அட்மின் கவனத்திற்கு: சந்தேகங்கள்

அறுசுவை பார்வையிடும்போது சில பிரச்னைகள் வருகின்றன. அவற்றை நாமே தீர்க்கலாமா அல்லது அட்மின் தான் தலையிட்டுச் சரி செய்ய வேண்டுமா என்று சந்தேகம் எழும்.

அத்தகைய சந்தேகங்களை இங்கே எழுதினால் அனுபவமுள்ளவர்கள் அதை எப்படித் தீர்ப்பது என்று கூறலாம். அல்லது அட்மின் இங்கே பதில் கூறலாம்.

அட்மினுக்கு நேரே மெயில் அனுப்புவதைவிட இது சுலபத் தீர்வு மட்டுமல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியான பிரச்னைக்கு தனித்தனியே மீண்டும் மீண்டும் பதில் எழுதி அட்மின் சிரமப்பட வேண்டாமே!!

இந்தப் பகுதியை வலைத்தளங்களில் வரும் FAQ (Frequently Asked Questions) போல எல்லாரும் உபயோகிக்கலாம்!!

திரு.அட்மின், இதில் தவறில்லைதானே? இதைக் குறை கூறும் பகுதியாக நினைக்காமல், ஆலோசனை வழங்கும்/ பெறும் பகுதியாகக் கருதலாம்.

நேற்று இரவிலிருந்து போராடி இப்போ மாலை 4 மணிக்குதான் அறுசுவை தரிசனம் கிடைத்தது. மீண்டும் பிரச்னை செய்கிறது. பலரும் காணாமல் போவதன் மர்மம் இப்போதான் தெரிகிறது.

என் சந்தேகங்கள்:

1. இப்பொழுதெல்லாம் தினமும் அறுசுவை பார்வையிட வரும்பொழுது "ஃபெடோரா" பக்கம் அல்லது "Forbidden" என்ற பக்கம்தான் வருகிறது. இதற்கு சிலர் ‍bulk download செய்வதுதான் காரணம், ஒரு சிலரின் செய்கையால் பல‌ருக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் சொல்லியிருந்தீர்கள். இதைத் தடுத்தோ அல்லது வேறு ஏதாவது செய்தோ பலரின் ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியாதா?

2. த‌ற்போது ஒரு பக்கத்திற்கு 10 பதிவுகள் மட்டுமே வருகின்றன. முன்பு இருந்தது போல 30 பதிவுகள் வந்தால் நல்லது.

காரணம், 50 கருத்துக்கள் இருக்கும் இடத்தில் முன்பு 2 பக்கங்கள்தான் உண்டு. இப்போ 5 பக்கங்கள்!! முழுவதும் பார்ப்பதற்கு 5 முறை பக்கங்கள் லோட் ஆக வேண்டும். ஒவ்வொரு முறை லோட் ஆவதற்கும் ஆகும் நேரமும் முன்னைவிட குறைந்தமாதிரி தெரியவில்லை. அதோடு பத்து பத்தாகப் பார்ப்பதற்குள் ஒன்றிரண்டு முறையாவது நெட்வொர்க் எரர் அல்லது வேறு தடங்கல் வந்துவிடுகிறது.

3. இப்போ சமைத்து அசத்தலாம் நடந்து கொண்டிருப்பதால் இத்தகைய பிரச்னைகள் பலரின் ஆர்வத்தை குறைக்கும்.

4. மேலும் "தேடுக" பகுதியிலும் பலவகையில் தேடும் வசதியை மெருகேற்றினால் என்னைப் போலுள்ளவர்களுக்கு வசதியாக இருக்கும். அதைப் பற்றி இங்கே பேசலாமா என்று தெரியவில்லை.

yes,mrs hussain,im agree with u, i have the same thought.

instead of goingthrough all the previous pages why didnt they give direct link to the desired page.
so its easy to read the link (time saving)

யாருக்குமே எனக்கு வந்த பிரச்னைகள்/ சந்தேகங்கள் வரவில்லையா?

என் கேள்விகளுக்கு என்ன பதில்? யாருக்குமே தெரியலையா?

மிஸஸ்.ஹூசைன்!
எனக்கு முன்பெல்லாம் பேஜ் ஓப்பன் ஆகாது. அல்லது ரொம்ப டைம் எடுக்கும்.
ஆனா நீங்க சொல்ற மாதிரி எந்த பிரசனையும் வருவதில்லை. எப்பவாவது டூ மெனி கனெக்ஷன்ஸ் என்று வரும்.
மற்றபடி இப்ப கொஞ்ச நாளா ஓரளவிற்கு சீக்கிரமே ஓப்பன் ஆகுது.
அதனால் இதுவிஷயமா கருத்து சொல்ல எனக்கு தெரியலை.
வீட்டு வேலை காரணமாகதான் என்னால் அதிகம் அறுசுவையில் வந்து பதிவுகள் போடமுடியலை!

சாய்கீதா, பதிலுக்கு ரொம்ப நன்றி.

எல்லாரும் பிரச்னைன்னு சொல்லிட்டிருந்தப்போ எனக்கு ஒரு பிரச்னையும் இல்லாம இருந்துது. ஆனா, இப்போ 2,3 வாரமா ஒரே எரர் மெஸேஜ்தான் வருது. அதான் கேட்டேன்.

சகோதரி இதை என் கருத்தாக எடுத்துக்கொள்ளவும்.
//நேற்று இரவிலிருந்து போராடி இப்போ மாலை 4 மணிக்குதான் அறுசுவை தரிசனம் கிடைத்தது.//
3வருடங்களாக எனக்கு இப்படியொரு பிரச்சனை வந்ததில்லை.அப்படி ஏதாவது தடங்கல் [பொதுவானது]என்றால்
பாபு அண்ணா அதை ஏற்கனவே தெரிவித்துவிடுவார்.இது என் அனுபவத்திலிருந்து...

//பலரும் காணாமல் போவதன் மர்மம் இப்போதான் தெரிகிறது.//நான் நினைக்கிறேன் இங்கு காணாமல் போனவர்கள்
தங்கள் நேரப்பிரச்சனை சொந்த தேவை போன்றவற்றால்தான் போகிறார்கள் என்று.நான் கூட அப்படித்தான் வேலை தொடங்கினால்
நினைத்தாலும் என்னால் வரமுடிவதில்லை.

//இதற்கு சிலர் ‍bulk download செய்வதுதான் காரணம்,
ஒரு சிலரின் செய்கையால் பல‌ருக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் சொல்லியிருந்தீர்கள்.
இதைத் தடுத்தோ அல்லது வேறு ஏதாவது செய்தோ பலரின் ஏமாற்றத்தைத் தவிர்க்க முடியாதா?//இது பர்றி ஏற்கனவே பாபு அண்ணா மன்றத்தில் சொல்லி
இப்படி செய்பவர்களை தான் நீக்குவேன் என்றும் சொல்லியதாக ஞாபகம்.

பக்கத்துக்கு 10பதிவு வருவது கொ ஞ்சம் சிரமமாகத்தான் இருக்கிறது.
புதுப்பித்துக்கொண்டிருப்பதாக ஏற்கனவே அண்ணா சொல்லியிருப்பதால் ஏதோ வேலை நடந்துகொண்டிருக்கிறதோ தெரியவில்லை.
அடுத்து தேடுக பகுதியில் தமிழில் எழுதித்தேடும்போது அழகாக அது சம்மந்தப்பட்ட எல்லாம் வருகிறதே.
கூகிள்,யாகூ போலத்தானே இருக்கிறது.

மர்றவர்களுக்கும் இதுபோல் பிரச்சனை இருக்கிறதா என்றுதானே கேட்டிருந்தீர்கள் .நான் என் கருத்தை சொல்லியிருக்கிறேன் .தவறாயின் மன்னிக்கவும்.

சுரேஜினி

சுரேஜினி, உங்கள் அனுபவங்களை விளக்கியதற்கு நன்றி.

நான் அறுசுவை பார்க்கத் தொடங்கிய ஆரம்பத்தில் எனக்கு எப்பொழுதாவதுதான் "‍Too many connections" " Unable to load page" etc.. வரும். அதுவும் மிக அரிதாகவே. ஆனால் இப்போ 2,3 வார‌ங்களாக பக்கம் திறப்பதே அரிதாக இருக்கிறது. சோனியா, ஜெயலக்ஷ்மி, ரேணுகா, இன்னும் சிலர் அறுசுவை தளம் திறக்கவில்லை என்று சில இடங்களில் குறிப்பிட்டிருந்தார்களே.

அறுசுவை தள‌த்தினை மேம்படுத்தும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதை அறிவேன்.

நிச்சயம் தேடுக பகுதியும் மேம்படுத்தப் படும் என்று நம்புகிறேன். நானும் தமிழில்தான் எழுதித் தேடுகிறேன். அதைக் குறித்து விளக்க ஆரம்பித்தால் மிகப் பெரியப் பதிவாக எழுத வேண்டும்.

அறுசுவையில் ஆக்டிவாகக் கலந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தினாலேயே இதைத் தொடங்கினேன்.

கடந்த சில நாட்களாக அறுசுவை இணையதளம் முகவரியில் APACHE என்கிற இணையதளம் வருகிறது. எதனால் என்று தெரியுமா?

Save the Energy for the future generation

Save the Energy for the future generation

எனக்கும் இதே பிரச்சனை வருது ஓப்பன் செய்து பதில் அனுப்பும் போது சிலது தான் அனுப்ப முடியுது, என் குறிப்புகலுக்கு கீழ் பேசுவதில் எந்த சிரமும் இல்லை,
அதே போல் சமைத்து அசத்தாலமிலின் கீழும் பிரச்சனை இல்லை.
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்