தேதி: April 15, 2009
பரிமாறும் அளவு:
ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்
சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்
மொத்த நேரம்: 40 நிமிடங்கள்
பச்சரிசி – ஒரு கப்
வெல்லம் – ஒரு கப்
கடலை பருப்பு – கால் கப்
தேங்காய் – அரை மூடி
ஏலக்காய் – 3
நெய் – 2 தேக்கரண்டி
வெல்லத்தினை பொடித்து வைத்துக் கொள்ளவும். தேங்காயினை துருவிக் கொள்ளவும். ஏலக்காயினை தட்டி வைக்கவும்.

கடலை பருப்பினை கால் மணி நேரம் ஊற வைத்து பின் வேக வைத்து கொள்ளவும்.

அரிசியினை 2 மணி நேரம் ஊற வைத்து பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்றாக மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு நாண் ஸ்டிக் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள அரிசி மாவினை போட்டு நன்றாக கிளறி வேக விடவும். மிகவும் கெட்டியாக தேவையில்லை என்றால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

அரிசிமாவு முக்கால் பதம் வெந்ததும் அதில் பொடித்து வைத்துள்ள வெல்லம் மற்றும் வேக வைத்துள்ள கடலை பருப்பினை சேர்த்து கிளறவும்.

வெல்லம் நன்றாக கரைந்து அரிசி மாவுடன் சேரும் வரை இடையிடையே கிளறி விடவும்.

வெல்லம் கரைந்து வாசனை போன பிறகு தேங்காய் துருவல் மற்றும் ஏலக்காயினை சேர்க்கவும்.

இதனை நன்றாக கிளறி விட்டு 3 நிமிடம் வேக விடவும்.

ஒரு தட்டில் மீதம் உள்ள ஒரு தேக்கரண்டி நெய்யினை தடவி அதில் செய்து வைத்துள்ள அல்வாவினை ஊற்றி ஆற விடவும்.

சிறிது நேரம் ஆறிய பிறகு வேண்டிய வடிவத்தில் நறுக்கி பரிமாறவும். சுவையான அரிசி அல்வா ரெடி. இந்த குறிப்பினை <b> திருமதி. கீதா ஆச்சல் </b> அவர்கள் அறுசுவை நேயர்களுக்காக வழங்கியுள்ளார். இவரது பெரும்பாலான குறிப்புகள் குழந்தைகளுக்கான, மிக எளிதில் தயாரிக்கக்கூடிய உணவுக்குறிப்புகளாக இருக்கும்.

Comments
அல்வா...
கீதாச்சல்,வித்தியாசமான அல்வாவாகவும் பார்க்க அழகாகவும் இருக்கிறது.
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்
அதிரா
அதிரா,
மிகவும் நன்றி .
எங்கள் வீட்டில் அம்மா இதனை அடிக்கடி செய்வார்கள். பலர் இதனை செய்வது மிகவும் கடினம் என்று எண்ணி செய்ய மாட்டார்கள்.
ஆனால் உண்மையில் இது செய்வது மிகவும் சுலபம்.
கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
அன்புடன்,
கீதா ஆச்சல்