சேப்பங்கிழங்கு காய்

தேதி: April 15, 2009

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சேப்பங்கிழங்கு -- 1/4 கிலோ (1/2 பதமாக வேகவைத்து தோலுரிக்கவும்)
எண்ணைய் -- பொரிக்க தேவையான அளவு
தேங்காய் -- 2 பத்தை
இஞ்சி -- 3 அங்குலம் அளவு
பூண்டு -- 5 என்னம்
சோம்பு -- 1/2 டீஸ்பூன்
கசகசா -- 3/4 டீஸ்பூன்


 

வேகவைத்த சேப்பங்கிழங்கின் நடுவில் கீறிக்கொள்ளவும்.
பின் அதை காய வைத்த எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

தேங்காயையும் இஞ்சியையும் பாதியாக அரைக்கவும்.
பின் சோம்பு, கசகசாவையும் சேர்த்து நைசாக இல்லாமல் நொரநொரவென தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
பின் வாணலியில் 5 ஸ்பூன் எண்ணைய் ஊற்றி கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை போடவும்.
பின் அரைத்தவைகளை போட்டு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
எண்ணைய் மேலே வரும் வரை கொதிக்கவிடவும்.
பின் பொரித்த சேப்பங்கிழங்கை போட்டு கலவையில் பிரட்டி 2 நிமிடம் வதக்கி இறக்கி பறிமாறவும்.
ரெடி.


மேலும் சில குறிப்புகள்