வெந்தய மாவு

தேதி: April 17, 2009

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெந்தயம் - 1 டம்ளர்
புழுங்கலரிசி - 1/4 டம்ளர்
கருப்பட்டி அல்லது பனவெல்லம் - 300 கிராம்
நல்லெண்ணெய் - 1/2 டம்ளர்


 

வெந்தயத்தை கடாயில் போட்டு சிவக்காமல் வாசனை வரும் வரை வறுக்கவும்.
அரிசியையும் சூடான கடாயில் போட்டு பொரியும் வரை வறுத்து ஆறவிட்டு மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும்.
கருப்பட்டி அல்லது வெல்லத்தை கத்தியால் சீவவும்.
பொடித்த மாவில் தூள் செய்த கருப்பட்டி அல்லது வெல்லத்தை சேர்த்து சப்பாத்தி மாவு போல் தேய்த்து பிசைந்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து கொள்ளவும்.
கையில் எடுத்துப்பார்த்தால் எண்ணெய் பிசுபிசுப்பு இருக்கவேண்டும். தேவையானால் மேலும் சிறிது நல்லெண்ணெய், கருப்பட்டி சேர்த்துக்கொள்ளலாம்
லேசான கசப்பு சுவையுடன் இருந்தாலும் அதீத சுவையுடன் இருக்கும். உடலுக்கு மிகவும் வலுவூட்டக்கூடியது


வெந்தயத்தை எங்களூர் பகுதியில் உளுவா என்பார்கள். இதனை உளுவா மாவு என்றும் சொல்வர்

மேலும் சில குறிப்புகள்