

Jaleelakamal

வியாழக்கிழமை இந்த லாலிபப் செய்தேன்.என் பையனுக்கும்,பொண்ணுக்கும் ரொம்ப பிடிச்சுருச்சு.இனிமேல் இதுபோல்தான் செய்யவேண்டும் என்று ஆர்டர்.உங்கள் kfc சிக்கன் மீது கண் அடுத்தமுறை செய்யவேண்டும்.நன்றி
சவுதி செல்வி

சவுதி செல்வி

சவுதி செல்வி நலமா?
லாலிபாப் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
பிள்ளைகளுக்கு பிடித்தது ரொம்ப சந்தோஷம்.
இந்த குறிப்பே குழந்தைகளுக்காகதான் கொடுத்தேன்.

Jaleelakamal

நான் நலம். நீங்கள் நலமா?பையன் காலேஜ் படிக்க ஊருக்கு போயிருக்கிறார் என்று நீங்கள் கூறியதை படித்தேன்.நல்ல காலேஜ்,கோர்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள்.உங்களுடைய நிறைய சிக்கன் குறிப்புகள் பார்த்துவைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்பொழுது செய்து சொல்கிறேன்.
சவுதி செல்வி

சவுதி செல்வி

் சூபர் கிரிஸ்பி லாலிபப் ஜலீலா அக்கா. நேத்துதான் செய்தேன். ரொம்ப டேஸ்டா வந்தது. பிரைட் ரைசுக்கு செய்தேன். சூப்பரோ சூப்பர்.

அன்புடன் ரிகா.

சவுதி செல்வி நலமா?

அன்பு ரிகா கிரிஸ்பி லாலி பாப் பின்னூட்டத்திற்கு நன்றி

இது என்னுடைய நானே செய்து பார்த்த குறிப்பு நல்ல இல்லாமல் இருக்குமா?

Jaleelakamal

hi mam im new to arusuvai.its very useful to new joinees.i like chicken recipies.i will try this week nd tel u mam