பாசல் ரொட்டி

தேதி: April 15, 2009

பரிமாறும் அளவு: 6 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதாமா - 2 கப்
மாஜரீன் அல்லது பட்டர் - 2 தேக்கரண்டி
பால் - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு :
காரட் பெரியது - 1
உருளைக்கிழங்கு - 2
கோவா, லீக்ஸ் - 1/2 கப் (வெட்டியது)
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். காரட்டை துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.
பின்பு காரட், கோவா, லீக்ஸ், மிளகாயைச் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.
மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, உப்பு, மிளகாயைத்தூளையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாமல் ட்ரையாக இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, மாஜரீன், பால், உப்பு சேர்த்து பிசையவும். தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
பின்பு சிறிய உருண்டையாக எடுத்து மெல்லிய சப்பாத்தியாக உருட்டி எடுக்கவும்.
தோசைக்கல்லில் போட்டு இரு புறமும் திருப்பி 3/4 பாகம் வேக விட்டு எடுக்கவும்.
அதன் மேல் கறியை வைத்து தபால் உறைபோல் மடித்து மீண்டும் தோசைக்கல்லில் போட்டு திருப்பி சிறிதளவு எண்ணெய் விட்டு பொன்னிறமாகவர எடுக்கவும். இதே போல் முழுவதையும் செய்யவும்.


வெளியூர் அல்லது பிக்னிக் போன்ற இடங்களுக்குப் போகும் போது செய்து கொண்டு செல்லக் கூடிய இலகுவான உணவு இந்த பாசல் ரொட்டி.
சிறுவர்களுக்கு கறிக்குப் பதிலாக சீஸ் வைத்து செய்து கொடுக்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

வத்ஸ் நல்லா இருந்திச்சு ஆனா எனக்கு இந்த தபால் உறைபோல மடிக்கத்தெரியவில்லை ஒரு என்வலப்பை கிழித்து பாத்து அதேபோல மடிச்சேன் ஆனாலும் எனக்கு வரேல்ல.சுவை சூப்பர் குறிப்புக்கு நன்றீ

சுரேஜினி

சுரேஜினி, உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.ஏன் என்வலப்பை கிழித்து கஸ்டப்பட்டு இருக்கிறீர்கள்.சும்மா உங்களுக்கு தெரிந்த முறைப்படி மடித்திருக்கலாம் தானே?

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"