ராகி பானம்

தேதி: April 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (3 votes)

 

ராகி பவுடர் - இரண்டு தேக்கரண்டி
பால் - முக்கால் டம்ளர்
தண்ணீர் - 1 1/2 டம்ளர்
சர்க்கரை - நான்கு தேக்கரண்டி
ஏலக்காய் - ஒன்று
நெய் - ஒரு சொட்டு
சஃப்ரான் - நான்கு இதழ்


 

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து சுண்ட காய்ச்சிக் கொள்ளவும்.
டம்ளரில் முக்கால் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ராகி மாவை போட்டு கலக்கிக் கொள்ளவும்.
கலக்கி வைத்திருக்கும் ராகி மாவை வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டியில் இருக்கும் கப்பியை எடுத்து மீண்டும் முக்கால் டம்ளர் தண்ணீரில் கலந்து அதே போல் மீண்டும் வடிகட்டவும்.
வடிகட்டிய ராகி மாவை அடுப்பில் வைத்து ஏலக்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து காய்ச்சவும்.
ராகி மாவு நன்கு வெந்து கொதித்து பொங்கி வரும் வரை காய்ச்சவும்.
கரண்டியால் ஒரு முறை கலக்கி விட்டு அதில் பாலை சேர்க்கவும்.
அதனுடன் சஃப்ரான் மற்றும் ஒரு சொட்டு நெய் சேர்த்து கலந்து சூடாக பரிமாறவும்.
சுவையான தெம்பான ராகி பானம் ரெடி. அறுசுவையில் 500க்கும் மேற்பட்ட சமையல் குறிப்புகள் மற்றும் பயனுள்ள வீட்டு உபயோகக் குறிப்புகள் கொடுத்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள <b> திருமதி. ஜலீலா </b> அவர்கள் நேயர்களுக்காக செய்து காட்டியுள்ள குறிப்பு இது.

மூன்று மாத‌ குழ‌ந்தை முத‌ல் வ‌யதான‌வ‌ர்க‌ள் வரை குடிக்கும் ச‌த்தான‌ தெம்பான‌ பான‌ம் இது. பால் நிறைய‌ க‌ல‌ந்து த‌ண்ணீர் கொஞ்ச‌மாக க‌ல‌ந்தும் காய்ச்ச‌லாம். குழ‌ந்தைக‌ளுக்கு வ‌யிறு ச‌ரியில்லாத‌ நேர‌ம் லூஸ் மோஷ‌ன் ஆகும் போது ரொம்ப‌ தெம்பில்லாம‌ல் இருப்பார்க‌ள் அந்த‌ நேர‌த்திலும் கொடுக்க‌லாம். தின‌ம் காலை டீ காப்பிக்கு ப‌திலாக‌வும் குடிக்க‌லாம். ட‌ய‌ட்டில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு இது ஒரு ந‌ல்ல‌ பான‌ம். நெய் தேவையில்லை என்றால் சேர்க்க‌ அவசியமில்லை. குழ‌ந்தைகளுக்கு (த‌னியா சிறிது கோதுமை மாவு, அரிசி மாவு, பாதா‌ம் ப‌வுட‌ர்) எல்லாம் சேர்த்து க‌ல‌ந்து வைத்து ராகி காய்ச்சும் போது இந்த‌ க‌ல‌வையை அரை தேக்க‌ர‌ண்டி சேர்த்து கொள்ள‌லாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பரான ஹெல்தியான குறிப்பு இது.நான் இத்துடன் சிறிது கோதுமைமாவு சேர்த்து செய்வேன்.
சவுதி செல்வி

சவுதி செல்வி

ragi endral kelvaragu dhana

நல்ல ஆரோகியமான ராகி பானம் நன்றி அக்கா

ஜலிலாக்கா நலமா?பிள்ளைகள் பரீட்சை நன்றாக எழுதினாங்களா?இன்னிக்கு என் மகளுக்கு உங்க ராகி பானம் செய்து குடுத்தேன்.நல்லா விரும்பி குடித்தாங்க.நன்றி ஜலிலாக்கா!!

ஹாய் ஜலீலா மேடம்
ராகி என்றால் என்ன? இது பாலுக்கு பதிலா குடுக்கவா அல்லது சாப்பாட
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

டிய‌ர் சுகா

ராகி என்பது கேழ்வரகு.
குழதைகளுக்கு பாலுக்கு பதில் கொடுக்கலாம்.
சாப்பாடா என்றால் கட்டியா கூழ் போல் காய்ச்சனும்.
கேப்பை கூழ், கேப்பங்கஞ்சி என்றும் சொல்வார்கள்,

Jaleelakamal

டிய‌ர் மேனகா நல்ல இருக்கீங்களா? ஷிவானி குட்டி தத்தி தத்தி நடக்க ஆரம்பிச்சாசா?

ராகி பாணம் செய்து பின்னூட்டம் அனுப்பியதற்கு மிக்க நன்றி.
குழந்தைக்கு என்றால் குறிப்பில் கீழே போட்டுள்ளதையும் சேர்த்து காய்ச்சி கொடுங்கள்.

Jaleelakamal

டியர் கோகில வேனி ராகி என்றால் கேழ்வரகு தான்.

டியர் ஈஸ்வரவள்ளி மிக்க நன்றி

Jaleelakamal

சவுதி செல்வி, கீழே குறிப்பில் போட்டுள்ளேன் பாருஙக்ள் கோதுமை மாவு சேர்த்து செய்யனும் என்று.

இது என் பிள்ளைகளுக்கு குழந்தையாக இருந்த போதிலிருந்து எல்லாம் பவுடரும் மிக்ஸ் பண்ணி தான் காய்ச்சி கொடுத்தேன்.
நல்ல வெயிட்டும் போடும். இப்ப வளர்ந்தாச்சு பிளெயினாக காய்ச்சி கொள்கிறேன், இது இரவில் கொடுக்க கூடாது சளி பிடிக்கும் என்பார்கள், காலையில் காய்ச்சும் போதே சாஃப்ரான் சேர்த்து கொள்வேன் அது சலி பிடிக்காமல் இருக்க

Jaleelakamal

நன்றி ஜலீலா மேடம்.
அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

அன்பு தோழி
சுகா
நட்புக்கு ஈடு எது இந்த உலகத்தில்...?

What is this சஃப்ரான். Please Clear it.

சாப்ரான் என்றால் = குங்குமபூ சளியை கட்டுபடுத்தும்.

Jaleelakamal